இன்றைய தேடல்

ஞானோதயத்தின் பேரின்பம்: இது ஏன் நமது பார்வையில் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது

அண்மையில் நடைபெற்ற ஒரு தரிசனத்தின்போது, "ஞானோதயத்தின் பேரின்பம்" என்ற நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு சத்குரு நம் காலத்தைப் பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையை முன்வைத்தார்.
40 ஆண்டுகால அனுபவத்தில் இருந்து, ஆன்மீகத் தேடலில் ஏற்பட்டுள்ள ஒரு கணிசமான மாற்றத்தை அவர் கோடிட்டு காட்டுகிறார் - முன்பெல்லாம் பெரும்பாலானோர் உடல்சார் தீர்வுகளைத் தேடி வந்த நிலையில் இருந்து, இன்று பெரும்பான்மையானவர்கள் ஆழமான பரிமாணம் பற்றிய கேள்விகளுடன் வருகிறார்கள். தமக்கே உரித்தான நகைச்சுவையும் ஞானமும் கலந்த பாணியில், இந்தப் பரிணாம வளர்ச்சி நமது கூட்டு விழிப்புணர்வைப் பற்றி வெளிப்படுத்துவது என்ன என்பதை சத்குரு நினைவுகூருகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு. The Ecstasy of Enlightenment நிகழ்ச்சிக்காக நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். அந்நிகழ்ச்சி எதைப் பற்றியது?

உள்ளார்ந்த பேரானந்தத்தை விழித்தெழச் செய்தல்

சத்குரு: நான் என்னுள் பேரானந்த நிலையை அடைந்த நாளிலிருந்து, என்னைச் சுற்றியுள்ள மக்களையும் அந்த அனுபவத்தைப் பெற வைக்க முயன்று வருகிறேன். உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், ஆனந்தம், அன்பு மற்றும் பரவசத்தின் கண்ணீரைக் காணாமல் ஒரு நாளைக் கூட கடந்ததில்லை. இதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். The Ecstasy of Enlightenment நிகழ்ச்சியும் அந்த திசையில் மற்றொரு முயற்சிதான். என் வாழ்நாள் குறைந்து வருவதால், இப்போது நான் வெளிப்படையாக "ஞானோதயம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

1982-1983ல் நான் முதன்முதலில் கற்பிக்க தொடங்கிய போது, என்னுள் நடந்து கொண்டிருந்ததைப் பகிர முயற்சிக்கையில், 80 முதல் 85 சதவீத மக்கள் உடல் நோய்களால் வந்தார்கள் என்பதைக் கண்டேன். சிலருக்கு இதய பிரச்சனைகள் இருந்தன, குறிப்பாக மைசூர் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் ஆஸ்துமா பரவலாக இருந்தது.

நான் என்னுள் பேரானந்த நிலையை அடைந்த நாளிலிருந்து, என்னைச் சுற்றியுள்ள மக்களையும் அந்த அனுபவத்தைப் பெற வைக்க முயன்று வருகிறேன்.

இன்று, சமுதாயத்தில் ஒரு அற்புதமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இன்றைய காலத்தில் வெறும் 8 முதல் 12 சதவீத மக்கள் மட்டுமே உடல் நோய்களால் வருகிறார்கள். கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் ஏதோ தெரிந்துகொள்ள வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும், தங்கள் வாழ்க்கையில் ஏதாவது நடக்க வேண்டும் என்பதற்காக வருகிறார்கள்.

"என் முதுகுவலி போக வேண்டும்" என்று நினைத்த தலைமுறையில் இருந்து, "என் முதுகைப் பற்றி கவலையில்லை; நான் மேலும் ஏதாவது தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்று நினைக்கும் நிலைக்கு மாறியிருப்பது மிகப்பெரிய மாற்றம். "முதுகுவலிக்கு நான் டாக்டரிடம் செல்வேன். சத்குரு, எனக்கு வேறு ஏதாவது கொடுங்கள்."

உங்கள் உள் வேதியியலின் மேல் ஆளுமை செலுத்துதல்

நீங்கள் பரவசத்தைப் பற்றி பேசும்போது, மக்கள் நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக நினைக்கலாம். நீங்கள் அவர்களிடம் "ஆம்" என்று சொல்லலாம், ஏனெனில் மனித உடலைவிட பெரிய இரசாயனத் தொழிற்சாலை இந்த பூமியில் வேறு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தால், உங்களுக்கு வேண்டிய எதையும் அதிலிருந்து உங்களால் உற்பத்தி செய்ய முடியும்.

நீங்கள் பரவசத்தைப் பற்றி பேசும்போது, மக்கள் நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக நினைக்கலாம். நீங்கள் அவர்களிடம் "ஆம்" என்று சொல்லலாம், ஏனெனில் மனித உடலைவிட பெரிய இரசாயனத் தொழிற்சாலை இந்த பூமியில் வேறு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தால், உங்களுக்கு வேண்டிய எதையும் அதிலிருந்து உங்களால் உற்பத்தி செய்ய முடியும்.

மனித உடலைவிட பெரிய இரசாயனத் தொழிற்சாலை இந்த பூமியில் வேறு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தால், உங்களுக்கு வேண்டிய எதையும் அதிலிருந்து உங்களால் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த மாதிரியான தவறான நிர்வாகத்திற்கு நீங்கள் அதிகம் பழகிவிட்டதால், இது சரியானதுதான் என்று நினைக்கிறீர்கள். நடக்க வேண்டியது நடக்காமல், மாறாக வேறு ஏதோ நடந்து கொண்டிருக்கும்போது, அது எப்படி சரியாக இருக்க முடியும்? உங்கள் வணிகம், தொழில் அல்லது வீடு, நீங்கள் விரும்பும் முடிவுகளை தரவில்லை என்றால், அது "நட்சத்திரங்கள் சரியில்லை" என்று அர்த்தமா, அல்லது நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியா?

நீங்கள் எடுக்க வேண்டிய முதல் படி என்னவென்றால், எது நடந்தாலும் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்வதுதான். அப்போதுதான் நாளை உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக உருவாக்க நியாயமாக எதிர்பார்க்க முடியும். விஷயங்கள் தவறாகப் போகும்போது நீங்கள் பொறுப்பேற்காத வரை, சரியான விஷயங்கள் ஒருபோதும் நடக்காது. நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தால், அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும்.

தீவிரத்தின் சுடரை ஏற்றுதல்

நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான விஷயம் அசைவற்று இருப்பது; ஆரம்பத்தில் உடல்ரீதியாக, பின்னர் மெதுவாக அனைத்து நிலைகளிலும். உங்களுக்குள் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் - உடலியல் ரீதியாக, இரசாயன ரீதியாக, மனரீதியாக, மற்றும் சக்திரீதியாக - மாயைகள் தோன்றுகின்றன.

யோக அறிவியலின் மூலம் இந்த செயல்முறை முழுவதையும் மிகவும் விரிவாக செய்யமுடியும், உங்கள் சுண்டுவிரலில் இருந்து அனைத்தையும் அந்த நோக்கத்தில் எப்படி செயல்படுத்துவது என்பதற்கான ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அறிவியலும் வழிமுறைகளும் ஓர் அதிசயமான சாத்தியம் இல்லாதபோது முக்கியமானவை. ஆனால் இப்போது நீங்கள் அந்த முறைகளின்படி போகக்கூடாது. ஒரு சத்குரு உங்களுடன் இருக்கும்போது, உங்கள் தீவிரத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள், மற்றதை கவனித்துக்கொள்ள முடியும். நீங்கள் மிகவும் சிதறியிருக்காதபோது வாழ்க்கையில் தீவிரம் எழுகிறது. நீங்கள் மிகவும் சிதறியிருந்தால், தீவிரமாக இருக்க போதுமான சக்தி உங்களுக்கு இருக்காது.

ஒரு சத்குரு உங்களுடன் இருக்கும்போது, உங்கள் தீவிரத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள், மற்றதை கவனித்துக்கொள்ள முடியும்.

உங்கள் தேடல் ஞானோதயம் என்றால், முதலில் உங்கள் சொந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில் தொடங்குங்கள். இப்போது உங்கள் கவனம் சமூகத்தைப் பற்றியதாக இருக்கிறது: மற்றவர்களை விட சிறந்த கார், வீடு, அல்லது ஆடைகளை வாங்க விரும்புகிறீர்கள் - இது முடிவில்லாமல் தொடர்கிறது. ஆனால் உங்களை உயிராகப் பார்த்தால், இந்த உயிருக்கு என்ன வேண்டும்? உங்களுக்குள் சிறிது நிச்சலனத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே இதைப் பார்க்க முடியும். இல்லையெனில், ஒவ்வொரு மாயையும் உங்களுக்கு முற்றிலும் உண்மையாகத் தெரியும்.

சந்தை மனப்பான்மையை கடந்து செல்லுதல்

உங்களை மேம்படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உயிரின் இயல்பு, திறன் மற்றும் அது எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணராவிட்டால், நீங்கள் வெறும் உடலாக மட்டுமே வாழ்கிறீர்கள் - சாப்பிடுதல், தூங்குதல், இனப்பெருக்கம் செய்தல், மற்றும் ஒருநாள் இறத்தல். இவற்றில் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் இவை உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாக மாறக்கூடாது. பரிணாம நிலையில் இவற்றுக்கு அப்பால் பார்க்கத் தேவையான விழிப்புணர்வும் அறிவும் கொண்ட இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், வாழ்க்கை வீணாகிவிடும். இது தான் உங்களிடம் உள்ளது, எனவே நீங்கள் இதை கவனித்துக்கொள்ள வேண்டும்.

உங்களை மேம்படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உயிரின் இயல்பு, திறன் மற்றும் அது எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணராவிட்டால், நீங்கள் வெறும் உடலாக மட்டுமே வாழ்கிறீர்கள்

உயிரை விட ஏதோ உயர்ந்தது உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் இன்னும் ஒரு உயிர் அல்ல; நீங்கள் ஒரு சந்தை. நமது பயன்பாட்டிற்கு பல பொருட்களை நாம் பெறலாம், ஆனால் அவை நம்மிடம் இருந்தால் நம்மை மேம்படுத்தக் கூடாது, அல்லது அவை இல்லை என்றால் நம்மை தாழ்த்தவும் கூடாது. கேள்வி, எதையாவது அல்லது யாரையாவது நம்முடன் வைத்திருப்பது, அல்லது இல்லாதது பற்றியது அல்ல.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட தீவிர நிலைக்கு வந்தால், சரியான நேரத்தில் நாங்கள் உங்களுக்காக முட்டையை உடைப்போம். தீவிரம் இல்லாதபோது நீங்கள் அதை உடைக்க முயற்சித்தால், அது வீணாகிவிடும். அதிகபட்ச முட்டைகளை உடைப்பதற்காக நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் என்றென்றும் முட்டைக்குள் இருக்க முடியாது - நீங்கள் பொரிந்து வெளிவந்தாக வேண்டும். அப்போது தான் வாழ்க்கை நிகழ்கிறது.