ஈஷா சமையல்

புத்துணர்வூட்டும் சுவையான சிட்ரஸ் சாலட்

4 பேருக்கு பரிமாறும் அளவு

தேவையான பொருட்கள்

சாலட்டுக்கு:

3 ஆரஞ்சுப்பழம்

1 நடுத்தர பம்ப்ளிமாஸ் பழம்

½ நடுத்தர மாதுளையின் விதைகள்

1 நடுத்தர அளவுள்ள சோம்புச் செடியின் கிழங்கு (fennel bulb) அல்லது 2 செலரி தண்டுகள் அல்லது 1 நடுத்தர டர்னிப்

4 கப் சாலட் கீரை இலைகள்

1 பேரிக்காய் (அல்லது 1 ஆப்பிள்)

அழகுபடுத்த புதினா இலைகள் (விரும்பினால், கிடைத்தால்)

சாஸ் செய்வதற்காக:

4 மேசைக்கரண்டி எக்ஸ்ட்ரா-வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்

3 மேசைக்கரண்டி புதிதாக எடுக்கப்பட்ட ஆரஞ்சு சாறு

சுவைக்கேற்ப மிளகாய் வற்றல்

சுவைக்கேற்ப உலர்ந்த ஆர்கனோ

புதிதாக பொடிசெய்யப்பட்ட கருப்பு மிளகுத்தூள்

சுவைக்கேற்ப உப்பு

செய்முறை:

1. சிட்ரஸ் பழத்தை தயார் செய்தல்:

ஒரு கட்டிங் போர்டில், ஒவ்வொரு சிட்ரஸ் பழத்தின் இரு முனைகளையும் நறுக்கவும். கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி, பழத்தின் தோலையும் வெள்ளைப் பகுதியையும் அகற்றவும்.

பம்ப்ளிமாஸ் பழத்தை 7-8 மிமீ தடிமன் கொண்ட மெல்லிய அரைக்கோளமாக வெட்டவும்.

ஆரஞ்சுப் பழங்களை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.

2. காய்கறிகள் மற்றும் பழங்களைத் தயார் செய்தல்:

சோம்புச் செடியின் கிழங்கை மெல்லியதாக நறுக்கவும் அல்லது செலரி அல்லது டர்னிப்பை நறுக்கி வைக்கவும்.
பேரிக்காய் அல்லது ஆப்பிளை மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கவும். பழுப்பு நிறமாவதைத் தடுக்க, துண்டுகளாக வெட்டப்பட்ட உடனேயே எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையில் அவற்றை நனைக்கவும்.

3. சாஸ் தயாரித்தல்:

ஒரு சிறிய கிண்ணத்தில், ஆலிவ் எண்ணெய், ஆரஞ்சு சாறு, மிளகாய் வற்றல் துகள்கள், ஆர்கனோ, கருப்பு மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

4. சாலட்டை ஒருங்கிணைத்தல்:

ஒரு பெரிய பரிமாறும் தட்டில், சாலட் கீரை இலைகளை கீழ் அடுக்காக அமைத்து ஆரம்பிக்கவும். சோம்புச் செடியின் கிழங்கு (அல்லது செலரி / டர்னிப்) துண்டுகளை கீரைகளின் மேல் அடுக்கவும்.  

மேலே சிட்ரஸ் பழங்களின் துண்டுகள் மற்றும் பேரிக்காய்/ஆப்பிள் துண்டுகளை வைக்கவும். மாதுளை விதைகளை மேலே தூவவும்.

5. சாலட்டை அலங்கரித்தல்:

சாலட்டின் மீது சாஸை சமமாக ஊற்றவும்.

6. நிறைவு செய்து பரிமாறுதல்:

மிளகுத்தூள், மிளகாய் வற்றல் துகள்கள், ஆர்கனோ மற்றும் உப்பு ஆகியவற்றை, சாஸ் ஊற்றப்பட்ட சாலட்டின் மீது தூவுவதன் மூலம் ருசியை விருப்பத்திற்கேற்ப சரிசெய்துகொள்ளலாம்.

விரும்பினால், புதிய புதினா இலைகளால் அலங்கரிக்கவும்.

சாலட் புதிதாக இருக்கும்போது உடனடியாக பரிமாறி, சுவைத்து மகிழவும்.