பொருள்தன்மையான விஷயங்கள் மீது நீடித்த கவனம் செலுத்தும் ஒரு உலகத்தில், பொருள்தன்மை மற்றும் பரிவர்த்தனையைக் கடப்பதற்கான ஒரு அரிய சாத்தியமாக, சத்குரு தியானலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த ஆற்றல் வாய்ந்த சக்தி வடிவத்தை மனிதகுலத்துக்கு அர்ப்பணித்து 25 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததை இந்த மாதம் குறிக்கிறது.
தியானலிங்கத்தின் இருப்பில், ஐந்து அல்லது எட்டு நாட்களுக்கு ஒருவர் நனைந்திருப்பதற்கு, ஒரு வாய்ப்பாக இருக்கும் லிங்க சேவா குறித்து சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார். அதன் சக்திகளை உண்மையாகவே உள்வாங்கி, சேகரிப்பிலிருந்து கரைதலுக்கு இடம்பெயர்வதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்திடுங்கள்.
சத்குரு: இரண்டு பாலினரையும் நீங்கள் குறிப்பிட்டது நல்லது, ஏனென்றால், இந்த கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல், உலகத்தின் எல்லா இடங்களிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் ஒருபோதும் திருத்தலத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது, ஒரு சாத்தியமாக இருக்கும் இந்த வாய்ப்பை மதித்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கேள்வி: நமஸ்காரம், சத்குரு. லிங்க சேவாவின் முக்கியத்துவம் என்ன, மற்றும் தன்னார்வலர்கள் திருத்தலத்துக்கு உள்ளே இந்த ஏழு நாட்களையும் அவர்களது ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்திக்கொள்ள முடியும்? மேலும், ஒரு ஆண் அல்லது பெண் தன்னார்வலர் தன்னை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும்?
தியானலிங்கத்தைப் போன்ற ஒரு சக்தி வடிவத்தைத் தொடுவதற்கு நீங்கள் வாய்ப்புப் பெற்றிருக்கிறீர்கள், ஆனால் அதன் பலன் குறித்து என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஒருவிதத்தில், சக்தி ரூபமாக இருக்கும் சிவனையே நீங்கள் தொடுகிறீர்கள். அங்கு பொருள்தன்மையான உடல் கிடையாது, ஆனால் மற்ற அனைத்தும் உள்ளது. பலன் கருதிப் பார்க்காதீர்கள். அதற்குள் வெறுமனே மரணிப்பதுதான் ஒரே வழி.
சேவா என்றால், நீங்கள் அதனுள் கரைந்துவிட விரும்புகிறீர்கள். “எனக்கு என்ன கிடைக்கும்?” என்று நீங்கள் கேட்கும்பொழுது, அதை நீங்கள் ஒரு சந்தைவெளியாக மாற்றுகிறீர்கள். “நான் லிங்கத்தை ஏழு நாட்கள் நீராட்டினேன், சத்குரு. எனக்கு என்ன கிடைக்கும்?” உங்களுக்கு ஏதாவது கிடைத்தால், நீங்கள் ஒரு முட்டாள். அந்த ஏழு நாட்களில் உங்களையே நீங்கள் இழக்கவேண்டும்.
நீங்கள் ஏதோவொன்றைப் பெறுவதற்கு விரும்பினால், யாரும் பார்க்காதபொழுது, மாலையிலிருந்து சில மலர்களை எடுத்து, உங்கள் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளக்கூடும். மக்கள் அப்படியெல்லாம் செய்கின்றனர்; சிலர் சுத்தம் செய்யும் துணிகளிலிருந்து சிறு துண்டுகளாகக் கிழித்துக்கூட, அவர்களது சட்டைப்பைகளில் திணித்துக்கொள்கின்றனர். நீங்கள் என்ன எடுத்துக்கொள்கிறீர்களோ அது உங்கள் தன்மையல்ல. நீங்கள் என்ன வெளிப்படுத்துகிறீர்களோ, அது உங்கள் உயிரின் இயல்பாக உள்ளது.
இந்தியக் கோவில்களில், உள்ளே செல்லும்போது குறைந்தபட்சம் ஒருவரின் பாதி உடலாவது வெற்று உடம்பாக இருப்பது வழக்கமாக இருந்தது. இன்றைக்கும்கூட, சில கோவில்களில், ஆண்கள் பாதி வெற்று உடம்பில் இருப்பது எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகள் முன்பு வரை, தென்னிந்தியாவில் ஆண், பெண் இருபாலரும் ஓரளவு ஆடை அணியாமல் கோவில்களுக்குள் சென்றனர். அவர்கள் குழந்தைத்தனமானவர்கள் அல்ல. பெரியவர்கள் அதைப்பற்றி கிளர்ச்சி அடைகின்றனர் என்றால், அவர்கள் இன்னமும் தங்களது மனதளவில் குழந்தைத்தனமாக உள்ளனர் என்பதுதான் அர்த்தம்.
சில பத்தாண்டுகள் முன்பு வரைக்கும், தேசத்தின் இந்தப் பகுதியில் ஆண்களும், பெண்களும் அவர்களது உடலின் மேற்பாகம் திறந்த நிலையில்தான் கோவில்களுக்கும், வீதியிலும் சென்றனர். இன்றைக்கும்கூட, கிராமங்களில் இருக்கும் சில முதியவர்கள் தங்கள் மேலுடம்பை மூடாமல் விடுகின்றனர். அதிக வெப்பமாக இருந்தால், அவர்கள் அரை ஆடை உடுத்துவார்கள். அதைக் கவர்ச்சியாக யாரும் நினைக்கவில்லை. அது சாதாரணமாகப் பார்க்கப்பட்டது. மக்கள் அதிக “நாகரிகம்” அடைந்துள்ள நிலையில், அவர்கள் மேலும் அதிக இறுக்கமானவர்களாகவும், அடிமட்டமாகவும், குழந்தைத்தனம் கொண்டவர்களாகவும் ஆகியுள்ளனர்.
உங்கள் மேலுடம்பை மூடாமல் கோவிலுக்குச் செல்வதன் நோக்கம் என்னவென்றால், சக்திநிலையிலும், மனநிலையிலும், உங்களைப் பற்றி பாதுகாப்பதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ உங்களிடம் எதுவும் இல்லை. அங்கு இருக்கும் சக்திநிலைகளுக்கு திறந்ததன்மையில் இருந்து, அது உங்களைக் கையகப்படுத்துவதற்கு விரும்புகிறீர்கள். நீங்கள் வீட்டிற்கு என்ன எடுத்துச் செல்வது என்று எண்ணாதீர்கள்.
தியானலிங்கம் அல்லது தேவியினால் நீங்கள் ஆட்கொள்ளப்படாமல், ஆனால் ஏதோவொன்றை எடுத்துச் செல்வதற்காக நீங்கள் அங்கு சென்றால், அது என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளமாட்டீர்கள். ஒரு சிறிதளவுக்கு நீங்கள் பலனடையக்கூடும். ஆனால் ஒரு சமுத்திரத்தில், ஒரு தேநீர் கோப்பை அளவுக்கு மட்டும் எடுப்பது மிக மோசமான வாழ்க்கை முறையாகவே இருக்கிறது.
சேவா என்றால், உங்களையே அர்ப்பணிப்பது. எதையாவது பெறுவதற்காக நீங்கள் லிங்க சேவா செய்யாதீர்கள். நீங்கள் உங்களையே இழப்பதற்கு அங்கு செல்லுங்கள். நீங்கள் செய்யவேண்டியது அதுதான்.