ஈஷா சமையல்

மாம்பழம் தேங்காய் சியா புட்டிங்

நான்கு பேருக்கு

தேவையான பொருட்கள்

2 கப் கெட்டியான தேங்காய் பால்

4 மேஜைக்கரண்டி சியா விதைகள்

2-4 மேஜைக்கரண்டி தென்னஞ்சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் (தேவைக்கேற்ப)

4 பழுத்த மாம்பழம்

விருப்ப அலங்காரப் பொருட்கள்:  புதினா இலைகள், துருவிய எலுமிச்சை தோல் அல்லது வறுத்த தேங்காய் துருவல்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் தேங்காய் பாலுடன் சியா விதைகளை சேர்க்கவும். உங்களுக்கு பிடித்த சர்க்கரையை (தென்னஞ்சர்க்கரை, வெல்லம், அல்லது தேன்) தேவைக்கேற்ப சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை, சியா விதைகளை கட்டி விழாமல் நன்றாக கலக்கவும். மூடி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம், அல்லது இரவு முழுவதும் கலவை கட்டியாகும் வரை வைக்கவும்.
  • கட்டியான புட்டிங்கை எடுத்துக்கொள்ளவும். நான்கு மாம்பழங்களின் தோலை உரித்து அவற்றில் இரண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும். மற்ற இரண்டு மாம்பழங்களை மிக்ஸியில் போட்டு அடித்து கூழாக்கவும்.
  • நான்கு கோப்பைகளில் அடியில் மாம்பழக் கூழை ஒரு அடுக்கு இட்டு நிரப்பவும். ஒரு அடுக்கு சியா புட்டிங்கை சேர்க்கவும், அதன் மேல் நறுக்கிய மாம்பழங்களை மேல் அடுக்காக வைக்கவும். தேவைப்பட்டால் மீண்டும் இந்த அடுக்குகளை தொடரவும்.
  • விருப்பப்பட்டால் புதினா இலை, எலுமிச்சை துண்டு அல்லது வறுத்த தேங்காய் கீற்றுகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
  • காலை சிற்றுண்டியாக அல்லது ஆரோக்கியமான இனிப்பு வகையாக பரிமாறவும்.

குறிப்பு:

சியா விதைகள் ஊட்டச்சத்தின் சக்தி மையம் - ஃபைபர் நிறைந்தது, செடிகளில் இருந்து வரும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது, புரதம் நிறைந்தது, ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களான கால்சியம் மெக்னீசியம் போன்றவை நிறைந்தது. இவை ஜீரணத்திற்கு துணை நிற்கும், இதய ஆரோக்கியத்தை காக்கும், மற்றும் நிலையான சக்தியை கொடுக்கும், அதனால் இது எந்த ஒரு உணவுடனோ, அல்லது சிற்றுண்டியுடனோ சேர்த்துக்கொள்ள சிறந்தது.