நான் அன்பு அல்ல
நான் கருணையும் அல்ல
நான் வெறும் உயிர் மட்டுமே
முழுமையான உயிர்
உங்களைத் திறந்து உயிரையும்
உயிராக இருக்கும் அனைத்தையும் பாருங்கள்
அப்போது உங்களுக்கு அன்போ கருணையோ குறித்த
போதனை தேவைப்படாது
பூமித்தாய் தன் நெஞ்சில் உங்களைச் சுமக்கும் விதமே
நிபந்தனையற்ற அன்பு
எல்லையற்ற இந்த அண்டம் பூமியைச் சுமக்கும் விதமே
எல்லையற்ற கருணை
நீங்கள் நடமாடும் மண்
நீங்கள் உயிர்வாழ ஊட்டமளிக்கிறது,
கண்ணுக்குத் தெரியாத காற்று
உங்கள் உயிர்மூச்சாக இருக்கிறது
உங்களுக்கு அன்பும் கருணையும் குறித்த பாடங்கள் தேவையா
உங்கள் நாடகத்தை விட்டுவிட்டு உயிராய் ஆகுங்கள்