ஈஷா சங்கமித்ராவிற்கு நன்கொடை வழங்குங்கள்

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, லாக்டவுன் சமயத்தில் மூன்று மாதங்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்துவிட்டு, இப்போதுதான் வீடு திரும்பினேன். தங்களுக்கும், அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் நான் என்றைக்கும் நன்றி பாராட்டுகிறேன். எனது குருவுக்கும் மற்றும் அங்கிருக்கும் மக்களுக்கும் நான் உதவக் கடமைப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். “என் குருவுக்கு நான் என்ன செய்யமுடியும்?” என்பதை இந்த குரு பௌர்ணமி நாளில் உங்களிடம் கேட்பதற்கு விரும்புகிறேன்.

சத்குரு: உங்கள் குருவுக்கு உங்களால் என்ன செய்யமுடியும்? குருவுக்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஏனென்றால், குரு என்பது அவன் அல்லது அவளும் அல்ல, மற்றும் இது அல்லது அதுவும் அல்ல. அவருக்கு இதையோ அல்லது அதையோ நீங்கள் செய்யமுடியாது. அவரை விட்டுவிடுங்கள். ஆனால் உங்களது நல்வாழ்வுக்கு நீங்கள் பெருமுயற்சி செய்வதைப்போல், அவர் எல்லாருடைய நல்வாழ்வுக்கும் பாடுபடுகிறார். “என் நல்வாழ்வு” என்பதிலிருந்து உங்களது முயற்சியை ஒரு பெருவாரியான நல்வாழ்வு என்ற தளத்துக்கு உங்களால் விரிவாக்க முடிந்தால், அது குருவின் வாழ்வை சிறிது எளிதாக்கும். மேலும் தற்போது தோன்றுவதை விட, அவர் சற்றே குறைந்த தோல்வியாளராக இருக்கமுடியும்.

சற்றே குறைந்த தோல்வியாளராக,” என்று நான் கூறுவதன் பொருள் என்னவென்றால், நான் இருபத்தைந்து வயதாக இருந்தபோது இதனை உணர்ந்தேன், அதாவது என் மனதில் குளறுபடி செய்யாமல் இருந்தால், நான் அவ்வளவு பரவசமாக இருக்கிறேன்; மற்றவர்களுக்கும் இதைப் பரப்புவதை மிக எளிதாகச் செய்யமுடியும் என்பதுடன் அதை எப்படிச் செய்வது என்பதையும் நான் அறிந்திருந்தேன். இரண்டு வருடங்களிலேயே ஒட்டுமொத்த உலகத்தையும் நான் பரவசமாக்கிவிடுவேன் என்று தத்ரூபமான ஒரு திட்டம் உருவாக்கினேன். அன்றிலிருந்து முப்பத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன! அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவசத்தின் கண்ணீர்த் துளிகளை நாம் பார்க்கிறோம், ஆனால் ஒட்டுமொத்த உலகத்துக்கும் அது இன்னமும் நிகழவில்லை.

நாம் இன்றுவரை அதற்காக முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம். மக்கள் தங்களது துன்பங்களில் இவ்வளவு முதலீடு செய்து, என்ன நிகழ்ந்தாலும் அவைகளை விடமாட்டார்கள் என்பதை நான் இருபத்தி ஐந்து வயதாக இருந்தபோது உணரவில்லை. அவர்களுக்கு ஒரு மேலான தேர்வு வழங்கினால், அனைவரும் மீண்டெழுந்துவிடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் அது நிகழவில்லை. அவர்கள் பரிச்சயமானதை விடமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களது பாதுகாப்பின்மையிலும், துன்பத்திலும் மிக ஆழமாக அழுந்தியிருக்கின்றனர்.

அதே வேளையில், மிக மோசமாக நாம் செயல்படவில்லை, ஆனால் என் வாழும் காலத்தில் நாம் நிச்சயமாகத் தோல்வி அடையப்போகிறோம்.

எனது வாழ்வின் அந்திமக்காலத்தில்

நான் அந்த விதமாக உணரவில்லை என்றாலும், இது என் வாழ்வின் காலைப்பொழுது அல்ல, அது மாலைப்பொழுதை நெருங்குகிறது. சூரிய அஸ்தமனம் நிகழ்ந்திருக்கவில்லை, இன்னமும் மிக அதிகமானவை இருக்கின்றன. இயற்கைக் காட்சியைப் பொறுத்தவரை, சூரிய அஸ்தமனம் என்பது சூரியனுக்கான பெரும் கோலாகலமான நேரம். இன்னமும் நிறைய காட்சிகள் வரவிருக்கின்றன என்றாலும், நேரம், சக்தி மற்றும் மக்கள்தொகையின் அளவின்படி, நாம் ஒரு தோல்வியாளராக இறப்போம் என்பது நமக்குத் தெரியும்.

உங்களால் இயன்ற விதத்தில் இந்த சதவிகிதத்தை அதிகரிக்கும் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கமுடியும். யாரோ ஒருவர் செய்யும் அல்லது நான் செய்யும் அதே விஷயங்களை நீங்கள் செய்யுமாறு நான் கேட்கவில்லை. ஆனால் இது உங்களுக்கு முக்கியமானதாக இருந்தால், உங்கள் திறனுக்கேற்ற செயல் என்னவாக இருந்தாலும் அதனைச் செய்யுங்கள்.

Isha-Sanghamitra-22

இந்த மூன்று மாத லாக்டவுன் காலத்தில் நீங்கள் ஈஷா யோக மையத்தில் உண்மையாக மகிழ்ச்சியுடன் இருந்ததாகக் கூறினீர்கள். இது மேலும் அதிகமான மக்களுக்கு நிகழ்வதற்காகவே, இடையறாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சில ஆயிரம் மக்கள் ஈஷா யோக மையத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைத் தவிர, தென்னிந்தியாவின் கிராமங்களில் நாங்கள் செய்துகொண்டிருக்கும் செயலின் அளவு பிரம்மாண்டமானது என்பதுடன் இவைகள் எல்லாம் ஒரே ஒரு தொற்று கூட இல்லாமல் செய்யப்பட்டது; ஒவ்வொருவரும் முழுமையான பாதுகாப்புடன் இருக்கின்றனர். மக்கள் நடமாடுவதற்கான ஒரு மிகப்பெரும் பரப்பிலான வளாகம் இங்கு உண்டு, எல்லா வழிகாட்டு முறைகளும் பின்பற்றப்படுகின்றன, சாதனா அற்புதமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மற்றும் வானிலையும் ஒத்துழைப்பு அளித்துள்ளது. பருவகாலத்திற்கு முன்னோடியான மழைகளும் வெகு முன்னதாக வந்து, கோடையை மிகச் சிறப்பாக எளிதாக்கிவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Isha-Sanghamitra-14

இந்த எல்லா அம்சங்களுடனும், கடந்த மூன்று மாதங்களும் அற்புதமாக இருந்தன. கடந்த நாற்பத்தி ஐந்து வருடங்களில், நான் ஒருபோதும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மேல் வீட்டில் தங்கியதில்லை. எண்பத்தி ஐந்து நாட்களுக்கும் அதிகமாக நான் வீட்டிலேயே தங்கியிருந்து, ஒரே படுக்கையில் உறங்கியது இதுவே முதல்முறை. நல்ல உணவைச் சாப்பிட்டுக்கொண்டு, நன்றாக உறங்கியதுடன், எந்தப் பயணமும் இல்லாமல் இருந்தேன். உங்களுக்கும் அது சிறப்பாக இருந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி.

தேவையானதை மட்டும் செய்வது

எனக்காக நீங்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், உங்களுக்கு நேரம் இருந்தால், நீங்கள் என்ன செய்யமுடியும் என்று நாங்கள் கூறுவோம். உங்களுக்கு ஏதேனும் திறமை இருந்தால், நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை நாங்கள் கூறுவோம். உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை நாங்கள் கூறுவோம், ஏனென்றால் இந்த எல்லா விஷயங்களும் தேவையாக இருக்கிறது.

நமக்கு ஒரு குறிப்பிடத்தக்க என்ணிக்கையிலான மக்களிடமிருந்து முயற்சி தேவைப்படுகிறது, அதனால் நாம் நிச்சயமாக உயர்ந்த இலக்கை அடையமுடியும். நீங்கள் அதன் ஒரு பாகமாக இருந்து, உங்கள் சக்திகளை அதற்கு வழங்க விரும்பினால், உங்களுக்கு அது சாத்தியமே. இதன் ஒரு பகுதியாக, தற்போது பல விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஈஷா யோகா ஆன்லைன் அனைவருக்கும் 50% குறைந்த கட்டணத்திலும், மற்றும் எல்லா மருத்துவத் துறையினர், காவல் துறை அலுவலர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் சுமார் 85,000 மருத்துவப் பணியாளர்கள் அதைப் பயன்படுத்தியுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது அற்புதமானது. மேலும், இந்தக் கடினமானக் காலகட்டத்தில், அது அவர்களுக்கு எப்படிப்பட்ட வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர்களுள் பலரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இவை அனைத்தையும் இப்போது நாம் வழங்கும் நிலையில், ஏதோ ஒன்றை நாம் இலவசமாக வழங்கவேண்டும் என்றால், இலவசங்களைத் தொடர்வதற்கு நாம் அனைவரும் கூடுதலாகச் செயலாற்ற வேண்டியிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான மக்களும், அது வானத்திலிருந்து விழுவதாக நினைக்கின்றனர். அது அப்படி அல்ல.

sadhguru-wisdom-article-isha-sangamitra-corona-relief

பலரும் என்னிடம் எப்போதும் கேட்டவாறு உள்ளனர்,” சத்குரு நாங்கள் எந்த விதத்தில் வழங்கமுடியும்?” என்று. ஆனால் இன்றுவரை, ஒரு விதிமுறையாகவே, நான் ஒருபோதும் வெளிப்படையாக பணத்திற்காகக் கேட்டதில்லை. எதிர்பாராமல் இந்த வைரஸ் சூழல் வெளிப்பட்டு, எங்களைச் சுற்றிலும் மக்கள் பட்டினியால் துன்பப்படத் தொடங்கியதை நான் கண்டபோதுதான், “தயவுசெய்யுங்கள், எங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது,” என்று கூறினேன். அதிர்ஷ்டவசமாக மக்களும் அதற்கு உதவிக்கரம் நீட்டினர். கடந்த மூன்று மாதங்களாக, தினமும் 13,000 லிருந்து 15,000 மக்களுக்கு எங்களால் உணவு தயாரிக்கமுடிகிறது. மேலும் எங்களது ஆசிரம இளைஞர்கள், அந்தக் கிராமங்களில் தங்கியிருந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

உலகத்தின் பல பகுதிகளிலும் இது புரிந்துகொள்ளப்படமாட்டாது, ஆனால் இந்தியாவில், தினக்கூலி ஆட்கள் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு வேலைக்குச் செல்லவில்லை என்றால், அவர்களிடம் எதுவும் இருப்பதில்லை. அவர்களது பொருளாதாரம் முடிவுக்கு வந்துவிட, பட்டினி கிடப்பதுதான் அவர்களுக்கான ஒரே வழியாக இருக்கிறது. இந்த வைரஸ் நகர்ப்புறத்தில் நிகழ்வதாகவே இருக்கும் என்று ஆரம்பத்தில் நாங்கள் எண்ணினோம், ஆனால் கிராமப்புற இந்தியாவில் அது நிகழத் தொடங்கியபோது, நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். பலரும் நன்கொடைகள் வழங்குவதன் மூலம் எங்களது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

சமூகச் செயல்பாடுகளை மிகவும் அதிகளவுக்குக் கையாள்வதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக காவேரி கூக்குரல் தொடர்கிறது. பெருந்தொற்று இருக்கும் நிலையிலும், களப்பணிகள் எந்த அளவுக்கு நிகழவேண்டுமோ, அந்த அளவுக்கு நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. இப்போதைய பருவமழைக் காலத்தில், ஒரு கோடியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள், விளை நிலங்களில் நடப்பட இருக்கின்றன. இது ஏதோ புறம்போக்கு நிலத்தில் செய்யப்படுவது அல்ல. விவசாயிகளால் அவர்களது விளை நிலங்களில் நடப்படுகிறது என்பதால், மரக்கன்றுகள் தொண்ணூறிலிருந்து நூறு சதவிகிதம் தழைப்பதை நீங்கள் எதிர்பார்க்க முடியும். ஏனெனில் அது காடு வளர்ப்பு என்ற நோக்கத்தில் இல்லாமல், ஒரு பயிராக வளர்க்கப்படுகிறது.

மரப் பயிர் விவசாயம் வேர் பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அது விவசாயிகளுக்கான நீடித்த நல்வாழ்வைக் கொண்டு வருகிறது. மனிதர்களின் உணவில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு, மரங்களிலிருந்து வருவதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற வழிவகைகளையும் ஆராய்ந்து வருகிறோம். இது எல்லா இடங்களிலும் நிகழவேண்டும். ஆனால், ஆரம்ப நிலையில் காவேரிப் படுகையில் இதை நிகழச் செய்வதாக இருக்கிறோம்.

விழிப்புணர்வுமிக்க உலகம் – சுற்றுச்சூழலியல் பெருந்தொற்று தவிர்த்தல்

Isha-Sanghamitra-25

விழிப்புணர்வுமிக்க உலகம் என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தை அறிமுகப்படுத்தும் செயல்முறையிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். இது விழிப்புணர்வான மக்களை உருவாக்குவதைக் குறித்தது. ஏனென்றால், விழிப்புணர்வில்லாத மனிதர்கள்தான் இந்த பூமியின் ஒரே பிரச்சனையாக இருக்கிறார்கள்.

இத்தனை எண்ணிக்கையில் மக்கள் இறக்கத் தேவையில்லை, தேசங்களின் பொருளாதாரம் அழியத் தேவையில்லை, மக்கள் இவ்வளவு தொந்தரவுக்கு ஆளாகவேண்டிய தேவையில்லை. நாம் மட்டும் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால், இவைகளுக்கு இடமே இல்லை.

விழிப்புணர்வில்லாத மனிதர்களால்தான் இந்த பெருந்தொற்றுகூட உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் மட்டும் சற்றே கூடுதல் விழிப்புடன் இருந்திருந்தால், இதை நாம் மிக எளிதாகக் கட்டுப்படுத்தி இருக்கமுடியும். இதற்குத் தேவைப்படுவதெல்லாம், ஒட்டுமொத்த மக்கள்தொகையும் அடுத்த பதினான்கு, பதினைந்து நாட்களுக்கு தனித்திருந்து, வேறு எவருடனும் தொடர்பில் இல்லாமல் இருப்பது, அப்போது உலகத்தில் இந்தத் தொற்று முடிந்துவிடும். இத்தனை எண்ணிக்கையில் மக்கள் இறக்கத் தேவையில்லை, தேசங்களின் பொருளாதாரம் அழியத் தேவையில்லை, மக்கள் இவ்வளவு தொந்தரவுக்கு ஆளாகவேண்டிய தேவையில்லை. நாம் மட்டும் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால், இவைகளுக்கு இடமே இல்லை.

விழிப்புணர்வுமிக்க உலகத்தின் ஒரு அம்சம், நமக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் குறித்து விழிப்புணர்வு அடைவது. மற்றொரு அம்சம், சூழலியல் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது. ஏனென்றால் சூழலியல் பெருந்தொற்றாகிய மற்றொரு பெருந்தொற்று, தன்னை விரைவாக வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இது வைரஸைக் காட்டிலும் மிக அதிகமான உயிர்களைப் பலிவாங்கக்கூடும். நாம் சரியான விஷயங்களைச் செய்யவில்லை என்றால் பெரிய அளவிலான அழிவுகளும், சவால்களும் நமக்குக் காத்திருக்கின்றன, ஆகவே இதைப் போன்ற இயக்கங்கள் அவசியமாக இருக்கின்றன.

மனிதர்கள் தங்களது நல்வாழ்வுத் தேடலில் பூமியைக் கிழித்துக் கூறாக்குவதன் ஒரு விளைவாகத்தான் சூழலியல் சவால்கள் எழுகின்றன. நல்வாழ்வுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டால், மனிதர்கள் இயல்பாகவே மேன்மேலும் அதிகமான விழிப்புணர்வான விதத்தில் செயல்படுவார்கள்

மனிதர்களது வாழ்வின் தரத்தை, எப்படி அவர்களுக்குள் இருந்து வெளிப்படச் செய்வது என்ற இந்த சாத்தியத்தை நாம் வழங்க விரும்புகிறோம். உங்கள் வாழ்வின் தரம் உள்நிலையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமே தவிர, வெளிச்சூழலால் அல்ல. தங்களது இயல்பிலேயே ஆனந்தமாக இருப்பதற்கு, குறைந்தபட்சம் அறுபது சதவிகித மக்கள்தொகை அறிந்துகொண்டால், சூழலியல் சவால் என்பதே இருக்காது.

ஈஷா சங்கமித்ரா

Isha-Sanghamitra-19

இது தொடர்பான அனைத்திலும் மக்கள் எப்படி பங்கேற்க முடியும் என்பதை நாங்கள் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக, சங்கமித்ரா என்றழைக்கப்படும் ஒரு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. உங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஏதோ ஒரு தொகையை நீங்கள் வழங்கலாம் – அது ஐந்து அல்லது பத்து ரூபாயாகக்கூட இருக்கலாம். இது தேவையாக இருக்கிறது. ஏனென்றால், எவர் அல்லது எதன் மீதும் விருப்பு, வெறுப்பின் தாக்கம் இல்லாத ஒரு அமைப்பாக, எங்கள் கொள்கை மற்றும் சுதந்திரமான செயல்பாட்டை எந்தப் பெருநிறுவனத்திடமோ அல்லது நிதித்தேவைக்காகவோ நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொடுத்ததில்லை. இந்தக் காரணத்தினால்தான் எங்களுக்கு எந்தப் பெரிய நிதி வரவும் இல்லை, பெரும்பாலான நிதிகளும், துரதிருஷ்டவசமாக நிபந்தனைகளுடன் வருகிறது. எங்களுக்கான நன்கொடைகள் எப்போதும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது.

பூமியில் இது நமக்கான நேரம். நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட மோசமான விஷயங்களைச் செய்கிறோம் என்பது நம்மிடம் உள்ளது. ஆனால் எவ்வளவு அற்புதமான விஷயங்களை செய்கிறோம் என்பதும்கூட நம் வசம் உள்ளது.

இந்த முயற்சியில், சங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பதன் மூலமாக அல்லது ஆன்மீக சமுதாயத்தின் ஒரு பாகமாக இருப்பதன் வாயிலாக நீங்கள் ஆதரவளிக்க முடியும். எனக்காக நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. உங்களது முதன்மையான பொறுப்பு, நீங்கள் ஒரு ஆனந்தமான மனிதராக முயற்சிப்பது. உங்களது இரண்டாவது முயற்சி, ஒவ்வொருவரையும் ஆனந்தம் நிரம்பியவர்களாகச் செய்யும் குறிக்கோளின் எனது முயற்சிக்கு எப்படி நீங்கள் உறுதுணையாக இருப்பது என்பது. தயவுசெய்து, உங்களால் இயன்ற எந்த வழியிலேனும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

இது நம் வாழ்க்கை. பூமியில் இது நமக்கான நேரம். நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட மோசமான விஷயங்களைச் செய்கிறோம் என்பது நம்மிடம் உள்ளது. ஆனால் எவ்வளவு அற்புதமான விஷயங்களை செய்கிறோம் என்பதும்கூட நம் வசம் உள்ளது. இதனை நாம் நிகழச் செய்வோம்.

 

ஈஷா சங்கமித்ராவிற்கு நன்கொடை வழங்குங்கள்

ஆசிரியர் குறிப்பு: ஈஷா சங்கமித்ரா குறித்து அதிகம் அறிந்துகொள்க.