ஈஷா சமையல்

கேரட், ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழ சாலட்

4 பேருக்கு பரிமாறும் அளவு

தேவையான பொருட்கள்:

4 நடுத்தர அளவுள்ள கேரட்
4 சிறிய ஆப்பிள்
12–16 பேரீச்சம்பழம்
¾ கப் துருவிய தேங்காய்
¾ கப் வறுத்த நிலக்கடலை, உடைக்கப்பட்டவை

டிரெஸ்ஸிங்கிற்கு:

4 டீஸ்பூன் ஆரஞ்சு சாறு
4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
4 மேசைக்கரண்டி தேன்
4 மேசைக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
சுவைக்கேற்ப உப்பு
பொடிக்கப்பட்ட கருப்பு மிளகு (விரும்பப்பட்டால்), சுவைக்கேற்ப

வழிமுறைகள்

1. கேரட்டை அதன் தோலை சீவி அதைத் துருவவும்.

2. ஆப்பிளை நீளமாக நறுக்கவும் (விரும்பப்பட்டால் தோலை சீவிக்கொள்ளலாம்).

3. பேரீச்சம்பழங்களை விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

4. ஒரு பெரிய கிண்ணத்தில், துருவிய கேரட், துண்டுகளாக நறுக்கப்பட்ட ஆப்பிள்கள், நறுக்கிய பேரீச்சம்பழம், துருவிய தேங்காய் மற்றும் வறுத்து உடைத்த நிலக்கடலை ஆகியவற்றை சேர்க்கவும்.

5. ஒரு தனி கிண்ணத்தில், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, தேன், எண்ணெய், உப்பு மற்றும் விருப்பப்பட்டால் மிளகு ஆகியவற்றை ஒன்றாக அடித்து டிரஸ்ஸிங் தயார்செய்யுங்கள்.

6. கேரட் கலவையில் டிரஸ்ஸிங்கைச் சேர்த்து, எல்லாம் சமமாக பரவும் வரை நன்றாக கிளறவும்.

7. இனிப்பாக மொறுமொறுப்பாக சுவைத்திட உடனடியாக பரிமாறவும்.

குறிப்புகள்:

• சிறந்த பக்குவத்திற்கு கொண்டுவர, மொறுமொறுப்பான ஆப்பிள்களைப் பயன்படுத்தவும் - அவை அவற்றின் வடிவத்தைத் தக்கவைத்து, சாலட்டுக்கு புத்துணர்ச்சியூட்டும் மொறுமொறுப்பைச் சேர்க்கிறது.
• உங்களிடம் பச்சை வேர்க்கடலை மட்டும் இருக்கிறதென்றால், அவற்றை வாணலியில் மிதமான தீயில், பொன்னிறமாகவும் நறுமணம் வரும் வரை வறுக்கவும். சாலட்டில் சேர்ப்பதற்கு முன் அவற்றை ஆறவைக்கவும்.
• விருப்பப்பட்டால், ஆப்பிள்கள் பழுப்பு நிறமாக மாறுவதைத் தடுக்க துண்டுகளாக்கப்பட்ட ஆப்பிள்களை சிறிது எலுமிச்சைச் சாறுடன் சேர்த்துக் கலக்கவும்.