தேவையான பொருட்கள்
2 கப் மாம்பழம்
1 சின்ன நன்கு பழுத்த வாழைப்பழம்
1 கப் தயிர் அல்லது தேங்காய் தயிர்
1 கப் தேங்காய் பால் அல்லது பாதாம் பால்
சுவைக்காக வெண்ணிலா எஸன்ஸ் (விரும்பினால்)
1/4 தேக்கரண்டி மஞ்சள் (விரும்பினால்)
1/2 cm அளவுக்கு இஞ்சித்துண்டு (விரும்பினால்)
செய்முறை
- வாழைப்பழத்தை தோலுரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- மிக்ஸியில் நறுக்கிய வாழைப்பழம், தயிர், மாம்பழத் துண்டுகள், தேங்காய்ப்பால் மற்றும் உங்கள் விருப்பத்தைப்பொறுத்து வெண்நிலா எஸன்ஸ் சேர்த்து, உடல்நலத்திற்காக மஞ்சளையும் துருவிய இஞ்சியையும் சேர்த்து, அரைத்திடுங்கள்.
- கெட்டியாக கிரீம் பதத்தை அடையும்வரை கலவையை அரையுங்கள். பாதாம் பால் அல்லது தேங்காய் பாலின் அளவைத் தேவைக்கேற்ப நிர்ணயித்து சேருங்கள்.
- இந்த ஸ்மூதியை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி உடனடியாக பரிமாறலாம்.
குறிப்பு: தேங்காய்ப்பாலை நீங்களே தயாரிக்கலாம்.