
மே 9 முதல் 13 வரை, வட அமெரிக்காவில் லிங்கபைரவியை சத்குரு பிரதிஷ்டை செய்தார். டென்னிசியில் உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்சஸ் நிறுவனத்தில் சத்குரு லிங்கபைரவியை பிரதிஷ்டை செய்தார். லிங்கபைரவி, தெய்வீகப் பெண்மை தன்மையின் உச்சபட்ச வெளிப்பாடாகும். பூமியின் மேற்கு அரைக்கோள பகுதியில் இதுபோன்ற தன்மை கொண்ட தேவி பிரதிஷ்டை செய்யப்படுவது இதுவே முதல்முறை.
3,600க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள், சத்குரு பிராண பிரதிஷ்டை நடத்துவதைக் காணும் அரிய பாக்கியத்தைப் பெற்றனர். இது சாதாரண ஒரு கல்லை உயிர்சக்திகளைப் பயன்படுத்தி தெய்வமாக மாற்றும் ஒரு மறைஞான பிரதிஷ்டை செயல்முறையாகும். தேவி அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்சஸ் நிறுவனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். பிரதிஷ்டை தொடங்குவதற்கு முன்பு, சத்குரு மிகுந்த கவனத்துடன் கருவறையை வடிவமைத்தார்.
அமெரிக்காவின் டென்னசியில் உள்ள ஈஷா யோக மையத்தில் குடிகொண்ட தேவி.
பிரதிஷ்டை தொடங்குவதற்கு முன்னதாக, சத்குரு கவனத்துடன் கருவறையைத் தயார் செய்தார்.
நிகழ்ச்சியின் முதல் பகுதியில், முழு ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செயல்முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை சத்குரு வலியுறுத்தினார். “வாழ்க்கையின் நோக்கங்களுக்கு ஏதுவாக, உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் முழுமையாகக் கொடுக்கவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் எதுவும் உருவாக்கப்படாது” என்று சத்குரு குறிப்பிட்டார்.
பைரவி என்பவள் அறிவுபூர்வமாகப் பகுக்கப்பட வேண்டிய தன்மையாக அல்லாமல், முழுமையாகவும் தீவிரமாகவும் உணர வேண்டிய ஒரு உயிருள்ள இருப்பாக இருப்பதை சத்குரு பதிவுசெய்தார். பைரவி ஒரு பெண்; அவளை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது," என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பகுத்தறிவை கடந்து சென்று பைரவியின் சக்தியை அணுகக்கூடியவராக அனைவரும் ஆகவேண்டும் என்று கூறினார்.
லிங்கபைரவியின் முக்கிய அம்சமாக பைரவி ரக்த சுத்தி உள்ளது - மூதாதையரின் மரபணு பதிவுகளிலிருந்து இரத்தத்தை சுத்திகரித்தல். "நீண்ட காலத்திற்கு முன்பு இறந்த பலர் இன்னும் உங்கள் இரத்தத்தில் வாழ்கிறார்கள். நீங்கள் அந்த பதிவுகளை வடிகட்டவில்லை என்றால், உங்கள் வாழ்க்கை என்னவென்று உங்களுக்கு எப்போதும் தெரியாது, ஏனென்றால் உங்களுக்கு முன் வந்தவர்கள் உங்கள் அனுமதியின்றி உங்கள் மூலம் வாழ்கிறார்கள்," என்று சத்குரு கூறினார்.
ஒருவர் தெய்வீகத்தைத் தேடுவதிலிருந்து ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு மாற முயல்வது பற்றி அவர் வலியுறுத்தினார். ஏனெனில், இது இழந்த ஒன்றைக் கண்டுபிடிப்பது பற்றியது அல்ல, ஏற்கனவே இருப்பதை திறப்பது பற்றியது.
நிகழ்வின் இந்த பகுதி, நமக்குள்ளே இருக்கிற செயலற்ற ஆற்றல்களைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறையுடன் நிறைவை அடைந்தது. பெண்மையின் சக்தியையும் கருணையையும் குறிக்கும் இந்த செயல்முறை நமது திறனைத் திறப்பதற்கு அவசியமானது என்று சத்குரு விவரித்தார். “தேவி மரண பயத்தையும் வாழ்க்கையின் நெருப்பையும் ஒரே நேரத்தில் உங்களுக்குள் கொண்டுவருகிறாள்" என்று அவர் விளக்கினார்.
உண்மையான வளர்ச்சி என்பது அனுபவங்களைச் சேகரிப்பதற்குப் பதிலாக மாற்றத்தைத் தேடுவதில் உள்ளது என்பதை வலியுறுத்தி, மேலோட்டமான நோக்கங்களுக்கு அப்பால் பார்ப்பதற்கு, பங்கேற்பாளரிடம் சத்குரு கூறினார். நம் உடல், ஆளுமை, மனம், எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் சக்திநிலைகளை உள்ளடக்கிய இந்த வடிவத்தின் அடிப்படையை மாற்றாமல், உடைமைகளைச் சேர்த்துவைப்பது மற்றும் குறுகியகால சுவாரஸ்யங்களை நாடுவது போன்றவைகளுக்கு எதிராக பேசினார்.
பெண்மையின் மீது ஆழ்ந்த மரியாதை மற்றும் பக்தியின் முக்கியத் தேவையை சத்குரு எடுத்துரைத்தார். மொழியியல் ரீதியான நுண்ணறிவை வழங்கினார். "இந்திய மொழிகளில் வெஜினா எனப்படும் பெண்ணின் பிறப்புறுப்பிற்கென எந்தவொரு வார்த்தையும் இல்லை. யோனி என்ற சொல் கருப்பையைக் குறிக்கும். ஏனெனில் வாழ்க்கையின் புனிதம் ஒரு பெண்ணின் கருப்பையில் உள்ளது." கலாச்சாரத்தையும் விழிப்புணர்வையும் மொழி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
அவரது செய்தி, பெண்களை வெறும் உடல் பாகங்களாக குறுகச்செய்வதை தாண்டிச் செல்லவும், மேலும் நாகரீகமடைந்த உலகத்தை நோக்கிய ஒரு தேவையான படியாக நம் விழிப்புணர்வில் மாற்றம் ஏற்படுவதன் அவசரத்தேவையையும் வலியுறுத்துவதாக அமைந்தது.
“தேவி” என்ற சொல் “வெளி” மற்றும் “புகழ்பெற்றது” என்ற இரண்டு அர்த்தங்களைக் கொண்ட திவ் என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது என்று சத்குரு விளக்கினார். யோக மரபுகளில் ஆகாயம், படைப்பின் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் நாம் அதை பெரும்பாலும் தவறவிடுகிறோம், ஏனெனில் “நமது பார்வை மண்டலமும், நம் மனமும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன,” இதனால் இந்த அடிப்படை யதார்த்தத்தை நாம் தவறவிடுகிறோம். “படைப்பு மிக விசித்திரமானது,” என்று வலியுறுத்திய அவர், “நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் அதை தவறவிடுகிறீர்கள், அவ்வளவுதான்,” என்றார்.
திரிசூலத்தின் ஆழமான அம்சத்தை சத்குரு ஆராய்ந்தார். இது வாழ்க்கையின் மூன்று அடிப்படை அம்சங்களைக் குறிக்கிறது - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். மாற்றத்திற்கான திறவுகோல் கடந்த கால அனுபவங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் உள்ளது: “நமக்கு எந்த வகையான அனுபவங்கள் இருந்தாலும், அது நாம் நமக்குள் மலருவதற்கு எருவாக மாறுமா, அல்லது அந்த எருவில் மூழ்கி நாமும் எருவாக மாறுவோமா?
இதுதான் நமக்கு இருக்கும் தேர்வு.” பங்கேற்பாளர்கள் தங்களின் பிழைப்பு செயல்முறையின் தரங்களை வரையறுக்கவும், வெளியிலிருந்து வரும் முடிவில்லாத குவியலிலிருந்து விலகி வாழ்க்கையின் ஆழ்ந்த தன்மையில் கவனம் செலுத்தவும் கூறிய சத்குரு, வாழ்வின் உண்மையான இயல்பை அவர்களுக்கு நினைவூட்டினார்: "நீங்கள் குழந்தையாக இருந்தபோது, எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்... அதுதான் வாழ்க்கையின் இயல்பு."
தேவி கோவிலுக்கு எள்ளை அர்ப்பணிக்கும் ஒரு புனித செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, சக்திவாய்ந்த மந்திரங்களுடன் சத்குரு நிகழ்ச்சியை தொடங்கினார்.
பல்வேறு கலாச்சாரங்களில் தேவி வழிபாட்டில் பாம்பு அடையாளங்கள் இருப்பதைப் பற்றி சத்குரு கூறினார். "ஒரு பாம்பு, குறிப்பாக நாகம், கிரகிப்புத் தன்மையின் உச்சமாகக் காணப்படுகிறது," என்று அவர் விளக்கினார். பிரதிஷ்டைகளின் போது நாகப்பாம்புகள் வருவது பற்றிய நிகழ்வுகளைப் பகிர்ந்த அவர், சக்திவாய்ந்த சூழல்களை உணரும் அவற்றின் திறன் பற்றி கூறினார்.
தேவி கோவிலின் நோக்கம் உடல் மற்றும் உளவியல் ரீதியான முழுமை உணர்வை உள்ளடக்கியது என்பதை விளக்கிய அவர், சர்ப்ப சேவை மற்றும் பூமி சேவை போன்ற செயல்முறைகளை அறிமுகப்படுத்தினார். சரணடைதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சத்குரு, "நீங்களே ஒரு தடையாக இருந்தால், என்ன செய்வது? அதனால்தான் நீங்கள் கேட்பதெல்லாம், 'தேவி, என்னை உங்களில் ஒரு பகுதியாக ஆக்குங்கள்' என இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
லிங்கபைரவி கோவிலில் முதல் பௌர்ணமி புத்த பௌர்ணமி நாளாக அமைந்தது. இது புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பை நினைவுகூறும் நாளாகும்.
பைராகிணி மா'க்கள் புனித சடங்கில் பங்கேற்கும் பக்தர்களுடன் விரிவான பௌர்ணமி அபிஷேகத்தை நிகழ்த்தினர்.
ஒவ்வொரு முழுநிலவு தினங்களிலும் பௌர்ணமி அபிஷேகம் நடத்தப்படும்.
இரவு உணவுக்குப் பிறகு, மஹிமாவில் பங்கேற்பாளர்கள் கொண்டாட்டத்திற்காக கூடினர். "தேவி இன்றிரவு நீங்கள் விரும்பும் வரை தரிசனத்திற்காக திறந்திருப்பாள்" என்று சத்குரு அறிவித்தார்.
பக்தியும் தெய்வீகமும் எவ்வாறு பெரும்பாலும் தவறாக சித்தரிக்கப்படுகின்றன என்பதை சத்குரு எடுத்துரைத்தார். "தெய்வீகத்தின் பாதையில் இருப்பதாகக் கூறுபவர்கள் பொதுவாக முட்டாள்கள் என்ற கருத்தை பல மதங்களை சார்ந்தவர்கள் உருவாக்கியுள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தை எதிர்க்கும் விதமாக, சத்குரு, “பக்தியை மிகவும் விவேகமான, உற்சாகமான, மகிழ்ச்சியான மற்றும் பேரின்பமான முறையில் முன்வைப்பது நமது பொறுப்பாகும், ஏனென்றால் மக்கள் உங்களைப் பார்த்தால், அவர்கள், ‘உங்களுக்கு என்ன ஆயிற்று? நானும் இப்படி இருக்க விரும்புகிறேன்’ என்று கேட்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
நமக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்: “இவை என்னைத் தீர்மானிப்பதில்லை, நான் தீர்மானிக்கிறேன். தெய்வீகத்துடன் நடப்பது என்பது இதுதான்: நான் இப்போது எப்படி இருக்கிறேன் என்பதை நானே தீர்மானிப்பேன்.”
மேலும் “தெய்வீகப் பெண் தன்மையை நிறுவுவது உலகின் இந்தப் பகுதிக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் அது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததைப் போல, உலகில், குறிப்பாக அமெரிக்காவில் தெய்வீகப் பெண் தன்மையை அங்கீகரிக்கும் ஒரு காலம் மீண்டும் வந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டார், “இது உலகில் நிகழத் தேவையுள்ளது” என்ற வார்த்தைகளுடன் முடித்தார்.
பிரதிஷ்டையின் ஆழமான முக்கியத்துவத்தை, சத்குரு X-ல் பகிர்ந்துகொண்டார்:
“பெண் தன்மை என்பது உங்களின் அழகியலான, அன்பான மற்றும் தீவிரத்தன்மையான அம்சமாகும். ஆண் தன்மை என்பது கட்டுப்பாடு, திறமை, பிழைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செய்யும் அம்சமாகும். இரண்டும் ஒரே அளவுக்கு முக்கியமானவை. ஆனால் இப்போது, நம் பிழைப்பு செயல்முறை முன்பை விட சிறப்பாக ஒருங்கமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்தன்மையை சற்று தளர்த்தி பெண்தன்மையை அதற்கு ஈடாக உயர்த்த வேண்டிய நேரம் இது. பெண்தன்மையை ஆண்தன்மைக்கு ஓரளவிற்காவது சரிசமமாக நாம் கொண்டுவராவிட்டால், சமநிலையான ஒரு சமூகம் இருக்காது - நாம் பூமியின் முடிவு வரை சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். தெய்வீகப் பெண்தன்மையின் எழுச்சி நடந்தால், பல வகைகளில் மோதலுக்கான தேவை குறைந்துவிடும்.”
டென்னசி, ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவில் இப்போது அனைவருக்கும் திறந்திருக்கிறது.