Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
யாராலும் உங்கள் மனத்தில் வலியை உருவாக்க முடியாது. அது நீங்கள்தான் – உங்களைச் சுற்றி நடக்கும் விஷயத்திற்கு எதிர்ச்செயலாக நீங்கள்தான் அதை உருவாக்கிக்கொள்கிறீர்கள்.
வயது அதிகமாகும்போது, உங்கள் உடலின் வேகம் குறைந்து போகலாம். ஆனால், உங்கள் உயிரோட்டம் குறைய வேண்டியதில்லை.
நீங்கள் பிணைக்கப்பட்டிருப்பது, உங்களுக்குப் பிடித்தமான அல்லது நேசமானவர்களுடன் மட்டுமல்ல. அதைவிட ஆழமாக, உங்களுக்குப் பிடிக்காதவர்கள், நீங்கள் வெறுக்கும் மனிதர்களுடன் கட்டப்பட்டு இருக்கிறீர்கள்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம். நேற்று இருந்ததை விட இன்று ஒரு படி மேலானவராக இருக்கிறோமா என்று மட்டும் பாருங்கள்.
நாம் அனைவருமே ஞானத்துடன்தான் பிறக்கிறோம். அறியாமையில் இருப்பது நாமாக தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான்.
உயிர் இதமான இயல்பு நிலையில்தான் இருக்கிறது. மனம் மட்டும்தான் அழுத்தத்தில் இருக்கிறது.