கேள்வி: வணக்கம், என் பெயர் சுமோனா சக்ரவர்த்தி. நமஸ்காரம் சத்குரு! சத்குரு, நான் ஜோதிடம் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறேன். அதாவது, அது ஒரு விஞ்ஞானம் என்று எனக்குத் தெரியும், ஆனால் திருமணத்திற்கு முன் ஜாதகத்தைப் பொருத்த வேண்டும் அல்லது செவ்வாய் தோஷம் கொண்ட பெண் அந்த பையனை திருமணம் செய்வதற்கு முன்பு முதலில் ஒரு மரத்தை திருமணம் செய்ய வேண்டும் அல்லது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களுக்கு உதவ குறிப்பிட்ட கற்களை ஒருவர் அணிய வேண்டும், இதைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியென்றால், இதில் உள்ள உண்மை என்ன, இவை அனைத்தையும் பற்றிய உண்மையும் என்ன? நம் தலைமுறையினருக்குப் புரிந்துகொள்வது மிகவும் குழப்பமாக இருக்கிறது, ஏனென்றால், ஒன்று, அதற்கு எதிர்ப்பு செய்கிறோம், அல்லது பெற்றோரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து விடுகிறோம். எனவே, அதைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவினால், அது அற்புதமாக இருக்கும். மிக்க நன்றி, பிரணாம்.

ஜாதகப் பொருத்தம் இருந்தால் போதுமா?

சத்குரு:  நமஸ்காரம் சுமோனா! நான் ஒரு மரத்தை திருமணம் செய்துகொள்ளும் இந்த யோசனையை விரும்புகிறேன். நான் மரங்களோடு திருமணம் செய்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் (சிரிக்கிறார்). இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறேன்; மரம் மிகவும் நிலையான துணைவர், வேரூன்றி இருப்பவர்! இன்றைய வாழ்க்கைமுறையில், இப்படி வேரூன்றி இருக்கின்ற ஒருவரை பெறுவது என்பது அரிதான விஷயம். இது உண்மையில் ஒரு சிறந்த யோசனை. மேலும், ஜாதகப் பொருத்தமும் பார்க்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், நட்சத்திரங்கள் பொருந்துகின்றன, ஆனால் இந்த இரண்டு முட்டாள்களையும் நீங்கள் எவ்வாறு பொருத்துவீர்கள்? இது சாத்தியமில்லை, இந்த இரண்டு முட்டாள்களையும் யாராலும் பொருத்த முடியாது.  

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்கள் கணவனுடனோ மனைவியுடனோ நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்களா இல்லையா என்பதை, உங்களுக்குத் தெரியாத மூன்றாவது நபர் உங்களுக்கு சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்?

திருமண பந்தம் சிறப்பாக…

திருமணம், Marriage

அவர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்பேற்றுக் கொண்டால், ஓரளவு ஈடுபாட்டைக் காட்டி, தங்கள் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் வாழ்ந்தால் மட்டுமே, அற்புதமான ஒன்று நடக்கலாம். இரண்டு முட்டாள்களைப் பொருத்தினால், நீங்கள் அவர்களை எப்படிப் பொருத்த முயற்சி செய்தாலும், எதுவும் செயல்படப் போவதில்லை.

அதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு காதல் உறவுகளும் திருமணங்களும் சில காலம் மட்டுமே அழகாக இருக்கிறது, அதன் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் பொருந்த முயற்சிப்பதால், அது ஒரு பெரிய கவலையாக அல்லது இடைவிடாத உராய்வாக இருக்கிறது. நீங்கள் மக்களைப் பொருத்த முடியாது. எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை, அது அப்படி செயல்படாது. மற்றவரின் நல்வாழ்வை உங்கள் சொந்த நலனுக்கு மேலாக நீங்கள் வைத்திருந்தால், அனைத்தும் செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கை இன்னொருவரிடம் இருந்து மகிழ்ச்சியைப் பிழிவதாக இருந்தால், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கசப்பாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள். 

மூன்றாவது நபர் உங்களைப் பற்றி கணிக்கவேண்டாம்!

உங்கள் வாழ்க்கை உங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதாக இருந்தால், அனைத்தும் வேலைசெய்யும். நட்சத்திரங்கள் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை. எப்படியிருந்தாலும், நட்சத்திரங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், நீங்கள் மனிதனாக இங்கு வந்த பிறகு, உங்களது வாழ்க்கையை நீங்களே கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கிரகத்தில் தனது சொந்த வாழ்க்கையை கட்டமைக்கக்கூடிய ஒரே உயிரினம் இதுதான். அதை விட்டுவிட்டு, நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்க கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற உயிரற்ற விஷயங்களை செயல்பட அனுமதிக்க விரும்பினால், அது வாழ்வதற்கான துயரமான வழி.

எனவே, நீங்களும் நீங்கள் தாக்கம் ஏற்படுத்தும் யாராக இருந்தாலும், தயவுசெய்து அவர்களின் வாழ்க்கையை அவர்களது கையில் எடுக்கச் சொல்லுங்கள். உங்கள் கணவனுடனோ மனைவியுடனோ நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்களா இல்லையா என்பதை, உங்களுக்குத் தெரியாத மூன்றாவது நபர் உங்களுக்கு சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்? எவ்வளவு அசிங்கம்! இந்த பொறுப்பை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் எந்த வகையான முட்டாளை திருமணம் செய்தாலும் பரவாயில்லை, நீங்கள் நன்றாக வாழ்வீர்கள் என்ற பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள், அது ஒன்றுதான் நீங்கள் நன்றாக வாழ்வதற்கான வழி.