ருத்ரா என்றால் சிவன், அக்ஷா என்றால் கண்ணீர் துளிகள். ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்ணீர் துளிகள். புராணக் கதைகள் சொல்வது, சிவன் நீண்டகாலம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் பரவசநிலையில் முற்றிலும் அசைவின்றி நிச்சலனமாக அமர்ந்திருந்தார். அவர் சுவாசிப்பதாகக்கூட தெரியவில்லை, அனைவரும் அவர் இறந்துவிட்டதாக நினைத்தனர். அவர் உயிரோடு இருந்ததற்கு ஒரே ஒரு அரிகுறிதான் தெரிந்தது - அவர் கண்களிலிருந்து வழிந்தோடிய பரவசக் கண்ணீர் துளிகள். அவருடைய கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராட்சமாக, "சிவனின் கண்ணீராக" மாறியது.