யோகா & ஞானம்

யோகா மூலமாக நாம் சிக்கியிருக்கும் சேற்றிலிருந்து மீள 5 படிகள்

உங்கள் ஹடயோகா பயிற்சியில் ஊக்கத்துடன் ஈடுபடப் போராடுகிறீர்களா? வழக்கமான சுழற்சிகளிலிருந்து விடுபடவும்,  பயிற்சிக்கு உறுதுணை செய்யும் விஷயங்களைக் கண்டடையவும், உங்களது உற்சாகத்தைத் தூண்டி பயிற்சியை மேம்படுத்த உங்களை உத்வேகத்துடன் வைத்திருக்கவும், சத்குருவிடமிருந்து ஆழ்ந்த ஞானம் பெற்றிடுங்கள்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. பல வருடங்களாக, நான் தினமும் ஹடயோகா பயிற்சிகள் செய்துவருகிறேன். ஆனால் நாளடைவில், அதில் எனக்கு ஈடுபாடும், ஆர்வமும் குறைவது போலத் தோன்றுகிறது. நான் உறுதியும் உத்வேகமும் குறைந்து, அதிகம் பாதிக்கப்படுவதாக உணர்கிறேன். நான் என்ன செய்யவேண்டும்?

நீங்கள் இருக்குமிடத்தின் பரப்பை புரிந்துகொள்வது

சத்குரு: விதிவிலக்கில்லாமல் நம் ஒவ்வொருவரிலும் கர்மவடிவமைப்புகள் உள்ளன. ஹட யோகாவின் ஒரு அம்சம் பிடிவாதமாக இருப்பது. நமக்குள் இருக்கும் கர்மப்பதிவுகள், எப்போதும் பழக்கப்பட்ட வழித்தடங்கள் அல்லது குறிப்பிட்ட வடிவமைப்புகளிலேயே செல்வதற்கு நம்மை நிர்ப்பந்திக்கும் என்பதால், நீங்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும். மழைக்காலங்களின், மண்தடங்கள் சகதியால் நிறைந்திருக்கும்போது அதில் வண்டி ஓட்டுவதைப்போன்றது அது.

நீங்கள் சேற்றில் மாட்டிக்கொண்ட பிறகு, நீங்கள்  எங்கு செல்ல விரும்பினாலும், எவ்வளவுதான் முயன்று பார்த்தாலும், நீங்கள் சேற்றிலிருந்து வெளியே வரமுடியாது. என்ன முயன்றாலும் அதற்குள் உங்களை புதையச்செய்வதுதான் சேற்றின் சக்தி.

ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய கர்மபதிவுகள் உண்டு. அதிலிருந்து வெளியில் வருவதற்கு நீங்கள் போதுமான பிடிவாதத்துடன் இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி. உங்களால் பறக்கமுடிந்தால், நீங்கள் அதிலிருந்து வேகமாக வெளியில் வருவீர்கள். ஆனால் நீங்கள் பறக்கும் இயல்புடையவர் அல்ல என்றால், அப்போது நீங்கள் பிடிவாதமாகத்தான் இருக்கவேண்டும். “பறக்கும் இயல்பினர்” என்று நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்றால், சிலர் தங்களது கண்களை மூடினால் அதுவே போதுமானது – அவர்கள் தங்களது காலைநேர ஹடயோகாவை செய்கின்றனரா இல்லையா என்பதைக்கூட நான் உண்மையில் பொருட்படுத்துவதில்லை.

பறக்கும் மக்கள் தங்களது ஆழமான வழித்தடங்களைப்பற்றி கவலைகொள்ளவேண்டியது கிடையாது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் மக்கள், தங்களது சாலை நிலவரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய எல்லா தடைகளைப்பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். பறக்கும் மக்கள், வானிலை குறித்து ஒரு சிறிதளவுக்கு கவனம்கொள்ளவேண்டும். ஆனால் நடந்துகொண்டிருக்கும் மக்கள், அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு கூழாங்கல், ஒவ்வொரு கல், ஒவ்வொரு முள், ஒவ்வொரு வழுக்கக்கூடிய இடம், மற்றும் ஒவ்வொரு சதுப்பு நிலம் குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கர்மப்பதிவுகளின் வடிவமைப்புகள், அவர்கள் எந்த விதமான நிலப்பரப்புக்குள் செல்கின்றனர் என்பதைத் தீர்மானிக்கும். குறிப்பாக அவர்கள் மோசமான நிலப்பகுதிக்குள் செல்லத்தொடங்கும்போது – அது ஒருவேளை உடல்ரீதியான சூழ்நிலைகளாக இருக்கலாம், மனரீதியான சூழ்நிலைகளாக, அல்லது உணர்ச்சிரீதியான களங்களாக இருக்கலாம் – அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிர்ப்பந்தமான சூழல்களுக்குள் இருக்கும்போது, அவர்கள் தமது பிடிவாதத்தைக் காட்டவேண்டும். “ உனக்கு வேண்டியதை நீ செய்துகொள். நான் யோகா செய்கிறேன்.”

உங்களை சிக்கவைக்கும் 'பிசாசுகளை' அடையாளம் காண்பது

கர்மவினை என்பது ஏறக்குறைய ஒரு பிசாசுத்தன்மை போன்றது. அது உள்ளே இருந்து உங்களைச் சிறைபிடித்துக்கொண்டு நீங்கள் செய்யவிரும்பாதவற்றைச் செய்யவைத்துக்கொண்டும், அல்லது நீங்கள் செய்யவிரும்புவதைச் செய்வதற்கு உங்களை அனுமதிக்காமலும் செய்துகொண்டிருக்கிறது. ஒரு விதத்தில், நீங்கள் ஆட்டிவைக்கப்படுகிறீர்கள்; வெளியிலிருந்து ஏதோ பிசாசினால் அல்ல – உங்களுக்கு உரித்தான கர்மவினை உங்களைப் ஆட்டிவைக்கிறது. கடந்த காலமானது, நிகழ்காலத்தைப் பிடித்துக்கொண்டு, எதிர்காலத்தின் சாத்தியங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.

பிசாசு என்பது, கடந்தகால வாழ்க்கை. ஆகவே, ஒரு விதத்தில், உங்களது கர்மவினை ஒரு பிசாசு போன்றது ஏனென்றால் அது நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதற்கு அனுமதிக்காமல் உங்களது நிகழ்காலத்தை பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு கடந்தகால வாழ்க்கை. குறிப்பாக, இத்தகைய விஷயங்கள் நிகழ்ந்தால், நீங்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும்: “உனக்கு விருப்பமானதை நீ செய் – நான் இதைத்தான் செய்வேன்.” அந்தப் பிடிவாதம் உங்களுக்கு இல்லாமற்போனால், நீங்கள் அடித்துச் செல்லப்படுவீர்கள்.

அது உங்களை உற்சாகமில்லாமல் உணரச்செய்வது மட்டுமல்லாமல், இறுதியில், உங்களை உயிரோட்டமில்லாமலும் செய்துவிடும். ஆரம்பத்தில், நீங்கள் உத்வேகமின்மையையும், மற்றும் நீங்கள் செய்ய விரும்புவதில் கவனக்குறைவு மற்றும் உறுதியின்மையையும் உணரக்கூடும். காலம் செல்லச்செல்ல, அது உங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்குவதுடன், உங்களை உயிரோட்டமில்லாமலும் செய்துவிடும். ஆன்மீகப் பாதையில், சங்கம் என்றழைக்கப்படும் அமைப்பை எப்போதும் நாம் ஏன் உருவாக்கினோம் என்பதற்கான காரணம் இதுதான்.

உங்களுக்கான சங்கத்தை கண்டடைதல்

சங்கம் என்றால், தங்களுக்கே உரிய போராட்டங்கள், மற்றும் பிரச்சனைகளுடனேயே, ஆன்மீகப் பயணத்திலும் இருக்கும் மற்ற சில மக்களுடன் ஒரு உறுதுணையான சூழலுடன் இணைந்திருப்பது. அது ஒவ்வொருவரது பிரச்சனைகளை பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அழுது புலம்புவதற்கான ஒரு இடமல்ல; ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய பிரச்சனைகள் இருப்பதை மட்டும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சிலர் முகத்தில் புன்னகையுடன் தங்களது பிரச்சனையைச் சுமக்கின்றனர், மற்றும் சிலர் அனைவரும் பார்க்கும்படியான விதத்தில் தங்களது பிரச்சனைகளை சுமந்துகொண்டிருக்கின்றனர். இறுதியில், அதுதான் உங்களது தேர்வுக்கு உட்பட்டது.

உங்களுக்கே உரிய பிசாசு உங்களைப் பிடிக்க முயற்சிக்கும் வழி எப்படியிருப்பினும், அது நீங்கள் செய்வதற்கு விரும்பாத விஷயங்களைச் செய்யவைத்து, உண்மையிலேயே நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதிலிருந்து உங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கிறது. அப்போது உங்களுக்கு ஹட மற்றும் சிறிது சங்கம், அதாவது சிறிதளவு தொடர்பு தேவையாக இருக்கிறது. இன்றைக்கு, சங்கத்துக்காக, நீங்கள் மற்றவர்களுக்கு விருந்தோம்பல் செய்யவேண்டியதில்லை; ஆன்லைனில் சங்கம் கூடுவதை தொழில் நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும், நாம் சத்சங்கம் வழங்குகிறோம்.

சரியான கூட்டாளியைத் தேர்ந்தெடுத்தல்

உங்களுக்கு உறுதுணை அளிக்கும் மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு நீங்கள் வழி காணவேண்டும். ஒரே பாதையில் பயணிக்கும் மக்கள் நீங்கள் உறுதியுடன் தொடர்ந்து இருப்பதற்கு உதவி செய்வார்கள். நீங்கள் தவறான மக்களைச் சந்தித்தால் அவர்கள், “ என்ன? நீங்கள் காலை 4.00 அல்லது 5 மணிக்கு எழுகிறீர்களா?” என்று கூற முற்படலாம். அதற்கு மாறாக, “ என்ன? நீங்கள் 5 மணிக்கு எழுகிறீர்களா? நான் 3:45 மணிக்கு எழுகிறேன்”, என்று கூறும் மக்களை நீங்கள் சந்திக்கவேண்டும். உங்களைக்காட்டிலும் அதிக பொறுப்புணர்வும், உறுதிப்பாடும் கொண்ட மக்களை நீங்கள் சந்திக்கவேண்டும்.

உங்களைவிட அதிகமான தன்மையில் இருக்கும் மக்களை எப்போதும் சந்திப்பது பெரும் சிறப்பு வாய்ந்தது. சமூகத்தில் பல தனிமனிதர்களும், அவர்களைவிடக் குறைந்தவர்களாக இருக்கும் மக்களைச் சந்திக்க முயற்சிக்கின்றனர், ஏனென்றால் மற்றவர்களைவிட தாம் அதிகமாக இருப்பதில் அவர்கள் வசதியாக உணர்கின்றனர். அவர்களுக்கு முன்னால் நீங்கள் ஒன்றுமே இல்லை என்பதைப்போல் உணரும் வகையிலான மக்களைச் சந்திப்பதற்கே எப்போதும் நீங்கள் விரும்பவேண்டும். அது நல்லது ஏனென்றால் நீங்கள் ஒன்றுமில்லை என்பதுபோல் உணர்ந்தாலும், உலகத்தின் எத்தனையோ விஷயங்களில் மேலே இருக்கிறீர்கள். உங்களைவிட மேலான மக்களைச் சந்திப்பதால், உங்களது நோக்கங்கள் வளர்கின்றன என்பதுடன் நீங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்ற உங்களது இலட்சியமும் பரிணாமம் அடையும்.

யோகாவுடன் அதிகபட்ச நெகிழ்திறனைக் கட்டமைத்தல்

நீங்கள் அதைதான் செய்யவேண்டியுள்ளது; மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, ஹடயோகா பயிற்சி செய்யுங்கள். ஹடயோகா, நரகத்துக்கே செல்வதற்கான ஒரு இணக்கசூழலை ஏற்படுத்துகிறது. ஆனால் யோகிகளை நீங்கள் நரகத்துக்கு அனுப்பமுடியாது ஏனென்றால் தினசரி யோகா செய்தபிறகு, நீங்கள் அவர்களை நரகத்திற்கு அனுப்பவேண்டியிருந்தாலும், அவர்கள் அதை சொர்க்கம் என்றுதான் நினைப்பார்கள்.