சத்குரு: ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பாலயோகி திருஞான சம்பந்தர் ஞானமடைந்த ஒரு மனிதராக இருந்தார். ஆறு வயதிலிருந்து அவர் தனது ஆன்மீகப் பரிமாணத்தை மிக அழகானதொரு வழியில் வெளிப்படுத்தினார். அவர் குழந்தையாக இருந்ததால் அவரால் போதிக்க இயலவில்லை, அதனால் அவர் தாம் ஞானமடைந்ததை வெளிப்படுத்துவதற்கு அற்புதமாகப் பாடினார். பெரும்பாலான பாடல்கள் பதிவு செய்யப்படாமல் போயின, ஆனால் பதிவு செய்யப்பட்ட சிறிதளவு பாடல்களும்கூட அளவிடற்கரிய அழகு பொருந்தியவையாக உள்ளன.

திருஞான சம்பந்தர் தனது திருமணத்தின்போது நிகழ்த்துவதற்காக இந்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார் – அவருக்கும், அவரது மணப்பெண்ணுக்கும் மட்டுமல்லாமல், திருமணத்துக்கு வருகை தரும் எல்லா விருந்தினர்களுக்கும் இது ஒரு உச்சபட்ச ஒருமையாக இருப்பதற்கு அவர் விரும்பினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திருமணத்திற்கு சம்மதித்த திருஞானசம்பந்தர் 

திருஞான சம்பந்தர் ஒரு அரச வம்சத்திலிருந்து வந்தவராகையால், அவர் இளமைப்பருவத்தை எட்டியதும், திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவருக்கு அப்படிப்பட்ட ஆவல் இல்லையென்றாலும், அவரது குடும்பத்தினரும், இராஜ்ஜியத்தினரும் அந்தத் திசை நோக்கிச் செல்வதற்கு வலியுறுத்தினர். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட பெண்ணை அடையாளம் கண்டு, அந்தப் பெண் மணப்பெண்ணாக இருக்கமுடிந்தால், திருமணம் நடக்கக்கூடும் என்றார். அவள் அழகானவள் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அவர் அவளை எண்ணவில்லை. அது என்னவென்றால், வேறு ஒரு விஷயத்தைச் செய்வதற்கு அவளை ஒரு கருவியாக அவர் பார்த்தார்.

திருஞானசம்பந்தரின் மணப்பெண்ணின் சிறப்பு

அந்தப் பெண்ணும் அரச வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். ஆனால் அவளது இராஜ்ஜியமும், சம்பந்தரது இராஜ்ஜியமும் நட்புறவில் இல்லை. அவள் ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோதே, அவள் எவ்வளவு தீவிரமான ஆன்மீகத்தன்மையுடன் இருந்தாள் என்றால், அவளது பெற்றோர்களால் அவளை வீட்டில் வைத்திருக்க இயலவில்லை. ஆகவே, அவளது எட்டு வயதிலேயே, அவளை காசிக்கு அனுப்பிவைக்குமளவு அவளது பெற்றோரை எப்படியோ வற்புறுத்தியிருந்தாள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இது அசாத்தியமான ஒன்று – இப்போதுகூட கடினம்தான்! ஆனால் அவள் இதை ஒருவாறு நடத்திக்கொண்டு, அவளது பதினான்கு வயது வரைக்கும் தனது குருவுடன் காலம் கழித்தாள்.

காலப்போக்கில், அவளது விதி ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்வதைக் கண்ட அவளது குரு, எப்படியும் அவளது பெற்றோர் இந்த வயதில் அவளை மணம் முடித்துவைப்பார்கள் என்பதை உணர்ந்து, அவளை சம்பந்தரை நோக்கி நகர்ந்து செல்லுமாறு கூறினார். சாதாரணமான சூழல்களில் திருஞானசம்பந்தரால் செய்திருக்கமுடியாத ஒன்றை நிகழ்த்தவிருக்கும் திருஞான சம்பந்தரின் திட்டத்தை குரு வெளிப்படுத்தினார் – அவள் முழுமையாக அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அவளும்கூட தனது வாழ்க்கையில் திருமணத்தைப் பற்றி சிந்தித்திருக்கவில்லை, ஆனால் இப்போது திருஞானசம்பந்தர் தனித்துவமான ஒரு நபர் என்பதையும், திருமணத்திற்கென்று அவர் வித்தியாசமான திட்டம் வைத்திருப்பதையும் அறிந்ததால், அவள் சம்மதித்தாள்.

இரண்டு குடும்பங்களும் ஒருவாறு சமரசம் செய்துகொண்டன, ஏனென்றால் இந்த இரண்டுபேரும் மிகுந்த அசாதாரணமான மனிதர்கள். அனைவராலும் அதைக் காணமுடிந்ததுடன், இதற்குள் திருஞானசம்பந்தரை பெருந்திரளான மக்கள் ஆன்மீகரீதியாக பின்பற்றிக்கொண்டிருந்தனர். ஆகவே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணச் சடங்குகளின் சாராம்சம்

தென்னிந்தியாவில் பல முக்கியமான மக்கள் அழைக்கப்பட்டனர். 3000 மக்களுக்கும் அதிகமானோர் திருமணத்திற்காக ஒன்றுகூடினர். வழக்கமாக, இந்தியத் திருமண சடங்குகளில், பெரும்பாலான மக்கள் எந்தக் கவனமும் செலுத்தாத குறிப்பிட்ட மந்திரங்களை திருமணத்தை நடத்திவைப்பவர் உச்சரிக்கிறார். அவர் என்ன கூறுகிறார் என்றால், இந்த இரண்டு நபர்களையும் ஏதோ ஒன்று இணைத்துள்ளது – இது வெறும் ஹார்மோன்களாக இருக்கலாம் – ஆனால் இந்த ஒருமை உச்சபட்ச ஒருமைக்கு வழிநடத்தட்டும். ஒட்டுமொத்த சடங்கும் அதனைக் குறித்ததாகவே இருக்கிறது – ஆண், பெண் இருபாலரின் இந்த எளிமையான ஈர்ப்பு ஒரு பேராவலாக உருவெடுத்து, ஞானமடைதலுக்கு உங்களுக்கான ஒரு வழிமுறையாக இருக்கட்டும்.

இந்து வாழ்க்கை முறையில் திருமணச் சடங்கு அப்படிப்பட்டதுதான். பெரும்பாலான மக்கள் ஹார்மோன்கள் அல்லது உணர்ச்சிகளைக் கடந்து செல்வதில்லை. அவர்கள் நல்லவிதமாக இனிமையான உணர்ச்சிகளுடன் இருந்தால், அதுவே ஒரு வெற்றிகரமான திருமணமாக கருதப்படுகிறது. ஆனால் திருமண செயல்முறையானது, ஒரு உச்சநிலை ஒருமையை எதிர்பார்த்திருக்கிறது. அது வெறுமனே உணர்ச்சியளவிலான ஒருமை அல்லது ஹார்மோன் அளவிலான நிறைவுக்கானது அல்ல.

அனைவருக்கும் முக்தி அளித்த திருஞானசம்பந்தர்

சம்பந்தர் தனது திருமணத்திற்காக இந்த திட்டத்துடன் இருந்தார் – அவருக்கும், அவரது மணமகளுக்கும் மட்டுமல்லாமல், வரவிருக்கும் எல்லா விருந்தினர்களுக்கும் இந்தத் திருமணம் ஒரு உச்சநிலை ஒருமையாக இருப்பதற்கு அவர் விரும்பினார். அவர் ஒரு பெருந்தன்மையான மனிதர்! திருமணம் நிகழும் அந்த சில மணி நேரங்களில், மணவிழா விருந்தினர்களாக இல்லாமல், அவர்கள் தீவிரமான ஆன்மீக சாதகர்களாக மாறும்படியான ஒரு சூழலை அவர் உருவாக்கினார். அதற்கான குறிப்பிட்ட கணம் வந்தபோது, அவர்கள் அனைவரும் தமது உச்சநிலை இயல்பை உணர்ந்து, அங்கேயே தங்களது உடல்களை உதிர்த்தனர். சம்பந்தரும், அவரது மணமகளும்கூட உடல் உதிர்த்தனர். 3000 க்கும் அதிகமானவர்கள் முழு விழிப்புணர்வில் தங்களது உடல்களை உதிர்த்தனர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மற்றொரு கவித்துறவி வந்தார். அவரிடமிருந்து சம்பந்தரைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். வள்ளலார் மிகுந்த கவித்துவமாக புலம்பினார், “ஓ, அந்தத் திருமணத்தில் இருப்பதற்கு எனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? நான் ஏன் அழைப்பற்றவனாகிவிட்டேன்? இப்போது என் ஆன்மீகத்துக்காக இந்த மாதிரி நான் வருந்திப் பாடுபடவேண்டியுள்ளதே!”