சத்குரு அகாடமியின் நான்கு நாள் வணிக தலைமைத்துவ பயிற்சியான "இன்சைட்: வெற்றியின் டி.என்.ஏ" என்ற நிகழ்வின் 13வது பதிப்பு சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் நிறைவடைந்தது. இந்த தனித்துவமான நிகழ்ச்சி சத்குருவின் ஆன்மீக நுண்ணறிவுகளை புகழ்பெற்ற வணிகத் தலைவர்களின் நடைமுறை அனுபவங்களுடன் கலந்து, வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட தலைமைத்துவம் ஆகிய இரண்டையும் வளர்பதில் கவனம் செலுத்தியது.
சத்குரு வழிநடத்திய அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் பங்கேற்று, வளர்ச்சியின் அறிவியல் மற்றும் தனிப்பட்ட "வெற்றியின் டி.என்.ஏ" ன் உருவாக்கம் பற்றி ஆராய்ந்தனர் . இந்த நிகழ்ச்சி தங்களது தனித்துவமான கண்ணோட்டங்களையும், உத்திகளையும் பல்வேறு சிறப்பு பேச்சாளர் குழுக்கள் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ். சோமநாத் அவர்கள், குறைவான நிதி ஒதுக்கீட்டில் இஸ்ரோ சாதித்த குறிப்பிடத்தக்க சாதனைகளை விவரித்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் மனித வள மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் பாரம்பரியமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் "நோக்கத்தைக் கண்டறிதல் மற்றும் விடாமுயற்சி" ஆகியவை வெற்றிக்கு முக்கியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
டைட்டன் கம்பெனியின் சி.கே. வெங்கடராமன், அதிவேக வளர்ச்சிக்காக குறுகிய கால லாபத்தை விட பல பங்குதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் சக்தியை வலியுறுத்தினார், மேலும் ஆர்வமுள்ள, அர்ப்பணிப்புள்ள பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் கோடிட்டுக் காட்டினார்.
சோழமண்டலம், TII மற்றும் கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் வெள்ளையன் சுப்பையா, தனது நிறுவனங்களின் அசாதாரண வளர்ச்சியுடன் தனது தனிப்பட்ட மாற்றத்தை இணைத்துப் பேசினார். தொடர்ச்சியான தனிப்பட்ட மற்றும் நிறுவன முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அர்பன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அபிராஜ் சிங் பால், அர்பன் கிளாப்பாக இருந்ததில் இருந்து அர்பன் நிறுவனமாக மாறியதைப் பற்றியும், மக்களின் திறமைகளை வெளிக்கொணரும், அதீத வளர்ச்சிக்கான வித்திடும் ஒரு வாழ்வாதார தளத்தை வளங்கும், நோக்கம் சார்ந்த அணுகுமுறை பற்றியும் விவாதித்தார்.
ராஜ் சிசோடியா, விழிப்புணர்வான முதலாளித்துவத்தின் கொள்கைகளையும், விழிப்புணர்வு மற்றும் வணிக நடைமுறைகளின் கலவையின் மூலம், உலகளாவிய வணிக தலைமைத்துவத்திற்கு இந்தியா பங்களிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பற்றியும் பேசினார்.
வெல்ஸ்பன் லிவிங் நிறுவனத்தின் திபாலி கோயங்கா, எவ்வாறு புதுமை மற்றும் நுகர்வோர் தேவைகளில் கவனம் செலுத்துதல் மற்றும் மாற்றத்திற்கான கருவியாக வணிகங்களை பார்த்தல் உலகளாவிய வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை பகிர்ந்து கொண்டார். அதில் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ். சோமநாத் அவர்கள், குறைவான நிதி ஒதுக்கீட்டில் இஸ்ரோ சாதித்த குறிப்பிடத்தக்க சாதனைகளை விவரித்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் மனித வள மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் பாரம்பரியமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் "நோக்கத்தைக் கண்டறிதல் மற்றும் விடாமுயற்சி" ஆகியவை வெற்றிக்கு முக்கியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சி, அனைத்து பேச்சாளர்கள், வள வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் தீவிர ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்து நிறைவடைந்தது. சத்குரு அகாடமியின் மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்நிகழ்வை உறுதிப்படுத்தியது.