IYO-Blog-Mid-Banner

 

1. ஒரு ஆன்மீக கண்ணோட்டத்தில், மனிதர்களிடமும் மனித சுற்றுச்சூழல் அமைப்புகளிடமும் தொற்றுநோய் அவர்கள் வாழும் முறையையும், இணைந்திருக்கும் முறையையும் 'மீண்டும் மாற்றியமைக்க‘ கேட்டிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

சத்குரு: சமீப நாட்களாக, “நாம் மீண்டும் உலகை உன்னதமாக்குவோம்!” என்று விலங்குகள் ஒலியெழுப்புகின்றன. மும்பை வீதிகளில் மயில்கள் நடனம் ஆடுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக இருந்த புகை மண்டலம் விலகியதால் முதல்முறையாக பஞ்சாபிலிருந்து, இமயத்தின் சிகரங்களைக் காணமுடிகிறது. நீண்ட காலமாக, இந்த கிரகத்தை நாம் துவம்சம் செய்துகொண்டு, அதனுடைய உயிர்த்தன்மையை உறிஞ்சிக்கொண்டுள்ளோம். கிரகத்தில் உள்ள மற்ற ஒவ்வொரு உயிரினங்களும் மனித வைரஸைப் பார்த்து பயந்துபோய் இருக்கின்றன.

மாசுபடுத்தும் தொழில்நுட்பங்களிலிருந்து மனிதகுலம் ஒவ்வொரு ஆண்டும் 3 வார இடைவெளி எடுக்க வேண்டும் - எல்லா இயந்திரங்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த ஓய்வை உள்நோக்கி திருப்ப பயன்படுத்தலாம். எல்லோரும் தங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், அவர்களின் திறனைப் பொறுத்து மேம்படுத்தவும் இந்த நேரத்தைப் பயன்படுத்தினால், நாம் ஒரு அருமையான உலகில் வாழ்வோம்

வைரஸ் மெதுவாக இறப்பை வீட்டிற்கு கொண்டு வருகிறது, அனைவரின் மனதிலும் இதயத்திலும். தானும் இறக்கக்கூடிய ஒரு மனிதர்தான் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன், இயல்பாகவே உங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைப்பீர்கள். மக்களின் வாழ்க்கை முறைகள் குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் பலமுறை அது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஒருமுறை நான் அமெரிக்காவில் ஒரு மாலில் இருந்தேன், அங்கே உங்கள் மூக்கு முடியை ஒழுங்கமைக்க இருபது வகையான கருவிகள் இருந்தன! ஆகவே, இது நம் வாழ்க்கையை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான நேரம்: நாம் வாழ்வின் தேவைகளை கொஞ்சம் குறைத்து வாழ முடியுமா? நீங்கள் அதை ஒரு சட்டமாக்கினால், அது அசிங்கமாகிறது, ஆனால் உணர்வுபூர்வமாக நடந்தால், அது அற்புதம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

2. இந்த வைரஸ் புத்துயிர் பெறுவதற்கான வழிகளில் நம் அனைவரிடமும் 'பேசும்' சில வரிகளை நீங்கள் எழுத வேண்டியிருந்தால்… நம் மனநிலையிலிருந்து நமது யதார்த்தத்தை மீண்டும் உருவாக்குவது வரை, இந்த வைரஸ் எந்த வகையான பேச்சை உருவாக்கும்?

சத்குரு: உண்மையில், நீங்கள் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை வைரஸ் உறுதி செய்துகொள்ள விரும்புகிறது! அதற்கு எதிராக நீங்கள் சில ஆன்டிபாடிகளை {antibodies} உருவாக்க விரும்பவில்லை. பாருங்கள், விலங்குகள் அல்லது வேறு சில உயிரினங்களில் வைரஸ் வாழ்ந்திருக்கலாம், ஆனால் அதன் வாழ்விடம் சுருங்கியது. எனவே, நம்மில் பலர் இருப்பதால் அது உங்களிடம் வர முடிவு செய்தது. அதன் நோக்கம் உங்களைக் கொல்வது அல்ல, ஆனால் வாழ ஒரு புதிய வாழ்விடத்தைக் கண்டுபிடிப்பது. அது மிகவும் தீவிரமாக வாழ்கிறது, அதை நாம் தாங்கிக்கொள்ளவும், சரிந்துவிடவும் முடியாது. ஆனால் சில மாதங்களில் வைரஸ் தன்னை ஒரு லேசான பதிப்பாக மாற்றிவிடும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர், இதனால் அது நம் உடலில் எளிதில் வாழ முடியும்.

எனவே வைரஸ் உங்களுக்கு எதையும் கற்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவை வெகுகாலமாக இங்கேதான் இருக்கின்றன என்பதை இந்த சூழ்நிலை மக்களை விழிப்புணர்வாக உணர வைத்துள்ளது. நீங்கள் நடந்து செல்லும் மண்ணும் கூட உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது. இதை நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உணர்ந்தால், நிச்சயமாக நாம் இந்த கிரகத்தின் மீது மிக மெதுவாக நடப்போம்.

3. நம் இந்திய சமூகங்களில், நெருக்கடி காலத்தில் நாம் எப்படியும் ஒன்றாகவே செயல்படுவோம் - நம் இளைய தலைமுறையினர் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வெளியே மளிகைக் கடைக்கு சென்று வாங்கி வருகிறார்கள் அதில் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் தனிமனிதவாதம் அதிகமாக இருக்கும் மேற்கத்திய நாடுகளில், வயதானவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு, உள்கட்டமைப்பு கூட இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தனியாக வசிக்கும் முதியவர்கள் இதுபோன்ற தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்று ஒரு நண்பர் கூறுகிறார். தனிமனிதவாதம் சில கட்டங்களிலும், சில சூழ்நிலைகளிலும் அதை முடியாமல் இருப்பதை மேற்கு நாடுகள் உணரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சத்குரு: அனைத்து இளம் இந்திய பையனும் பெண்ணும் உங்களுக்காக மளிகை சாமான்களை எடுத்து வர தயாராக இருப்பதாக கற்பனை செய்து பார்க்க வேண்டாம். பொருளாதாரம் அதை கட்டாயப்படுத்துவதால் அவர்கள் அதைச் செய்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்பு, ஒரு குடும்பம் என்றால், உங்கள் மனைவி, குழந்தைகள், பெற்றோர், மாமாக்கள், அத்தைகள், தாத்தா பாட்டி - ஒரு குடும்பத்தில் 300-400 பேர் இருப்பார்கள். இதற்கு ஒரு முக்கியமான அம்சம் ஒரு குடும்பத்தில் பொருளாதார பிணைப்பு; குடும்பத்தின் ஒரு தலைவர் அனைத்து பொருளாதார சக்தியையும் கட்டுப்படுத்தினார், எனவே எல்லோரும் ஒன்றாகவே இருந்தனர், இல்லையெனில் அவர்கள் ஆதரவற்றவர்களாக இருப்பார்கள்.

இன்று எல்லோரும் வெளியே செல்லலாம் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம். இப்போது பொருளாதார பிணைப்பு இல்லை. இது மேற்கத்திய நாடுகளைப் பற்றியது மட்டுமல்ல. இந்தியாவிலும், தற்போது பொருளாதார நல்வாழ்வு அதிகமாகி வருவதால், மக்கள் தனியாக வாழ விரும்புவார்கள், ஏனென்றால் அவர்கள் யாரையும் சார்ந்து நிற்க அவசியம் இருப்பதில்லை. இன்று, குடும்பம் என்றால் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்று பொருள். பெற்றோர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால், சில சமயங்களில் அவர்கள் உங்களைப் பார்க்கலாம். மேற்கத்திய நாடுகளில் இது அதற்கும் கீழே போய்விட்டது. அங்கே இப்போது ஒரு குடும்பம் என்றால் ஒரு நபர் - ஒரு ஆணோ பெண்ணோ - ஒரு குழந்தையுடன் வாழ்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள தனித்து விடப்படுகிறார்கள்; சமுதாய வீடுகளில் இருப்பவர்கள் கூட மருத்துவ உதவியைப் பெறலாம், ஆனால் சேர்ந்து வாழும் ஒரு சூழல் அங்கே அவசியமாக இல்லை.

குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஒரு உந்துதல் தேவை என்பதை ஒப்புக்கொள்வதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். தேவைகள் இல்லாவிட்டால் அது வீழ்ச்சியடையும். இதனால்தான் ஒரு விழிப்புணர்வு சமுதாயத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது, அங்கு இருக்கும் அனைவரும் விருப்பத்துடன் ஒரு ஆழமான பிணைப்புடன் வாழ வேண்டும். பல குடும்பங்கள் இதை இன்னும் அனுபவிக்கின்றன, ஆனால் துரதிருஷ்டவசமாக பலர் அதை இழக்கிறார்கள்.

4. இந்த தொற்றுநோயைப் பற்றி தனிப்பட்ட முறையில் சக்தியளவில் உங்களின் வெளிப்பாடுகள் என்ன? உங்கள் சுயசரிதை புத்தகத்தில் நீங்கள் சிவனுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறுவதால், இந்த நிகழ்வு மற்றும் மனித வரலாற்றில் அதன் இடம் குறித்து உங்களிடம் அவர் என்ன பகிர்ந்துகொண்டார்?

சத்குரு: அது சுயசரிதை அல்ல, வாழ்க்கை வரலாறு. எனவே என்னைக் குறை கூற வேண்டாம்! “சிவன்” என்று நீங்கள் அழைக்கும் தன்மை வைரஸுடன் நன்றாக இருக்கிறது. வைரஸ் வலுவாக நடனமாடும் வரை, "என் ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் அவர் வாழ்க்கையோடு இருக்கிறார். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், வைரஸ் கூட ஒரு வாழ்க்கையை கொண்டுள்ளது, அது இப்போது தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக நடத்துகிறது. இது சுமார் பத்து வெவ்வேறு விதங்களில் தன்னை மாற்றிக்கொண்டது. நீங்கள் ஒரு தடுப்பூசி கொண்டு வந்தாலும், அது அவைகளில் ஒன்றை கொல்லக்கூடும். எனவே அது உண்மையில் புத்திசாலித்தனமாக இருக்கும்போது, சிவன் அதை ஆசீர்வதிப்பார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு பசுபதி, எல்லா உயிர்களுக்கும் எஜமானர். அது சிறியது, நீங்கள் பெரியவர் என்பதால் அவர் உங்களுக்கும் ஒரு வைரஸுக்கும் இடையில் பாகுபாடு காட்டமாட்டார். அது நியாயமாக இருக்காது. எனவே உங்கள் மூளையை ஒழுங்காகப் பயன்படுத்துவது நல்லது, இதை பொறுப்புடன் கையாண்டு வைரஸை வெல்லுங்கள். இந்த நேரத்தில், நீங்கள் சிவனைப் போலவே சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும்; எல்லோரும் தனியாக உட்கார்ந்து பதினைந்து நாட்கள் தியானித்தால், வைரஸ் காணாமல் போகக்கூடும். ஒரு அரசாங்கம் ஊரடங்கை விதிப்பதால் அல்ல, ஆனால் பொறுப்பான ஏகாந்தன்.

ஆசிரியர் குறிப்பு: இந்த சவாலான நேரங்களில் சத்குரு நமக்களித்த பயனுள்ள சில உதவி குறிப்புகள் ஊரடங்கில் இந்த 10 விஷயங்களைச் செய்யுங்கள்