சத்குரு மண் புத்துயிர் பெறுவதன் முக்கியத்துவத்தையும், மண்ணைக் காப்பதற்கான 5 முறைகளையும் ஆராய்கிறார்.

பொருளடக்கம்
1. மண் சிதைவின் 2 காரணங்கள்
1.1 தொழில்மயமாக மாறிய விவசாயம்
1.2 இறைச்சி உண்ணுதல் மற்றும் கால்நடை பராமரிப்பு
2. மண் சிதைவின் 4 விளைவுகள்
2.1 மோசமடைந்த மனித ஆரோக்கியம்
2.2 மண்ணில் உள்ள கரிமப் பொருள் குறைகிறது
2.3 வெள்ளம் மற்றும் வறட்சி என தீய சுழற்சியை ஏற்படுத்துகிறது
2.4 உணவுப் பற்றாக்குறை உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்கும்

மண் சிதைவின் 2 காரணங்கள்

#1 தொழில்மயமாக மாறிய விவசாயம்

சத்குரு: நாம் இயந்திரமயமான மற்றும் தொழில்மயமான விவசாயத்தை துவங்கியதில் இருந்து, உலகளவில் மண்ணில் கரிமச்சத்து கணிசமாக குறைந்துவிட்டது. எந்த ஒரு மண்ணிலும் விவசாயம் ஏதுவாக இருக்க, அதில் குறைந்தபட்ச கரிம உள்ளடக்கம் 3 முதல் 6% இருக்க வேண்டும், ஆனால் உலகின் பல பகுதிகளில் இது 1%க்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் 62% மண்ணில் 0.5% க்கும் குறைவான கரிம உள்ளடக்கம் உள்ளது. இது ஏன் நடந்தது?

நாம், ஒரு டன் பயிர் விளைந்தால், ஒரு டன் மேல் மண்ணை அகற்றிவிட்டோம் என்று அர்த்தம். அதை திரும்ப வைப்பதற்கான வழிமுறைகள் என்ன? பண்ணையில் விலங்குகள் மற்றும் மரங்கள் இருந்தபோது நாம் அதை இயற்கையாகவே வைத்தோம், ஏனென்றால் மரங்களிலிருந்து பச்சை குப்பைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் மட்டுமே கரிம உள்ளடக்கத்தை மண்ணில் மீண்டும் சேர்க்க ஒரே வழி. அந்த வேலையை டிராக்டர் செய்யும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒரு டிராக்டர் மண்ணை உழுது கொடுக்கும், ஆனால் அது விலங்குகள் மற்றும் மரங்கள் போல மண்ணை வளப்படுத்தாது.

#2 இறைச்சி உண்ணுதல் மற்றும் கால்நடை பராமரிப்பு

இப்போது உலகில் 51 மில்லியன் (சுமார் 5 கோடி) சதுர கிலோமீட்டர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. இதில், 40 மில்லியன் (4 கோடி) சதுர கிலோமீட்டர்கள் விலங்குகளை வளர்ப்பதற்கும் அவற்றின் தீவனத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன, இது 75% ஆகும். உங்கள் இறைச்சி நுகர்வை 50% குறைத்தால், 20 மில்லியன் (2 கோடி) சதுர கிலோமீட்டர் நிலம் மண்ணை மீண்டும் உருவாக்குவதற்கு கிடைக்கும். எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்குள் அந்த மண்ணை நாம் மீண்டும் உருவாக்க முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மண் சிதைவின் 4 விளைவுகள்

மண் சிதைவின் 2 காரணங்கள் மற்றும் அதன் 4 விளைவுகள்

#1 மோசமடைந்த மனித ஆரோக்கியம்

இந்தியாவின் மண்ணின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், ஊட்டச்சத்து அளவுகள் பேரழிவு தரும் வகையில் குறைந்து வருகின்றன. குறிப்பாக இந்திய காய்கறிகளுக்கு, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு முப்பது சதவீதம் குறைந்துள்ளது. உலகில் எல்லா இடங்களிலும், மருத்துவர்கள் மக்களை இறைச்சியில் இருந்து சைவ உணவிற்கு மாறும்படி சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில், இறைச்சிக்கு மாறுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். உலகமே இறைச்சி உண்பதிலிருந்து சைவ உணவு முறைக்கு மாற முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, சைவ தேசமாக வாழ்ந்த நாம், உண்ணும் உணவில் போதிய ஊட்டச்சத்து இல்லாததால், இறைச்சிக்கு மாற முயற்சிக்கிறோம். இதற்கு காரணம், நாம் மண்ணைப் பராமரிக்காததுதான். மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்து மிகவும் வியத்தகு அளவில் குறைந்துள்ளது, மூன்று வயதுக்கு உட்பட்ட இந்தியக் குழந்தைகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்று இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

மண்ணின் வலிமை பலவீனமடைந்தால், நமது உடல் பலவீனமடையும் - ஊட்டச்சத்து அடிப்படையில் மட்டுமல்ல, மிக மிக அடிப்படை நிலையில்.

நீங்கள் காட்டுக்குள் சென்று ஒரு பிடி மண்ணை எடுத்தால், முழுவதும் அதில் உயிர்கள் நிறைந்திருக்கும். மண் அப்படித்தான் இருக்க வேண்டும். மண் வலிமையிழந்து பலவீனமடைந்தால், நமது உடல் பலவீனமடையும் - ஊட்டச்சத்து நிலையில் மட்டுமல்ல, மிகவும் அடிப்படையான வழியில் அது நிகழும். அதாவது நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறை நம்மை விட குறைந்ததாக இருக்கும். அது மனித குலத்திற்கு எதிரான ஒரு குற்றம். நமது அடுத்த தலைமுறை நம்மை விட சிறப்பாக இருக்க வேண்டும். அவர்கள் நம்மை விட கீழாக இருந்தால், நாம் அடிப்படையில் ஏதோ தவறு செய்துள்ளோம். இந்தியாவில் இது மிகப்பெரிய அளவில் நிகழ்கிறது, ஏனென்றால் மண் அதன் வலிமையை இழக்கிறது.

#2 மண்ணில் உள்ள கரிமப் பொருள் குறைகிறது

நீங்கள், நான் மற்றும் நுண்ணுயிர்கள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் மரங்கள் உட்பட இந்த கிரகத்தின் 87% உயிர்கள் தோராயமாக 39 அங்குல மேல் மண்ணில் வாழ்கின்றன. பூமியில் நீங்கள் வைத்திருக்கும் சராசரி மேல் மண் இதுதான். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் நடந்த சீரழிவின் அளவு அச்சம் உண்டாக்குகிற விதத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மண்ணில் உள்ள உயிரிகளின் அளவு சுமார் 80% குறைந்துள்ளது. இது உண்மையில் உயிரற்ற வாழ்க்கை! இப்படியே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 80% பூச்சி, புழு உயிர்கள் அழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சரி, புழுக்கள் இறந்தால் என்ன பிரச்சனை? எப்படியும் எங்களுக்கு பூச்சிகள் பிடிக்காது." இதுதான் நகர்ப்புற மக்களின் மனநிலை. அனைத்து பூச்சிகளும் இறந்துவிட்டால், இந்த கிரகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும். அனைத்து புழுக்களும் இறந்துவிட்டால், எல்லாம் முடிவதற்கு சில மாதங்கள் தான் இருக்கும். இன்று அனைத்து நுண்ணுயிர்களும் இறந்தால், அனைத்தும் நாளையே முடிவுக்கு வந்துவிடும். உங்களை வாழவைப்பது எல்லா நிலைகளிலும் உள்ள நுண்ணுயிர்கள் தான். மண்ணில் உள்ள கரிம உள்ளடக்கம் ஆபத்தான வேகத்தில் குறைந்து வருகிறது, ஏனெனில் நாம் இந்த கிரகத்தின் அழகுபடுத்தப்பட்ட உணர்வைக் கொண்டுள்ளோம். இந்த மண் வளமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு கரிம பொருட்கள் தேவை, இது விலங்குகளின் கழிவுகள் மற்றும் மரங்களிலிருந்து கிடைக்கும் பச்சை குப்பைகளால் மட்டுமே நடக்கும்.

நாளையே அனைத்து மனிதர்களும் மறைந்துவிட்டால், இன்னும் பத்து வருடங்களில் இந்த கிரகம் சுற்றுச்சூழலில் பெரும் பணக்காரராக மாறிவிடும். இந்த கிரகத்தில் மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினங்களாக இருக்க வேண்டிய மனிதர்கள் இந்த கிரகத்தின் கொடிய பிரச்சனையாக மாறியுள்ளனர். இந்த கிரகம் ஆபத்தில் உள்ளது என்பதல்ல. இந்த கிரகம் பிழைத்துக்கொள்ளும். அது மனித வாழ்வுக்கு தகுதியற்றதாக மாறிவிடும், அவ்வளவே.

#3 வெள்ளம் மற்றும் வறட்சி என தவறான (தீய) சுழற்சியை ஏற்படுத்துகிறது

இந்தியாவில், கடந்த சில வருடங்களைத் திரும்பிப் பார்த்தால், எங்கு வெள்ளம் வந்தாலும், மூன்று மாதங்களுக்குள் வறட்சி ஏற்படும். ஏனென்றால், இந்தியாவில் நமக்கு இருக்கும் ஒரே நீர் ஆதாரம் பருவமழை மட்டுமே. நமது ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர் ஆதாரங்கள் அல்ல. அவை மழைநீர் செல்லும் இடங்கள் மட்டுமே. இந்தியாவின் நதி நீரில் நான்கு சதவீதம் மட்டுமே பனிப்பாறை நீர், மீதமுள்ள அனைத்தும் பருவமழை நீர்.

கடந்த நூறு ஆண்டுகளில், பருவமழை வடிவில் வரும் நீரின் அளவு மாறவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, பருவமழை 70 முதல் 140 நாட்களுக்குள் நிகழ்ந்தது. இப்போது 40 முதல் 75 நாட்களுக்குள் நடக்கிறது. அதாவது சாரல் மழை அதிகமாக உள்ளது.

மழைநீர் தரையில் விழும்போது, ​​அது மண்ணில் ஊடுருவி நீர்நிலைகளுக்குள் சென்றிருக்க வேண்டும்; ஆனால் நாம் அனைத்து மரங்களையும் அகற்றியதால், அது மேற்பரப்பில் பாய்ந்து, மண்ணை அரித்து வெள்ளத்தை உருவாக்குகிறது. அனைத்தும் திறந்த வெளியாக இருப்பதால் இது நடக்கிறது. மரங்கள் இல்லை. மண்ணில் தண்ணீரை உறிஞ்சுவதற்கு போதுமான கரிம செயல்பாடு இல்லை. தண்ணீர் இறங்கியிருந்தால், கிணறுகள், குளங்கள், ஆறுகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும். மழைநீர் தேங்காததால், சிறிது காலம் கழித்து வறட்சி ஏற்படும்.

பூமியின் மிகப்பெரிய அணை மண். நிலம் சரியான நிலையில் இருந்தால், அனைத்து நதிகளையும் விட 800% கூடுதல் தண்ணீரை மண் தேக்கி வைக்கும். ஆனால் மண்ணில் உள்ள கரிம மதிப்பு குறைவதால், அதன் தண்ணீரை தேக்கி வைக்கும் திறனும் குறைகிறது.

#4 உணவுப் பற்றாக்குறை உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்கும்

இந்தியாவில் சுமார் 160 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன, ஆனால் இந்த மண்ணில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் பாதிக்கப்பட்ட மண் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதாவது இன்னும் இருபத்தைந்து முப்பது வருடங்களில் இந்த தேசத்தில் நமக்கு தேவையான உணவை நம்மால் வளர்க்க முடியாமல் போகலாம். தண்ணீரும், உணவும் இல்லாதபோது, ​​நடக்கும் உள்நாட்டுக் கலவரம், தேசத்தை பல வழிகளில் அழிக்கும் நிலை. தண்ணீர் முழுவதுமாக வெளியேறும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இது வெகுதொலைவில் இல்லை. எந்த உள்கட்டமைப்பும் இல்லாமல், அவர்கள் தெருக்களில் உட்காருவார்கள், ஆனால் எவ்வளவு காலம்? உணவு, தண்ணீர் இல்லாதபோது வீடுகளுக்குள் புகுந்து விடுவார்கள். நான் ஒரு அழிவை முன்கூட்டியே சொல்லும் நபர் அல்ல, ஆனால் அடுத்த எட்டு முதல் பத்து ஆண்டுகளில், நாம் இப்போது கடுமையாக ஏதாவது செய்யாவிட்டால் இந்த சூழ்நிலைகளை நீங்கள் காண்பீர்கள்.

ஆசிரியரின் குறிப்பு: Conscious Planet என்பது மண் மற்றும் பூமிக்கு நனவான அணுகுமுறையைத் தொடங்குவதற்கான உலகளாவிய இயக்கமாகும். உங்களின் நேரம், திறமை மற்றும் முயற்சி ஆகியவை, உணர்வுப்பூர்வமான பூமியை உருவாக்க மண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் மதிப்புமிக்கதாக இருக்கும். பூமியின் நண்பர், பிளானட் சாம்பியன் அல்லது கான்சியஸ் பிளானட் டீம் உறுப்பினராக உங்களால் இயன்ற வழிகளில் ஆதரவு கொடுங்கள்!