எடைக் குறைப்பிற்கான வழிமுறைகள் இன்று படுவேகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன. யோகம் முதல் தெய்வீகம் வரை அனைத்துமே எடைக் குறைப்பிற்காகத்தான் என்று சந்தையில் விலைப் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில், எடைகுறைப்பு பற்றியும், யோகத்தினால் ஏற்படும் இரட்டிப்பு பலன்களையும் விளக்குகிறார் சத்குரு. மேலும் படியுங்கள்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல் எடையைக் குறைக்கும் யோகா!

நீங்கள் யோகா செய்யும்போது, அதிகப்படியான எடை கண்டிப்பாகக் குறைந்துவிடும். யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள் அமைப்புகளுக்கு புத்துணர்வு ஊட்டி, நீங்கள்

எடையைக் குறைப்பதற்காக ஈஷா யோகா மையத்தில் நாம் யோகா கற்றுத் தரவில்லை. இது உங்களை ஒல்லியாக்குவதற்கோ அல்லது உங்கள் தலைவலிக்கோ அல்லது முதுகுவலிக்காகவோ இல்லை.

அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும்தான் உடல் உண்ணும். அதற்கு மேல் எதையும் அது உண்ணாது. மற்ற உடற்பயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப் பயிற்சிகள் செய்து வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும். நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக் கொள்கிறது. இதுதான் யோகாவில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமும் நன்மையும்.

கிரியா செய்தால்...

கிரியா என்னும் யோகப் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பிக்கும்போது, சிலர் எடையிழக்கத் துவங்குவார்கள். சிலருக்கு எடை கூடத் துவங்கும். உங்கள் ஜீரண சக்தி, மோசமாக, அதாவது உணவை உடலாக மாற்றும் உங்கள் திறமை மோசமாக இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கும்போது, ஜீரண நெருப்புகள் தூண்டப்பட்டு, ஜீரணசக்தி மேம்பட்டு, உணவு உடலாக மாறும் திறன் அதிகரித்து, உங்கள் உடல் எடை கூடத் துவங்குகிறது.

உங்கள் ஜீரண அக்னி ஏற்கனவே நன்றாக செயல்பட்டு இருக்கும் நிலையில், நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கினால், மீண்டும் அவற்றின் திறன் மேம்படும். இருந்தாலும் அவை உணவை உடலாக மாற்றாமல், சக்திநிலையின் சூட்சுமப் பரிமாணமாக மாற்றிவிடும். இப்போது நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும், எடை குறைந்து கொண்டே போவதைக் காண்பீர்கள். கிரியாக்களை நீங்கள் பயிற்சி செய்யும்போது, அதிகப்படியான உணவை சாப்பிட்டாலும், எடை கூடாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள். உங்கள் எடை குறையவும் செய்யலாம். இல்லையேல் இதற்கு நேர்மாறாக நீங்கள் உணவு உண்பது மிகவும் குறைந்து போனாலும், எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விகிதம் மாறிவிடுவதால் இப்படி ஆகிறது.

யோகா எடை குறைப்பதற்காகவா?

எடையைக் குறைப்பதற்காக ஈஷா யோகா மையத்தில் நாம் யோகா கற்றுத் தரவில்லை. இது உங்களை ஒல்லியாக்குவதற்கோ அல்லது உங்கள் தலைவலிக்கோ அல்லது முதுகுவலிக்காகவோ இல்லை. ஆரோக்கியமாக, அமைதியாக, அன்பாக ஆவது போன்றவை கூட யோகாவின் கூடுதல் பலன்கள் அல்லது பக்க விளைவுகள் என்று கூட சொல்லாம். யோகாவின் நோக்கம் இவை அல்ல.

உடலைத் தாண்டி உங்களுக்குள் இருக்கும் இன்னொரு பரிமாணத்தை உயிர்ப்புடன் வைப்பதுதான் யோகாவின் நோக்கம். அந்தப் பரிமாணம் உயிர்ப்புடன் இருக்கும்போதுதான், இந்தப் பிரபஞ்சம் உங்களுக்காக எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாகத் திறக்கத் துவங்கும். உங்களுக்குள் உடலைத் தாண்டிய அந்தப் பரிமாணம் உயிர்ப்படைந்து விட்டதால், பிறகு இவையெல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.