நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

டென்னசியில் இருந்து டொராண்டோ வரை: ஒரு அற்புதமான பைக் பயணத்தில் மீண்டும் சத்குரு

மே 19, 2025

டென்னசியில் உள்ள ஈஷா யோக மையத்திலிருந்து, மிச்சிகனின் டெட்ராய்ட் வழியாக, கனடாவின் டொராண்டோ வரை, 800 மைல் தூரத்திற்கு ஒரு அற்புதமான பைக் பயணத்தை சத்குரு மேற்கொண்டார். CIF குளோபல் இந்தியன் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காகவும், Soak in Ecstasy of Enlightenment நிகழ்ச்சியை நடத்துவதற்காகவும் சத்குரு அங்கு சென்றடைந்தார்.

சத்குருவிற்கு கனடா இந்தியா அறக்கட்டளையின் 2025ம் ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது

மே 22, 2025

கனடா இந்தியா அறக்கட்டளை (CIF), சத்குருவிற்கு குளோபல் இந்தியன் விருது 2025ஐ வழங்கி கௌரவித்தது. குறிப்பிடத்தக்க உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களை இவ்விருது அங்கீகரிக்கிறது.

இந்த விருதுடன், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு C$50,000 நன்கொடையை CIF வழங்கியது. இவ்வியக்கம், 52 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மரம்சார்ந்த விவசாயத்தை மேற்கொள்வதற்கும், 242 கோடி மரங்களை நடுவதற்கும் துணைநிற்பதன் மூலம், காவேரி நதிப்படுகையை புத்துயிர்பெறச் செய்வதற்கான விவசாயிகளால் செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் இயக்கமாகும். சுற்றுச்சூழலில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் இவ்வியக்கம், நதி புத்துயிராக்கத்திற்கான அரசாங்கக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும் இது, விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒரு சக்திவாய்ந்த பொருளாதார மாதிரியை வழங்குகிறது.

விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு, சத்குரு ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்கள் தங்கள் உள்நிலை நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நமது உள்நிலையை துயரமாக வைத்திருப்பதற்குப் பதிலாக ஆனந்தமாக வைத்திருப்பதற்கு, விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்கும் தனித்துவமான திறன் மக்களுக்கு இருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். ஆனால் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்வைச் செய்வதில் தவறிவிடுகிறார்கள் என்பதை அவர் பதிவுசெய்தார்.

மனநலனில் அதிகரித்துவரும் நெருக்கடி பற்றிக் கூறும்போது, குறிப்பாக இளைஞர்களிடையே ஆபத்தான தற்கொலை விகிதங்களை எடுத்துக்காட்டி, அதற்கான நடைமுறை தீர்வாக, இலவசமாக வழங்கப்படும் "மிராக்கிள் ஆஃப் மைண்ட்" Appஐ அவர் அறிமுகப்படுத்தினார், உள்நிலை நல்வாழ்வை வளர்ப்பதற்கு தினமும் ஏழு நிமிடங்கள் பயிற்சி செய்வதற்கு அவர் ஊக்குவித்தார்.

இந்த நிகழ்வைப் பற்றி சத்குரு, X தளத்தில் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: “கனடா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு இந்திய சமூகத்தின் பங்களிப்பைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அன்புக்கும் உபசரிப்புக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அன்பும் ஆசிகளும் - சத்குரு