ஈஷா சமையல்

புரொக்கோலி டோஃபு வறுவல்

தேவையான பொருட்கள்

400 கிராம் டோஃபு அல்லது பனீர்

2 மேசைக்கரண்டி கோதுமை மாவு / ஆரோரூட் மாவு / அரிசி மாவு

1 தேக்கரண்டி மரவள்ளிக்கிழங்கு மாவு

1 தேக்கரண்டி அரிசி மாவு

1/3 கப் சோயா சாஸ்

1/4 கப் தண்ணீர்

3 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு

1 மேசைக்கரண்டி துண்டுதுண்டாக வெட்டப்பட்ட புதிய இஞ்சி

1 மேசைக்கரண்டி வெல்லம் (அல்லது சுவைக்கேற்ப)

3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்

5-6 கப் புரோக்கோலி துண்டுகள் (2 பூக்கள்)

1/4 தேக்கரண்டி கல் உப்பு

1/4 தேக்கரண்டி புதிய கருப்பு மிளகு

2 தேக்கரண்டி சூடேற்றப்பட்ட நல்லெண்ணெய் (விருப்பத்தைப் பொறுத்து)

2 மேசைக்கரண்டி எள்

செய்முறை

1.  டோஃபு / பனீரில் உள்ள தண்ணீரை வடியவிட்டு, பேப்பர் டவல் கொண்டு அது உடையாதபடி மென்மையாக ஒத்தி எடுத்து கூடுதல் ஈரப்பதத்தை நீக்கிவிடுங்கள்.

  1. 2. டோஃபு / பனீரை 1 இஞ்ச் அளவுள்ள கனசதுரங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். அவற்றை ஒரு பெரிய தட்டில் வைத்து, மீண்டும் ஒருமுறை பேப்பர் டவல் கொண்டு ஒத்தி எடுத்துவிடுங்கள்.
  2. 3. டோஃபு / பனீர் துண்டுகளின் மீது 2 மேசைக்கரண்டி மாவை சரிசமமாக தூவி, ஒன்றுபோல ஒவ்வொரு துண்டிலும் பூசப்படும்படி விரல்களால் லேசாக புரட்டுங்கள்.
  3. 4. ஒரு சிறிய கிண்ணத்தில், சோயா சாஸ், தண்ணீர், எலுமிச்சை சாறு, வெல்லம், இஞ்சி மற்றும் மீதமுள்ள 1 தேக்கரண்டி மாவு ஆகியவற்றை கலந்திடுங்கள்.
  4. 5. ஒரு பெரிய நான்-ஸ்டிக் பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெயை மிதமான நெருப்பில் சூடாக்குங்கள். எண்ணெய் காய்ந்ததும், புரொக்கோலி, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்திடுங்கள். புரொக்கோலி மொறுமொறுப்பாகவும் மென்மையாகவும் மாறும்வரை, சுமார் 5 நிமிடங்கள் வரை அவ்வப்போது கிளறுங்கள். கடாயிலிருந்து புரொக்கோலியை எடுத்து ஒரு தட்டில் வைத்திடுங்கள்.
  5. 6. ஒரு சிறிய கடாயில் மிதமான சூட்டில் எள்ளை பொன்னிறமாக மணம் வரும்வரை வறுத்திடுங்கள். பின் இதனை தனியாக எடுத்து வையுங்கள்.
  6. 7. மீதமுள்ள 2 மேசைக்கரண்டி எண்ணெயை வாணலியில் ஊற்றி, மிதமான சூட்டில் காயவைத்திடுங்கள். அதில் டோஃபு / பனீரை ஒன்றன்மேல் ஒன்றாக இல்லாதபடி சேர்த்து, அவற்றின் அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாகும்வரை மெதுவாக கிளறி, சில நிமிடங்களுக்கு சமைத்திடுங்கள். டோஃபு / பனீர் துண்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் பார்த்து கிளறிவிடுங்கள்.
  1. 8. புரொக்கோலியை மீண்டும் கடாயில் போட்டு, அதன்மீது தயாரித்து வைத்துள்ள சாஸை ஊற்றுங்கள். நன்கு கிளறுங்கள். புரோக்கோலி சூடாகி, சாஸ் சிறிது கெட்டியாகும் வரை சிறிதுநேரம் வேகவையுங்கள்.
  2. 9. சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யை (விருப்பத்தைப் பொருத்து) ஊற்றி கிளறி, அதன் மேற்புறத்தில் எள்ளைத் தூவுங்கள்.
  3. 10. சூடான அரிசி சாதம், தினை அல்லது உங்களுக்கு விருப்பமான சிறுதானியத்துடன் பரிமாறுங்கள்.