கேள்வி : சத்குரு, பொறாமை என்பது எப்போதுமே அவநம்பிக்கைக்குரிய ஒரு உணர்ச்சியாகவே கருதப்படுகிறது. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், எனக்கு, அது மிக நன்றாக வேலை செய்கிறது. எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது. ஒவ்வொருமுறையும் என் நண்பர்கள் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும்போதும், நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தூண்டுதல் எழுகிறது. அதனால்தான் இப்போது எனது கனவுக் கல்லூரியில் எனக்கு இடமும் கிடைத்திருக்கிறது. பொறாமை எதிர்மறையான உணர்ச்சியா..? அல்லது அது நம்மை மேலும் சிறப்பாகச் செயல்படத் தூண்டுகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சத்குரு: நல்லவேளையாக இப்போது இது வழக்கத்தில் இல்லை.. நாங்கள் சிறுவயதில் இருந்தபோது, சிற்றூர்களில் மக்கள் வேடிக்கைக்காக இதைச் செய்வார்கள். குறிப்பாக தீபாவளியின்போது பரவலாக இது நிகழும். ஒரு தகரப் பெட்டியில் வெடிகளைப் போட்டு அதை ஒரு கழுதையின் வாலில் கட்டி விடுவார்கள். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியதும், பாவம் அந்த கழுதையானது, எல்லாப் பக்கமும் குதிரையைவிட வேகமாக ஓடும். வாழ்க்கைக்கான உந்துசக்தியாக அதுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? செயல்படுவதற்கான மேலும் சிறப்பான, அதிக புத்திசாலித்தனமான வழிகள் இருக்கிறன.

இப்போது உங்களை ஒரு நாய் துரத்துகிறது என்பதாலோ அல்லது உங்கள் வாலில் தீப்பிடித்து எரிகிறது என்பதாலோ ஓடவேண்டும் என்று நீங்கள் விரும்புவது என்பது ஆனந்தமாக ஓடும் வழியல்ல.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் வால் தீப்பிடித்து எரிவதைப்போல உணர்ந்தால், நீங்கள் வேகமாக ஓடக்கூடும். ஒரு நாய் உங்களைத் துரத்தினால் நீங்கள் முழுவேகத்தில் ஓடுவீர்கள் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் உசேன் போல்ட் தன் வால் தீப்பிடித்து எரிகிறது என்பதால் வேகமாக ஓடவில்லை. எந்த விதமாக ஓடினாலும், மற்றவர்களைவிட அவர் வேகமாக ஓடுமளவுக்குத் தனது கால்களையும், நுரையீரைலையும் அவர் தயார்படுத்தியிருக்கும் காரணத்தால் அவர் ஓடுகிறார். இதுதானே ஓடுவதற்கு சிறந்த வழி..? இப்போது உங்களை ஒரு நாய் துரத்துகிறது என்பதாலோ அல்லது உங்கள் வாலில் தீப்பிடித்து எரிகிறது என்பதாலோ ஓடவேண்டும் என்று நீங்கள் விரும்புவது என்பது ஆனந்தமாக ஓடும் வழியல்ல.

பந்தயக் குதிரையை விட வேகமாக ஓடும் இப்படிப்பட்ட பல கழுதைகளை நான் பார்த்திருக்கிறேன். ஓடுவதற்கான முறை அது அல்ல. தயவு செய்து உங்களுக்கு நீங்களே இதைச் செய்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் வேகமாக ‌ஓடுவது என்பது ஒரு அம்சம். அது முக்கியமானது. ஆனால் மற்றொரு அம்சம், ஓட்டத்தின் உங்கள் அனுபவம் அற்புதமானது. அதுவும் முக்கியமானதுதான், அல்லவா? நீங்கள் உங்கள் கனவுக் கல்லூரிக்குள் சேர்ந்துவிட்டீர்கள், ஆனால் இதுவே உங்களுக்கு மூன்று வருட நரகமாக மாறிவிடலாம். இங்கிருக்கும் ‌மூன்று வருடங்களும் உங்களுக்கு ஆனந்தமான அனுபவமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்தானே? ஓடுவது என்பது மட்டுமே முக்கியமான விஷயமில்லை. நீங்கள் அதை எப்படி உணர்கிறீர்கள் என்பதும், நாளை அதிலிருந்து என்ன வெளிப்படப் போகிறது என்பதும் அதே அளவுக்கு முக்கியமானது.

நமது வால்களில் தீப்பற்றியதால் நாம் ஓடினோம் என்று ‌வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, மக்களை ஓட வைப்பதற்கான ஒரே வழி, அவர்களது வாலில் தீவைப்பதுதான் என்று நாம் புரிந்துகொள்வோம். இதனால் மற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை நாம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவனியுங்கள்.

பந்தயக் குதிரையை விட வேகமாக ஓடும் இப்படிப்பட்ட பல கழுதைகளை நான் பார்த்திருக்கிறேன். ஓடுவதற்கான முறை அது அல்ல. தயவு செய்து உங்களுக்கு நீங்களே இதைச் செய்து கொள்ளாதீர்கள்.

ஆசிரியர் குறிப்பு : நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

SGTAMAPPNL