ஈஷா சமையல்

பீட்ரூட் முந்திரி அல்வா

(5 பேருக்கு பரிமாறும் அளவு)

தேவையான பொருட்கள்

500 கிராம் பீட்ரூட்
3 கப் பாதாம் பால், முந்திரி பால் அல்லது வழக்கமான பால் (ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்)
6 மேசைக்கரண்டி பனை வெல்லம் அல்லது வெல்லம்
3 மேசைக்கரண்டி நெய்
½ தேக்கரண்டி ஏலக்காய் தூள்
1 கைப்பிடி முந்திரி
1 மேசைக்கரண்டி உலர் திராட்சை (விரும்பினால்)

அலங்காரத்திற்காக (விரும்பினால்):

1 கைப்பிடி பிஸ்தா

செய்முறை

  • 1. முதலில், பீட்ரூட்டைக் கழுவி, தோலுரித்து, துருவிக்கொள்ளுங்கள். கையில் வைத்திருக்கும் துருவி மூலம் அல்லது ஒரு மிக்ஸி மூலம் எளிதாக துருவிக்கொள்ள முடியும்.
  • 2. அடுத்து, துருவிய பீட்ரூட்டை ஒரு தடிமனான கடாய்க்கு மாற்றுங்கள். பின்னர் அதில் பால் ஊற்றுங்கள்.
  • 3. பீட்ரூட்டையும் பாலையும் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
  • 4. பீட்ரூட்-பால் கலவை கொதித்து நுரை வரத் தொடங்கும் என்பதால், அடிக்கடி கிளறிவிடுங்கள்.
  • 5. பால் சுமார் நான்கில் மூன்று பங்காகக் குறைந்தவுடன், அதில் நெய்யும் வெல்லமும் சேர்த்திடுங்கள். நீங்கள் விரும்பும் பதத்தை அல்வா அடையும்வரை தொடர்ந்து வேகவைக்கவும்.
  • 6. அடுப்பிலிருந்து இறக்குவதற்கு சற்றுமுன்பாக, ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறுங்கள்.
  • 7. இந்த கலவையுடன் முந்திரியைச் சேர்க்கவும்.
  • 8. தொடர்ந்து கிளறுங்கள், பால் முழுவதும் வற்றும்வரை தொடர்ந்து வேகவைக்கவும்.
  • 9. பால் வற்றியவுடன், அடுப்பை அணைக்கவும். பீட்ரூட் அல்வா இப்போது தயார்.
  • 10. பரிமாறும் முன்பாக அல்வாவை சிறிது ஆறவைக்கலாம். இதை சூடாகவும், குளிரவைத்தும் ருசித்து மகிழமுடியும்.

விருப்பமிருந்தால் அலங்கரிப்பதற்காக:

  • 11. பிஸ்தாவை வெந்நீரில் ஊறவைத்து, பாத்திரத்தை மூடி, 15 நிமிடங்கள் விடவும்.
  • 12. பிறகு, தோலை அகற்றவும். அல்லது பிஸ்தாவை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து லேசாக கசக்கி தோல் நீக்கலாம்.
  • 13.  தண்ணீரை வடிகட்டவும்,
  • 14.  பிறகு, தோல் நீக்கிய பிஸ்தா பருப்புகளை ஒரு பாத்திரத்தில் 3 நிமிடங்களுக்கு லேசாக வறுக்கவும், அப்போது அடிக்கடி கிளறிவிடுங்கள். வறுத்த பின்னர் ஆறவிடுங்கள்.
  • 15.  இறுதியாக, தோல் நீக்கிய பிஸ்தாவை பொடியாக நறுக்கவும் அல்லது மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

பரிமாறுவது:

  • 16.  அல்வாவை தனித்தனி கிண்ணங்கள் அல்லது தட்டுகளில் எடுத்துவைக்கவும். பொடித்த பிஸ்தாவைக் கொண்டு அதை அலங்கரிக்கவும்.

டிப்ஸ்: நீங்கள் விரும்பினால் பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சை போன்றவற்றால் அல்வாவுக்கு மேலும் சுவைகூட்டலாம்.