சத்குரு: 

எனக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் போது என் வாழ்க்கையில் முதல் நட்பு பூத்தது, அப்போதுதான் என்னை பள்ளியில் சேர்த்தார்கள். எல்லோரையம்விட எல்லாவற்றையும்விட அவனே எனக்கு அப்போது முக்கியமானவனாக இருந்தான். எனக்குள் அவ்வளவு பிணைப்பு ஏற்பட்டிருந்தது. அவனது பெயர் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.. ஆனால் அவருக்கு நிச்சயமாக நான் நினைவில் இருக்கமாட்டேன்.

இப்போது நாம் எங்கே போனாலும், நூற்றுக்கணக்கில் எல்லாவிதமான நண்பர்களும் நமக்கு இருக்கிறார்கள். அதுவேறு. உண்மையான நண்பர்களுடன் நாம் ஏற்படுத்தியிருந்த பிணைப்பு பற்றியே நாம் இப்போது பேசுகிறோம் - இது முழுமையானது என்றே எப்போதும் நாம் நினைத்திருந்தோம். ஆனால் வாழ்க்கை அனுபவத்தில், வெகுசிலர் மட்டுமே நட்பை அப்படி பார்க்கிறார்கள் என்பதை உணர்கிறோம். பெரும்பாலான மக்களுக்கு நட்பும் காரணகாரியத்துடனே ஏற்படுகிறது. நீங்கள் பள்ளிப்பருவத்தில் இருக்கும்போது ஒருவிதமான நண்பர்கள் ஏற்படுகிறார்கள். பள்ளிப்பருவம் நிறைவடைந்தும் அவர்களை விட்டுவிட்டு கல்லூரியில் புதிய நண்பர்கள்.. கல்லூரி முடிந்ததும் தொழில்ரீதியான நண்பர்கள், ​ சூழ்நிலை ஏற்படுத்தும் நண்பர்கள் என்றே பலரும் இருக்கிறார்கள். ஆனால் என்னால் நட்பை அப்படி பார்க்க முடியவில்லை. இதற்காக நாம் யார் மீதும் அதிருப்தியிலும் இல்லை. மனிதஇயல்பை அனுபவப் பாடமாக கற்றுக்கொள்வதாகவே இது இருக்கிறது.

வாழ்க்கையை நாம் எப்போதும் மதிப்பிடுவது இப்படித்தான். இன்றும் நாம் அப்படியே தொடர்கிறோம் என்றே நினைக்கிறேன்.

நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற தேவையில் நாம் எப்போதும் முயற்சி செய்ததில்லை. ஆனால் நட்பு மலர்ந்த கணமே அது நன்மைக்காகவும் எல்லாவகையிலும் முழுமையானது என்றே பார்க்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நல்ல நண்பர்கள் ஏற்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கை சூழல் மாறும்போது, அவர்கள் தேவையும், நட்பு பற்றிய அவர்களது கவனமும் மாறுகிறது. என்னளவில் அது எப்போதுமே மாறுவதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதனால் நம் இதயமே உடைந்துவிடுகிறது என்று சொல்ல வரவில்லை. ஆனால் மக்கள் தங்கள் வாழ்வில் ஆழமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறார்களே என்பது நிச்சயமாக ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. அவரவர் தேவையை ஒட்டியே உறவுகள் ஏற்படுத்தப்படுகிறது. மக்களால் தங்களது தேவையை கடந்த உறவுகளை உருவாக்க முடிவதில்லை. எந்த தேவையும் இல்லாமல், வெறுமே ஒரு உறவு - இது பெரும்பாலான மக்களுக்கு சாத்தியமானதாக இல்லை. அவர்களுக்கு எப்போது தேவையோ அப்போது உறவுகளை உருவாக்குகிறார்கள், தேவையில்லை என தெரியும்போது உடைக்கிறார்கள்.

நாம் எதனுடன் இருந்தாலும் முழுமையாக, பிணைப்புடன் இருப்பதே வாழ்க்கை செயல்முறை தன் எல்லா ரகசியங்களையும் விருப்பத்துடன் திறப்பதற்கு காரணமாக​ இருக்கலாம்.

வாழ்க்கை என்மீது பெருங்கருணையுடனே நடந்து கொள்கிறது என்றே நினைக்கிறேன். கருணை என்று பொருள்தன்மையைப்பற்றி நாம் குறிப்பிடவில்லை. எங்கே சென்றாலும் வாழ்க்கை நம்மை பார்த்துக்கொள்ளும் விதத்தையும், எந்த முயற்சியும் இல்லாமல் வாய்ப்புகளை தானே திறந்துவைக்கும் தன்மையையும் தான் குறிப்பிடுகிறோம். நாம் எதனுடன் இருந்தாலும் முழுமையாக, பிணைப்புடன் இருப்பதே வாழ்க்கை செயல்முறை தன் எல்லா ரகசியங்களையும் விருப்பத்துடன் திறப்பதற்கு காரணமாக​ இருக்கலாம். உயிரற்ற பொருட்களாக இருந்தாலும், அதனுடன் தொடர்பு ஏற்படும்போது, குறிப்பிட்டவிதமாக நான் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறேன். உதாரணத்திற்கு, மைசூரூ என்றால் என்னளவில் என்ன என்று பார்த்தால், அந்த இடத்தின் மீது என்னுள் ஒரு ஆழமான பிணைப்பு ஏற்பட்டுள்ளது. என் குழந்தை பருவத்தில் பெரும்பாலான நாட்கள் கழிந்த நகரம் என்பதே காரணமாக இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டோ அல்லது பாசத்துடனோ சாதாரணமாக​ மக்கள் பார்ப்பதைபோல நாம் இதை பார்க்கவில்லை. வளரும்போது அந்த மண்ணுடன், மரங்களுடன், மலைகளுடன், சுற்றி இருக்கும் எல்லாவற்றுடனும் நாம் அப்போது கொண்டிருந்த ஈடுபாடு மட்டுமே இப்போதும்​ பிணைப்பாக இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் பலவும் மாறி இருக்கிறது. இப்போதும் நான் கால்பதித்து நடந்துசென்ற பல இடங்களை அப்படியே பார்க்கமுடிகிறது. எல்லாவற்றையும் ஆழமாக பார்த்தது, மைசூரின் லட்சக்கணக்கான இடங்களில் நான் துளைத்தெடுத்த லட்சக்கணக்கான கேள்விகள் என எல்லாமும் இருக்கிறது. இவை எல்லாமும் சேர்ந்து எனக்குள் குறிப்பிட்டவிதமான தேடலை ஏற்படுத்தியது என மைசூரின் மீது வேறு ஒருவிதமான பிணைப்பு இருக்கிறது.

என்னளவில் மைசூரு என்றால் லட்சக்கணக்கான கேள்விகள்... அதற்கு கிடைத்த நம்பமுடியாத பதில்... இரண்டுமே இருக்கிறது. நட்பு என்பதும் என்னளவில் அப்படியேதான். யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட அந்த சில கணங்கள் - உணர்ச்சிவசமாக மட்டுமின்றி, நாம் யார்மீதும் உணர்ச்சிவசப்படுவதில்லை என்றாலும், பகிர்ந்துகொண்ட அந்த கணங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒருவகையில் ஒன்றிணைவதாகவே அமைந்து விடுகிறது. எப்போதுமே பகிர்ந்து கொள்தல் என்பது இரண்டு உயிர்கள் ஒன்றுடன்ஒன்று இணைவதாகவே பார்க்கிறோம். நட்பு என்பதை தங்களுக்கு சாதகமாகவோ, தங்களுக்கு பலனளிக்கும் ஒன்றாகவோ, இன்னும் சிறப்பாக வாழவோ பயன்படும் ஒன்றாகவோ நாம் பார்க்கவில்லை.

மைசூரின் லட்சக்கணக்கான இடங்களில் நான் துளைத்தெடுத்த லட்சக்கணக்கான கேள்விகள் என எல்லாமும் இருக்கிறது.

இப்போதும்​கூட நாம் உலகம் முழுவதும் எங்கே சென்றாலும், பல வகையான மனிதர்களை சந்தித்தாலும், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில்லை, அவர்கள்து தொலைபேசி எண்களை வாங்குவதும் இல்லை, அவர்களை தொடர்புகொள்ள முயற்சிப்பதும் இல்லை. அவர்களுடன் இருக்கும் அந்த சில கணங்களில் மிக ஆழமாக அவர்களை தொடும் ஒன்றை பகிர்ந்து கொள்கிறோம். அவர்களில் பெரும்பாலானோர் நம்முடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். என்னளவில் அந்த பகிர்ந்து கொள்தல் நிரந்தரமான ஒரு செயல்முறையாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு இதுவும் கடந்துபோகும் ஒன்றாக இருக்கிறது.

அநேகமாக நட்பு பற்றிய எனது பார்வை பழைய ஸ்டைலாக, ஒருவேளை இது ஸ்டைலாகவே இல்லாமலும் இருந்திருக்கலாம். ஒருவகையில் சிறுபிள்ளைத்தனமாகவோ​, சமூகத்தில் வரவேற்கத்தக்கதாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் உயிரளவில் அது மரமாக இருந்தாலும் சரி, நாம் அமர்ந்திருந்த இடமாகவோ, ஒரு பாறாங்கல்லாகவோ, சந்தித்த மக்களாகவோ யாராக இருந்தாலும் அவர்களுடன் ஆழமாக என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிற பிணைப்பு வாழ்க்கையிலும் இயற்கையிலும் பல பரிணாமங்களை எனக்கு திறந்து விட்டிருக்கிறது.

எனவே நட்பு என்பது கொடுத்து வாங்குவதோ, எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதோ இல்லை, ஒருவிதத்தில் நட்பில் உயிரே குறிப்பிட்டவிதத்தில் ஒன்றாக கலக்கிறது.

சத்குரு App தமிழில்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்,சத்குருவுடன் தொடர்பில் இருங்கள்.

Image Courtesy: Kids in Israel by Tal King Photographer