அது புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டமாக அமைந்தது. சத்குருவுடன் ஆண்டின் கடைசி இரவை அனுபவித்திட ஆயிரக்கணக்கானோர் ஆதியோகியின் முன்னிலையில் கூடினர்.
சத்குரு காலம் அல்லது காலா என்ற தன்மை குறித்து பேசினார். வாழ்க்கை அதன் சுழற்சி முறைகளுக்குள் தொடர்ந்து மாறுதலைக் கொண்டிருப்பது குறித்து அவர் விவரித்தார். இந்த சுழற்சிகள் எவ்வாறு மக்களை சிதைக்கவோ அல்லது அவர்களை சலிப்படையச் செய்யவோ அல்லது அவர்களை விடுவிப்பதற்கான வழிகளைத் தேடுவதற்கு தூண்டுவதாகவோ அமையும் என்பதை அவர் விவரித்தார்.
காலா என அழைக்கப்படும் சுழற்சி காலத்திற்கும், மஹாகாலா எனப்படும் காலசுழற்சிக்கு அப்பால் உள்ள பரிமாணத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர் எடுத்துரைத்தார். ஜூலியஸ் சீசரின் சகாப்தத்தில் சர்வதேச நாட்காட்டியின் தோற்றத்தையும் அவர் பேசினார். எகிப்திய முறையிலிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், நவீனகாலக் கணிப்பில் அதன் தாக்கத்தையும் அவர் விளக்கினார்.
பின்னர் அவர் ஜனவரி மாதத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இரண்டு முகம் கொண்ட கடவுளான ஜானஸின் பெயரில் குறிப்பிடப்படும் இம்மாதம், மாற்றத்திற்கான காலத்தையும் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான தருணத்தையும் குறிக்கிறது. 2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், உறுதிபூண்ட உடனே அதிவிரைவாக உடைக்கப்படும் புத்தாண்டுத் தீர்மானங்களை உருவாக்கும் கலாச்சாரம் பற்றி சத்குரு நகைச்சுவை செய்தார்.
வாழ்க்கை தற்செயலாக நடைபெறுவதைத் தடுத்திட, உடல் மற்றும் மனதை நம் கையில் எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார். அத்தகைய திறனைப் பெறாமல், தீர்மானங்கள் எடுத்துக்கொள்வது பயனற்றது என்று அவர் எடுத்துரைத்தார். உத்வேகம் தரும் வீடியோக்களைப் பார்ப்பதைத் தாண்டி, யோகப் பயிற்சி செய்வதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், தனது பல YouTube வீடியோக்களைப் பார்க்கும்போது ஒருவரின் மனநிலை மாறினாலும், அது உண்மையான யோகப் பயிற்சிகளுக்கு ஒரு மாற்றாக இருக்காது என்று சுட்டிக்காட்டினார்.
2023ம் ஆண்டில் மட்டும் சத்குருவின் சேனல் 4.37 பில்லியன் viewsகளை எட்டியுள்ளதைக் குறிப்பிட்ட சத்குரு, அந்த பார்வையாளர்கள் தங்கள் வாழ்க்கையில் யோகப் பயிற்சிகளை செய்வதைக் காண விருப்பமாக இருப்பதைத் தெரிவித்தார். ஈஷா யோகா போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவைப் பயிற்சிசெய்ய நேரம் ஒதுக்க முடியாவிட்டால், தொடர்ந்து 48 நாட்களுக்கு ஈஷா கிரியா போன்ற எளிய பயிற்சியை மேற்கொள்ளுமாறு அவர் பரிந்துரைத்தார்.
தீவிரமிக்க பயிற்சிகளில் ஈடுபட முடியாதவர்கள், ஈஷா கிரியா போன்ற எளிய பயிற்சியை தினமும் இரண்டு முறை 12 முதல் 15 நிமிடங்களுக்கு தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்யலாம் என சத்குரு பரிந்துரைத்தார்.
தீவிர ஆன்மீக வளர்ச்சிக்கான வேட்கைமிக்க சாதகர்களுக்காக, டிசம்பரில் நடைபெற்ற ஒரு சம்யமா நிகழ்ச்சியைத் தொடர்ந்து உடனடியாக, ஜனவரியில் இன்னொரு சம்யமா நிகழ்ச்சியை நடத்தினார். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இந்த தீவிரமிக்க நிகழ்ச்சி, ஒரே நேரத்தில் ஆதியோகி ஆலயம் மற்றும் ஸ்பந்தா ஹால் ஆகிய இரண்டு இடங்களிலும் நடைபெற்றது.
சத்குருவின் வழிகாட்டுதலின் படி, பங்கேற்பாளர்கள் எட்டு நாட்கள் ஆழமிக்க அமைதி மற்றும் தீவிர தியானப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் விழிப்புணர்வை உயர்த்துவதற்கும் ஆழ்ந்த தியான அனுபவங்களில் திளைப்பதற்குமான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. இது பங்கேற்பாளர்கள் தங்கள் கர்ம பிணைப்புகளை விடுவிப்பதற்கும், அவர்களின் உடல் அமைப்புகளை தூய்மைப்படுத்துவதற்கும், வாழ்க்கையின் நுட்பமான அனுபவங்களை அணுகுவதற்கும் வழிவகுத்தது.
இந்தியா டுடேயின் துணை ஆசிரியரும் தொகுப்பாளருமான அக்ஷிதா நந்தகோபால், பெங்களூரில் உள்ள சத்குரு சந்நிதியில் சத்குருவுடன் கலந்துரையாடினார். காலத்திற்கு ஏற்ற சனாதன தர்மத்தின் கொள்கைகள் மற்றும் பிரதிஷ்டை செயல்முறை பற்றிய விரிவான இந்த கலந்துரையாடலில், பிரதிஷ்டையின் முக்கியத்துவத்தை விளக்கிய சத்குரு, பல்வேறு நிலைகளில் மாற்றத்திற்கு உள்ளாகும் பொருளுக்கும் மனித அனுபவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பேசியபோது, பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களுக்கு மனித உடலைத் தாண்டிய அனுபவத்தை வழங்கக்கூடிய ஆற்றல்களைத் தக்கவைக்கும் திறன் உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
மந்திரங்கள் மற்றும் பிரதிஷ்டைக்கான சடங்குகளை வேறுபடுத்திக் காட்டிய அவர், பிராணப் பிரதிஷ்டை என்பது உயிர்சக்திகளை பயன்படுத்தி சக்திவாய்ந்த வடிவமான ஒரு தெய்வ வடிவத்தை உருவாக்குவது எனக் குறிப்பிட்டார்.கட்டிடக்கலை மற்றும் கோயில்களின் கட்டுமானம் பற்றி அவர் பேசியபோது, நீடித்து நிலைத்திருக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் உயர்ந்த அனுபவங்களை சாத்தியமாக்கும் இடங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அயோத்தி ராமர் கோவில் பற்றி அக்ஷிதா கேட்டபோது, பக்தியை வெளிப்படுத்துவதில் கோவில்களின் பங்களிப்பு பற்றி சத்குரு பேசினார். அவர்கள் சனாதன தர்மத்தைப் பற்றியும் பேசினர். அனைத்தையும் அரவணைக்கும் ஒரு தர்மம் என்று சத்குரு தெளிவுபடுத்தினார். இந்திய ஆன்மீக கலாச்சாரத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினை உள்ளது என்ற கருத்தை அவர் நிராகரித்தார். மேலும் மதங்களைச் சாராமல், சனாதன தர்மம் இந்திய வாழ்க்கை முறையுடன் ஒருங்கிணைந்ததாக இருந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.
ராமரை ஒரு உத்வேகமான மனிதராகவும், தெய்வீகத்தை நோக்கிய மனித பரிணாம வளர்ச்சிக்கான சாத்தியத்தை முன்னிறுத்தும் புருஷோத்தமன் என்றும் சத்குரு கூறினார்.தன்னை ஒரு "ராம பக்தர்" என்று அடையாளப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், ஆனால் தனது வாழ்க்கையின் பக்தராக இருப்பதாக தான் கருதுவதாக சத்குரு கூறினார். ராமர் கோயிலின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய சத்குரு, அதன் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கோயில்களுக்கு பதிலாக மருத்துவமனைகள் அல்லது பள்ளிகளுக்கு வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கருத்துகளை அவர் நிராகரித்தார்.
கடைசியாக, தான் முன்பு ஒப்புக்கொண்ட வெளிநாட்டு நிகழ்வுகள் காரணமாக ராமர் கோவில் பிரதிஷ்டையில் கலந்துகொள்ளவில்லை என்று வருத்தம் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அங்கு செல்ல விருப்பமாக இருப்பதைத் தெரிவித்தார். கோயில் நிறுவப்படுவது இந்தியாவின் கலாச்சாரத் தருணமாக இருக்கும் என்று கோடிட்டுக் காட்டிய அவர், இது நீடித்த பக்தி மற்றும் வரலாற்று பின்புலத்தின் உச்சத்தைக் குறிப்பதாகக் கூறினார்.
சமீபத்தில் சத்குருவுடன் ஒரு நிகழ்ச்சிக்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (FICCI) பெண்கள் அமைப்பான FICCI FLOன் உறுப்பினர்களை சத்குரு சந்நிதி பெங்களூரு வரவேற்றது.
சத்குரு தனது உரையில், கடந்த தலைமுறையினருடன் ஒப்பிடுகையில் இன்று பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் வளங்களைப் பற்றி எடுத்துரைத்தார். ஆண்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டிலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறினார். உள்நிலை நல்வாழ்வை விட வெளிப்புற வளர்ச்சிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், சமூக நிலையிலான கவனக்குவிப்பில் சமநிலையின்மை இருப்பதை சுட்டிக்காட்டினார். "ஒரு தலைமுறை மக்களாக, இதுவரை எந்த தலைமுறையினரையும் விட நாம் சிறப்பாக வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ளோம்" என்று சத்குரு குறிப்பிட்டார், வெளிச்சூழலில் முன்னேற்றத்துடன் "உள்சூழலியலை" வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் நடவடிக்கை குறித்து பேசுகையில், தமிழ்நாடு எதிர்காலத்தில் பாலைவனமாதல் சூழலைச் சந்திக்கவிருப்பது பற்றிய ஐ.நாவின் கணிப்பு குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தினார்.சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்வதற்கான விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, 9.3 கோடிக்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு வழிவகுத்த பசுமைக்கரங்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ள சத்குரு, இயற்கையுடன் மனித வாழ்வு ஒன்றோடொன்று இணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக, “நமது வெளிமூச்சு, மரங்களின் உள்மூச்சாகிறது, மரங்களின் வெளிமூச்சு நமது உள்மூச்சாகிறது" என்றார்.
இறுதியாக, வாழ்க்கையின் தெளிவையும் ஆழமான அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஆன்மீக செயல்முறைகளின் சாராம்சத்தை சத்குரு எடுத்துரைத்தார். நுண்ணறிவும் நகைச்சுவையும் நிரம்பிய தனது உரையை நிறைவு செய்த சத்குரு, தெளிவான புரிதல் இல்லாததால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் விதமாக, பார்வையற்ற நாகப்பாம்பைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய கதையின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்தார்.
வியத்தகு விதத்தில் 7 உலக சாம்பியன் பட்டங்களைப் பெற்ற அலைச்சறுக்கு விளையாட்டு ஜாம்பவான் லெய்ன் பீச்லி மற்றும் சத்குரு ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடலைக் காண பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்ததால், மெல்போர்ன் மாநாட்டு மையத்தில் எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.
அலைச்சறுக்கு விளையாட்டிலும் வாழ்க்கையிலும் கடுமையான அலைகளில் சவாரி செய்வதில் பெயர்பெற்ற லெய்ன் பீச்லி அவர்கள், ஒரு விளையாட்டு நட்சத்திரமாக மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திலும் தான் ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். சத்குரு, தனது ஆழ்ந்த ஞானத்தாலும் ஆழமிக்க பார்வைகளாலும் மற்றும் நகைச்சுவை உணர்வாலும் நிகழ்வை வழிநடத்தி, கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தார்.
அவர்களின் கலந்துரையாடல், வாழ்க்கையின் அலைகளை மகிழ்ச்சியான அனுபவங்களாக மாற்றுவது பற்றியதாக அமைந்தது. குழந்தைப் பருவத்திலிருந்தே மகிழ்ச்சி என்பது ஒரு உள்ளார்ந்த தன்மை என்பதைக் கவனித்த சத்குரு, உள்நிலை நல்வாழ்வை வளர்ப்பதைக் காட்டிலும் உலகை வெல்வதற்கான ஆவலைக் கொண்டிருக்கும் சமூகத்தைக் குறிப்பிட்டு, குழந்தைகளின் இயல்பான மகிழ்ச்சிக்கும், பெரியவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார்.
லெய்ன் பீச்லி தொழில்முறை அலைச்சறுக்கில் தனது தனிப்பட்ட வளர்ச்சியைப் பற்றி கூறினார், தனது திருப்தியற்ற செயல்பாட்டிற்கு வெளிப்புற காரணிகளைக் குற்றம் சாட்டும் தனது ஆரம்பகாலப் பழக்கம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். அதன்பிறகு, தன்னளவில் பொறுப்பேற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்ந்துகொண்டதையும், யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் பங்கேற்றது குறித்தும் அவர் விவரித்தார். விழிப்புணர்வுடன் மறுபிறவி எடுக்கும் விதமாக தாய்-தந்தையரை அடுத்த பிறவியில் தேர்ந்தெடுப்பதைப் பற்றிய கருத்தை அவர்கள் விவாதித்தனர். எந்தவொரு முயற்சியிலும், முழுமையான ஈடுபாடுகொள்ளக் கூடிய பக்தியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு வலியுறுத்தினார். பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், "என் வாழ்க்கை என் பொறுப்பு" என்ற பொறுப்புணர்வின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இதன்பின்னர் இந்நிகழ்வு பார்வையாளர்களின் கேள்வி நேரமாக மாறியது.
கேள்வி-பதில் நிகழ்வின்போது, ஈடுபாடுமிக்க பார்வையாளர்களின் பங்கேற்பினால், சூழல் மிகவும் உயிரோட்டமாக இருந்தது. சத்குரு எதிர்காலத்தை வடிவமைப்பதில் மனித உயிர்சக்தியின் ஆற்றல் பற்றிக் கூறினார். புவி வெப்பமயமாதல் பற்றிய கணிப்புகள் மாற்றத்தக்க ஒன்றுதான் என்று விளக்கினார். மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு என்பது, ஒரு விரும்பத்தகாத மோசமான விஷயமாக பார்க்கப்படுவதை விடுத்து, வாழ்க்கையைப் போற்றி கொண்டாடுவதற்கான ஒரு கருவியாக இருக்கமுடியும் என்பதை அவர் விளக்கினார். மனநிலைகளில் சந்திரனின் தாக்கம் பற்றிய கருத்தாக்கமும் இதில் பேசுபொருளானது.
நிகழ்வை நிறைவுசெய்த சத்குரு, உண்மையான மாற்றம் மற்றும் ஞானோதயத்திற்கான உள்நோக்கிய பயணத்தைத் தொடங்குவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பங்கேற்பாளர்கள் நிகழ்வின் நினைவுகளுடன் மட்டும் வெளியேறவில்லை, வல்லமைபெற்ற உணர்வுடன், வாழ்க்கையின் அலைகளில் சவாரி செய்ய கற்றுக்கொள்ள ஆனந்தத்துடன் சென்றனர்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சத்குரு ஆஸ்திரேலியாவுக்கு வருகைதந்த நிலையில், அவரது சமீபத்திய இந்த வருகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. சத்குருவின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் காட்சிப் பதிவுகளின் ஒரு தொகுப்பை பார்த்து மகிழுங்கள்.
காலை வேளையில், பாரதத்தின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஈஷா ஆசிரமவாசிகள், தன்னார்வத் தொண்டர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல், சம்ஸ்கிருதி மாணவர்கள் என அனைவரும் ஈஷா ஹோம் ஸ்கூல் மைதானத்தில் ஒன்றுகூடினர்.
மூவர்ணக் கொடியை சத்குரு ஏற்றியபோது, கலந்துகொண்ட அனைவரிடத்திலும் இதயப்பூர்வமான பெருமையும் தேசபக்தியும் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில், பெங்களூரு சத்குரு சந்நிதி ஆதியோகி முன்னிலையில் விழாக்கோலம் பூண்ட குடியரசு தினத்தில், புகழ்பெற்ற தமதே மேதை, பத்மஸ்ரீ நாடோஜா பிண்டிபாப்பனஹள்ளி முனிவெங்கடப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
ஈஷா யோகா மையத்தில் "பிராண்ட் இன்சைட் –டிகோடிங் பிராண்டிங்" பயிலரங்கு நிறைவடைந்தது. 66 தொழில்முனைவோர் மற்றும் மார்க்கெட்டிங் வல்லுநர்களிடையே புதிய சிந்தனைகள் பகிரப்பட்டன. இந்த நிகழ்வு, குறிப்பிட்ட நோக்கத்திற்கான பிராண்டிங் பற்றிய நுட்பங்களின் புதையலை வழங்கியது.
ஒரு ஸ்ட்ரேட்டஜிக் ஆலோசகரான அத்திகா மாலிக், பிராண்ட் மற்றும் நிறுவனநோக்கத்துடையசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், "உங்கள் பிராண்டும் உங்கள்நிறுவன நோக்கமும் ஒன்றாக இருப்பது மிகவும் முக்கியம்." ஸ்டோரிவாலாஸைச்சேர்ந்த அமீன் ஹக் கதைசொல்லும்போது ஆழத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
ஈஷா அறக்கட்டளையின் சுவாமி சுகதா, குறிப்பிட்ட நோக்கம் சார்ந்தபிராண்டிங் பற்றிய நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டார்: "மிக முக்கியமான விஷயம்நோக்கம்," ஒரு பிராண்டின் பரிணாம வளர்ச்சியில் நிலையான, தெளிவான நோக்கம் அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஈஷா யோக மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையின் நேரடி ஒளிபரப்பைக் காண, மிகுந்த மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட உணர்வுடனும் ஸ்பந்தா ஹாலில் ஒன்றுகூடினர்.
வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, பிரதிஷ்டைக்கு முந்தைய நாள் இரவு, தன்னார்வத் தொண்டர்கள் ஆதியோகி நோக்கி மேள-தாளங்களுடன் நாகர் சங்கீர்த்தனம் செய்தபடி பிரம்மாண்ட ஊர்வலமாக வந்தனர்.