புதிரான ஒலியின் உலகத்துக்குள் சத்குருவுடன் மூழ்கித் திளைப்போம். உலகளாவிய “ஷ்ஷ்ஷ்” ஒலியையும், நிச்சலனம், தியானம், மற்றும் இசையுடனும்கூட அது கொண்டிருக்கும் தொடர்பையும் சத்குரு வெளிப்படுத்துகிறார். எளிமையான அதிர்வுகள் நமது வாழ்க்கையை எப்படி வடிவமைக்கின்றன என்பதைக் காணுங்கள். ஒலி மற்றும் மௌனத்தின் மயங்கவைக்கும் ஆராய்ச்சியில் எங்களுடன் இணையுங்கள்.
கேள்வி: நமஸ்காரம், சத்குரு. தியான நிலையின் சில தருணங்களில், “ஷ்ஷ்ஷ்” என்ற ஒலி வெளிப்படுவதை நான் கவனித்துள்ளேன். ஒரு நபரிடத்தில் அல்லது சூழ்நிலையில் அமைதியை உருவாக்குவதற்கும்கூட இந்த ஒலியானது பல கலாச்சாரங்களில் பயன்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் என்ன?
சத்குரு: நீங்கள் அதைக் கவனித்திருப்பது அற்புதமானது. ஏறக்குறைய உலகின் எல்லா இடங்களிலும், நீங்கள் யாரையாவது அமைதிப்படுத்த விரும்பினால், “ஷ்ஷ்ஷ்” என்று கூறுகிறீர்கள். நான் ஏதோ ஒன்றைச் செய்ய விரும்பும்போது, அதைப்போன்ற ஒரு ஒலியை உச்சரிப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவேளை நான் ஷம்போ, அல்லது ஷிவா என்று கூறுவதாக இருக்கலாம், ஆனால் அதன் அடித்தளமாக இருப்பது, “ஷ்ஷ்ஷ்” என்ற ஒலி. “ஷ்ஷ்ஷ்” என்றால், மௌனம், அசைவின்மை, மற்றும் உச்சநிலை. அசைவின்மை, படைப்பின் உச்சநிலை இயல்பாக உள்ளது.
ஒலி என்பது ஒரு அதிர்வு, மற்றும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் உள்ளது. நீங்கள் ஒரு ட்யூனிங் ஃபோர்க் ஐத் தட்டினால் அல்லது ஒரு கம்பியை இழுத்தால், அது உண்டாக்கும் ஒலிக்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருக்கிறது. “ஷ்ஷ்ஷ்” என்றால், நிசப்தம், அமைதி நிரம்பிய, மௌனம், மற்றும் அசைவின்மை என்பது பொருள். ஒரு தாயாக, குழந்தையிடம், நீங்கள் “ஷ்ஷ்ஷ்” என்று கூறும்பொழுது, அவர்கள் பேசாமல், அமைதியாக இருப்பதை, அல்லது உறங்குவதை நீங்கள் விரும்புவதாக உணர்த்துகிறீர்கள்.
“ஷ்ஷ்ஷ்” என்றால், மௌனம், அசைவின்மை, மற்றும் உச்சநிலை. அசைவின்மை, படைப்பின் உச்சநிலை இயல்பாக உள்ளது.
உங்களது இயற்கையான புத்திசாலித்தனம் செயல்படுவதற்கு நீங்கள் அனுமதித்தால், நீங்கள் யோகாவில் இருக்கிறீர்கள். யோகா என்பது ஒரு இட்டுக்கட்டப்பட்ட விஷயம் அல்ல என்ற காரணத்தால், யோகாவை நாம் ஒரு அறிவியலாகப் பார்க்கமுடியும். யோகா என்பது, ஏற்கெனவே இருந்த ஒன்றைப்பற்றிய ஆழமான புரிதலை அடித்தளமாக கொண்டுள்ளது. யோக அறிவியலில், “ஷ்ஷ்ஷ்” என்ற ஒலியானது அடிப்படையானது ஏனென்றால் அதுதான் அசைவின்மையிலிருந்து வருகின்ற முதல் ஒலியாக உள்ளது. “ஷ்ஷ்ஷ்” ஒலிக்கான வேர் “ம்ம்ம்” என்பது. வாய் மூடிய நிலையில் நீங்கள் வெளிமூச்சு விட்டால், “ம்ம்ம்” ஒலி எழுகிறது. உங்கள் வாய் சிறிது திறந்தால், “ஷ்ஷ்ஷ்” ஒலியாகிறது. உங்கள் வாய் மேலும் திறந்தால், அது “ஊஊஊ” ஆகிறது. உங்கள் வாயை இன்னமும் திறந்தால், அது “அஅஅ”, ஆகிறது.
“ஷ்ஷ்ஷ்” என்ற ஒலியானது, அமைதி, நிசப்தம், உறக்கம், அசைவின்மை, அல்லது தியானத்தன்மை – ஷிவா, என்ற பரிமாணத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. இது ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பல வித்தியாசமான வழிகளில் உள்ளது. ஆனால் சில நோக்கங்களுக்காக பரிணாமம் அடைந்திருக்கும் நீங்கள் ஒரு தனிமனிதராக அல்லது ஒரு கலாச்சாரமாக, உங்களைச் சுற்றிலும் குறிப்பிட்ட விதங்களிலான ஒலிகளை உருவாக்குவதற்கு முயற்சிப்பீர்கள்.
எங்கள் வீட்டில் ஒரு நாடகபாணியில் இது நிகழ்வது வழக்கம். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எனக்கும், என் அண்ணனுக்கும் ராக் அண்ட் ரோல் தவிர வேறெதுவும் பிடிக்காது. உலகெங்கும் இளைஞர்களை இந்த விதங்களிலான ஒலிகள் உற்சாகப்படுத்துவது ஏனென்றால் அவைகள் ஆடவைப்பதாக உள்ளன. ராக் அண்ட் ரோல் எங்களது தாயைத் தொந்தரவு செய்யவில்லை, ஆனால் இந்த இசையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று என் தந்தை குறைந்தபட்சம் ஒப்புக்கொண்டார். அவர் சாஸ்திரீய சங்கீதத்தைக் கேட்க விரும்பினார். அந்த நேரம் எங்களால் சாஸ்திரீய சங்கீதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால், உங்களுக்குத் தெரியும், ராக் அண்ட் ரோல் இசையை குறைவான ஒலியளவில் கேட்கமுடியாது – அது ஒரு குறிப்பிட்ட டெசிபெல் அளவில் இருக்கவேண்டும். நாங்கள் ஒலி அளவை அதிகரித்தால், என் தந்தையால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அவர் மிகவும் மும்முரமாக, அவரது செய்தித்தாள் அல்லது ஒரு புத்தகத்தில் மூழ்கியிருக்கும்போது, நாங்கள் மெல்லமெல்ல ஒலி அளவை அதிகரித்தோம். தன்னுணர்வில்லாமல், அவரது பாதம் தாளமிடத் தொடங்கியது. அந்தத் தருணத்தில், அவரைப் பிடித்து, நாங்கள் கூறினோம்,” நீங்கள் முன்முடிவுடன் இருக்கிறீர்கள் – அதனால்தான் எங்களது இசை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் இப்போது பாருங்கள், உங்களுடைய பாதம் தாளமிடுகிறது! ஆகவே, உங்களுக்கும் எங்கள் இசை விருப்பமாகத்தான் உள்ளது.”
படைப்பின் பரப்பில் அனைத்து அதிர்வுகளுள் - அசைவின்மையிலிருந்து பொருள்தன்மையான வெளிப்பாடு வரை – பொருள்தன்மையான வெளிப்பாடுதான் அதிர்வின் கீழ்மட்ட வடிவமாக உள்ளது.
விருப்பங்களும், விரும்பாமைகளும், உங்களுக்குள் இருக்கும் எதிர்ச்செயல்கள். ஆனால் நீங்கள் வெறுமனே கேட்டால், ராக் அண்ட் ரோல் என்பது நாட்டுப்புற இசையின் ஒரு நவீன பிரதிநிதித்துவம்தான் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். மற்றும் நாட்டுப்புற இசையின் ஒருசில பலமான மாறுபாடுகள் , இசையின் வேறு வடிவங்களாக மாறியுள்ளன. ஆனால், முக்கியமாக, உங்களது உடலை ஆடச்செய்யும்படியான இசையானது, ஸ்தூலமான( பொருள்தன்மை) இயல்புடையது.
படைப்பின் அளவுகோலின் அனைத்து அதிர்வுகளுள் - அசைவின்மையிலிருந்து பொருள்தன்மையான வெளிப்பாடுவரை – பொருள்தன்மையான வெளிப்பாடுதான் அதிர்வின் கீழ்மட்ட வடிவமாக உள்ளது. இயற்கையாகவே உடலை ஆடச்செய்யும் ஒலிகளால் ராக் அண்ட் ரோல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு மாறாக, நீங்கள் வேறு விதங்களில் இருக்கும் இந்திய சாஸ்திரீய ராகங்களைப் போன்ற இசையைக் கேட்டால், நீங்கள் நிச்சலனம் ஆகிவிடுவீர்கள். நீங்கள் அசைவில்லாமல் அமர்ந்திருப்பீர்கள். இந்திய இசைக்கலைஞர்கள் முதல் விஷயமாக, சம்மணமிட்டு அமரக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. அவர்களால் நின்றுகொண்டும், கால்மாற்றி நடனமாடிக்கொண்டும் பாடமுடியாது. அவர்கள் அசையாமல் அமரவேண்டியுள்ளது ஏனெனில் அதுதான் சங்கீதத்தின் அடித்தளமாக இருக்கிறது.
அசைவின்மையில், அந்தத் தருணத்தில் தோன்றும், சூட்சுமமான, அதிர்வின் சாத்தியம் உள்ளது. அசைவின்மை, மரணம் போன்றதல்ல. அது ஒரு தீவிரமான நிச்சலனம், ஆனால் பெரும்பாலான மக்களும் அதை உணராமல் போகும் அளவுக்கு அது மிகவும் சீரிய வடிவிலான அதிர்வாக உள்ளது. என்னிடமிருந்து நீங்கள் கேட்கும் “ஷ்ஷ்ஷ்” ஒலியானது கலாச்சாரத்தை அடித்தளமாக உடையதல்ல. கலாச்சரங்கள், மக்கள் ஒன்றிணைவதற்கான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
ஒரு கலாச்சரத்தின் முதன்மையான இலக்கு – அதன் பிழைப்பாக இருக்கலாம், மகிழ்ச்சி, சாகசம், அல்லது படையெடுப்பாக இருக்கலாம் – அதனுடைய இசையில் பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரே கலாச்சாரத்துக்குள்கூட, வெவ்வேறு மக்களும் அவர்கள் ஈடுபட்டிருக்கும் செயல்பாடுகளின் விதங்களைப்பொறுத்து, வெவ்வேறு விதங்களிலான இசைக்கு இயற்கையாகவே ஈர்க்கப்படுகின்றனர். தியானத்தன்மை அல்லது விடுதலைக்கான பேரார்வம் உங்களது இலக்காக இருந்தால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதமான இசையை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள்.
ஒரு கலாச்சாரத்தின் அடிப்படை இலக்கு, பிழைப்பாக, இன்பமாக, சாகசமாக, ஆக்கிரமிப்பதாக என்று என்னவாக இருந்தாலும், அந்த கலாச்சாரத்தின் இசையில் அது பிரதிபலிக்கும்.
நேசம் உங்களது வழியாக இருக்குமேயானால், நீங்கள் வேறு விதமான இசையை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். பல இசைக் கலைஞர்களும், முற்றிலும் ஒலியின் வழியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாமல் இருப்பதால், அவர்கள் வார்த்தைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் குறைந்தபட்சம் உலகெங்கும் சாஸ்திரீய இசைக் கலைஞர்களால், அந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் அவசியம் இல்லாமல், கலப்பில்லாத ஒலியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிகிறது
பெரும்பாலான தாய்மார்கள், அவர்களது சம்பிரதாயக் கல்வியின் தாக்கம் அவர்களிடத்தில் அதிகமாக இல்லையென்றால், தங்களது கைக்குழந்தைகளுடன் தொடர்புகொள்வதற்கென்று பிரத்யேகமான ஒலிகளை எப்போதும் பயன்படுத்துகின்றனர். நான் கல்விக்கு எதிராக இல்லை, ஆனால் நவீனக் கல்வியானது பெருமளவுக்கு, சொற்களின் அடர்த்தியான தொகுப்பின் அடிப்படையாக உள்ளது. “ஷ்ஷ்ஷ்” ஒலியானது ஒரு தரமான உதாரணமாக இருப்பதுடன், நீங்கள் அதைக் கவனித்தது மகத்தானது.