தேவையான பொருட்கள்
1 கப் மாம்பழ கூழ்
¾ கப் தேங்காய் துருவல்
1 கப் தயிர்
½ தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
2-3 சிவப்பு மிளகாய்
½ தேக்கரண்டி வெந்தையம்
¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
உப்பு தேவைக்கேற்ப
சர்க்கரை சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)
1 தேக்கரண்டி நல்லெண்ணை
½ தேக்கரண்டி கடுகு
1 சிவப்பு மிளகாய் (தேவைப்பட்டால்)
5 கருவேப்பிலை இலைகள்
செய்முறை
- மாம்பழ கூழுடன் மஞ்சள் தூள், ¼ கப் தண்ணீர் சேர்த்து, 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இதனிடையே, ஒரு கடாயில் ½ தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தயத்தை அதில் போட்டு, நன்றாக வதக்கவும். அரை பதத்தில் இரக்கவும்.
- பிறகு சிவப்பு மிளகாய்களையும் அதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- வெந்தையமும், மிளகாய்களும் சூடு ஆறியவுடன் அவற்றை தேங்காய் துருவல் மற்றும் தேவைப்படும் அளவுக்கு தண்ணீரும் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
- மாம்பழ கூழ் வெந்தவுடன், அதனை கட்டிகளில்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும். பின் அதில் தேங்காய் கலவையையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- தயிரை மிக்ஸியில் அடித்து, தேங்காய்/மாம்பழ கலவையுடன் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சில நொடிகள் மட்டும் கொதிக்க விட்டு ஸ்ட்வ்வை அணைத்து விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானவுடன், கடுகை சேர்த்து வெடிக்க விடவும்.
- தேவைப்பட்டால், சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு கருவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- கடைசியில், கடாயிலுள்ள தாளிப்பை மோர் குழம்பில் சேர்க்கவும்.