
கடந்த சில வாரங்களின் சத்குரு நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு!
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு அமெரிக்க தியான அன்பர்கள், அமெரிக்காவின் டென்னஸியிலுள்ள ஈஷா யோக மையத்தில் (Isha Institute of Inner-sciences) சத்குருவுடன் சம்யமாவின் அற்புதத்தையும் தீவிரத்தையும் அனுபவித்து உணர்ந்தனர். சம்யமா என்பது, மையத்தில் ஏழு நாட்கள் தங்கியிருந்து பங்குபெறக்கூடிய சத்குருவால் நடத்தப்படும் ஒரு தீவிரமிக்க நிகழ்ச்சி.
"சம்யமா என்பது, கண்கள் திறந்தநிலையிலும் தியானத்தன்மையில் இருக்கும் நிலைக்கு ஒருவரை படிப்படியாகக் கொண்டு செல்லும் ஓர் அற்புத செயல்முறை" என்று ஒரு tweetல் சத்குரு கச்சிதமாகக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் டென்னஸியிலுள்ள ஈஷா யோக மையத்தில், புத்த பௌர்ணமி தரிசனத்தின் போது, கௌதம புத்தரின் ஞானோதயம் அடைந்த நாள் பற்றியும் புத்தரின் போதனைகள் இன்றளவும் மக்களின் வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதைப் பற்றியும் சத்குரு பேசினார். உண்மையான சுதந்திரத்தை நாம் அனுபவிப்பதற்கு, உடல் மற்றும் உளவியல் செயல்முறைகளுக்கு அப்பால் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்தினார். மேலும், மன்னர் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசவை ஆலோசகரான தெனாலி ராமன் பற்றிய ஒரு கதையையும் பகிர்ந்து, ஒருமுகமான மனதைக் கொண்டிருப்பதன் சக்தியை அவர் விளக்கினார்.
ஒரு விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதியை எடுக்குமாறு அனைவரையும் வலியுறுத்திய சத்குரு, மனிதர்களின் விழிப்புணர்வின் தரம் உலகின் நிலையை தீர்மானிக்கும் என்பதை சுட்டிக்காட்டினார். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அடிகோடிட்டுக் காட்டிய சத்குரு, தனிநபர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இதன்மூலம் மனிதகுலம் செழிக்கும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 2023ல், 300க்கும் மேற்பட்ட சாதனபாதா நிகழ்ச்சியின் முன்னாள் மாணவர்கள் சாதனா இன்டென்சிவ் நிகழ்ச்சியில் இணைந்தனர். இது சாதனபாதா நிகழ்ச்சியை முடித்தவர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் நிகழ்ச்சியாகும். இந்த இரண்டு மாதகாலத்தில், அவர்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதோடு, யோகாவின் மறுபார்வை வகுப்புகள், வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சிகள், மௌனம் மேற்கொள்ளும் நாட்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் தங்கள் யோகப் பயிற்சிகளுக்கான ஆதரவைப் பெற்றனர். மேலும், பங்கேற்பாளர்கள் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களிடம் இருந்து இந்திய பாரம்பரிய இசையையும் களரிபயட்டையும் (பண்டைய தற்காப்புக் கலை) கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
யோகாசன மறுபார்வை வகுப்புகளில், பயிற்சிபெற்ற ஈஷா ஹடயோகா ஆசிரியர்கள் பங்கேற்பாளர்களுக்கு யோகப்பயிற்சிகள் குறித்து விரிவான குறிப்புகளை வழங்கினர். மாதாந்திர சந்திப்புக்கூட்டங்கள் அனைவரும் ஒன்றுகூடுவதற்கும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், சேர்ந்து விளையாடுவதற்கும், சத்குருவின் பிரத்யேக வீடியோக்களைப் பார்ப்பதற்கும், சாதனாவை ஆழப்படுத்துவதற்குமான ஒரு தளமாக அமைந்தது..
40க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் 30 ஈஷா பிரம்மச்சாரிகளும் சமீபத்தில் ஈஷா வித்யாவுக்கு ஆதரவாக TCS World 10K பெங்களூரு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று, தங்கள் அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். ஒரு உயரிய நோக்கத்திற்காக முழுமையான உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் அவர்கள் நேரில் வந்து பங்கேற்பதைப் பார்ப்பது உத்வேகமளிப்பதாக இருந்தது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் TCS World 10K பெங்களூரு மாரத்தான், பரபரப்பான பெங்களூருவின் சாலைகளில் 10 கிலோமீட்டர் ஓட்டமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ன் நிதியுதவியுடன் நடைபெறுகிறது. 2006ல் நிறுவப்பட்ட ஒரு கல்வி முன்னெடுப்பான ஈஷா வித்யா, தற்போது இந்தியாவிலுள்ள 8,500க்கும் மேற்பட்ட பின்தங்கிய கிராமப்புற குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்கிவருகிறது.