ஈஷா சமையல்

லெமன் கிராஸ் காய்கறி தேங்காய்ப்பால் சூப்

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

மூலிகை கலந்த தேங்காய்ப்பால் சூப்:

10 செமீ அளவு சித்தரத்தை, மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்டது.

4 லெமன் கிராஸ் தண்டுகள், 1 செ.மீ நீள துண்டுகளாக வெட்டப்பட்டது.

12-14 கொலுமிச்சை இலைகள், பொடியாக நறுக்கியது

200 மி.லி தண்ணீர்

800 மி.லி தேங்காய்ப்பால்

காய்கறிகள்:

1/2 சிவப்பு குடை மிளகாய், சிறிய துண்டுகளாக நறுக்கியது

1/2 பச்சை குடை மிளகாய், சிறிய துண்டுகளாக நறுக்கியது

2-4 காய்ந்த மிளகாய், மெல்லியதாக நறுக்கியது (காரத் தேவைக்கேற்க)

1 1/2 கப் மெல்லியதாக நறுக்கிய முட்டைக்கோஸ்

2 பெரிய கேரட், சிறிய துண்டுகளாக நறுக்கியது

200 கிராம் சிப்பிக்காளான் அல்லது மொட்டுக்காளான், சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கியது

2 சிறிய தக்காளி, நான்கு துண்டுகளாக நறுக்கியது

சுவையூட்டல்:

2 தேக்கரண்டி உப்பு (தேவைக்கேற்ப)

1 தேக்கரண்டி பொடித்த பனை சர்க்கரை அல்லது வெல்லம்

2 1⁄2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு (சுவைக்காக)

1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

1-2 தேக்கரண்டி மிளகாய் தூள் (கட்டாயமில்லை, காரத் தேவைக்கேற்ப)

அலங்கரிப்பதற்கு:

நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

நறுக்கிய கொலுமிச்சை இலைகள்

செய்முறை

  1. ஒரு பெரிய கடாயில், சித்தரத்தை துண்டுகள், லெமன் கிராஸ் மற்றும் கொலுமிச்சை இலைகளை 200 மி.லி தண்ணீரில் சேர்க்கவும்.
  2. மிதமான வெப்பத்தில் கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும்; பின்னர் 10-15 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் கொதிக்க விடவும்.
  3. 800 மி.லி தேங்காய் பாலை சேர்த்து, அடுப்பை குறைத்து, 5-10 நிமிடங்கள் மெதுவாக கொதிக்க விடவும்.
  4. நறுமணத்துடன் இருக்கும் கொதிக்க வைத்தத் தேங்காய்ப்பாலை கவனமாக வடிகட்டி வைக்கவும்.
  5. இந்த தேங்காய்ப்பாலை கடாயில் சேர்த்து, அதில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.
  6. பொடியாக நறுக்கிய சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், காய்ந்த மிளகாய், முட்டைகோஸ், கேரட் மற்றும் காளான்களை சேர்க்கவும்.
  7. தேவையான அளவு உப்பும், விருப்பப்பட்டால் சிறிது மிளகாய் தூளையும் சேர்க்கவும்.
  8. காய்கறிகள் மற்றும் காளான்கள் மென்மையாகும் வரை சுமார் 10 - 15 நிமிடங்கள் சூப்பை கொதிக்க வைக்கவும்.
  9. பொடித்த பனை சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்க்கவும்
  10. சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும்
  11. பின் அடுப்பை அணைக்கவும்.
  12. ஒவ்வொரு முறை பரிமாறும் போதும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய கொலுமிச்சை இலைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
  13. சூடாகப் பரிமாறவும்.
  14. இந்த கிரீமியான மற்றும் சுவையான சூப்பை தனியாகவோ அல்லது சாதத்துடனோ சேர்த்து ருசிக்கலாம்.