சத்குரு வழங்குகின்ற இந்த மஹாசிவராத்திரி விரதம் ஒருவரை மஹாசிவராத்திரி வழங்கும் சாத்தியங்களைப் கிரகிக்கும் திறனை மேம்படுத்துகிறது.
• மேம்பட்ட அளவிலான சக்திநிலைகளை உணரச் செய்கிறது
• தீவிரமிக்க தினசரி விரதத்தின் மூலம் குறிப்பிட்ட ஒழுக்கநெறியைக் கொண்டுவருகிறது
• பெரும் சாத்தியங்களுடன் கூடிய இரவான மஹாசிவராத்திரிக்கு தயார்ப்படுத்துகிறது
• ஆதியோகியின் அருளுளை கிரகிக்கும் உங்கள் தன்மையை மேலும் சிறப்பாக்குகிறது
• உணர்ச்சி நிலையிலும் மன நிலையிலும் சமநிலையைக் கொண்டுவருகிறது
• உள்நிலைத் தேடலுக்கான வலுவான உடலமைப்பு மற்றும் மன அமைப்பின் அடித்தளத்தை உருவாக்கிறது
நீங்கள் இந்த சாதனவை 8 மார்ச் 2024 மஹாசிவராத்திரி வரை, உங்கள் வசதிக்கேற்ப 40, 21, 14, 7 அல்லது 3 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் தொடச்சியான நாட்களில் செய்யலாம்.
8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
- ஆண்கள் வலது மேற்கையில் கட்ட வேண்டும்
- பெண்கள் இடது மேற்கையில் கட்ட வேண்டும்
12 அங்குல நீளமும் 1 அங்குல அகலமும் கொண்ட எந்தவொரு கருப்புத்துணியினையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
• தினமும் இரண்டு வேளை மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தி குளிக்க வேண்டும். மூலிகை குளியல் பொடி ஈஷா லைஃபில் கிடைக்கும்.
• காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் எண்ணெயிலான விளக்கை ஏற்றி வையுங்கள். விளக்கு இல்லையெனில் மெழுகுவர்த்தி பயன்படுத்தலாம்.
• யோக யோக யோகேஸ்வராய உச்சாடனத்தை, விளக்கேற்றிய பிறகு காலையிலும் மாலையிலும் 12 முறை சொல்ல வேண்டும். 40 நிமிட சாந்தியா காலங்களில் சாதனா செய்வது சிறந்தது.
சாந்தியா காலங்கள்- என்பது ஒரு நாளின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நேரங்கள். சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு முந்தைய 20 நிமிடங்கள் மற்றும் பிந்தைய 20 நிமிடங்கள்.
•காலி வயிற்றில் சிவ நமஸ்காரம் 12 சுற்றுகள் செய்யுங்கள். சர்வேப்யோ உச்சாடனத்தை மூன்று முறை உச்சரியுங்கள். இதை தினமும் ஒரு முறை சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரியனின் மறைவுக்குப் பிறகோ செய்ய வேண்டும்.
8-10 மிளகினை 2-3 வில்வ இலை/ வேப்பிலையுடன் தேனில் இரவு முழுவதும் ஊறவைத்திடுங்கள். கைப்பிடி அளவிலான நிலக்கடலையையும் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்திடுங்கள். சிவ நமஸ்காரம் மற்றும் உச்சாடனத்திற்குப் பிறகு, இந்த இலைகளை மென்று சாப்பிடுங்கள், மிளகு தேனுடன் எலுமிச்சைச் சாறினை சேர்த்து பருகுங்கள். ஊறவைத்த நிலக்கடலையும் சாப்பிடுங்கள்.
வேப்பிலை அல்லது வில்வ இலை இல்லையென்றால், வேப்பிலைப் பொடி உருண்டையை எடுத்துக்கொள்ளலாம். வேப்பிலை பொடி ஈஷா லைஃபில் கிடைக்கும். இவற்றை எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்களது ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற மற்ற தினசரி பயிற்சிகளையும் முடித்துவிடுங்கள்.
விபூதியினை பின்வரும் இடங்களில் வையுங்கள்
• ஆக்ஞா - புருவமத்தியில்
• விசுத்தி - தொண்டைக்குழி
• அனாஹதா - நெஞ்சுக்குழிக்குக் கீழ்
• மணிப்பூரகம்- தொப்புளுக்கு சற்றுக் கீழ்
· தினமும் இரண்டு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளுங்கள். முதல் உணவு மதியம்12 மணிக்கு பிறகு எடுக்க வேண்டும்.
அதற்கு முன்பு பசித்தால், மிளகு-தேன்-எலுமிச்சைச் சாறை திரும்பவும் எடுத்துக்கொள்ளலாம்.
1. இரவு முழுவதும் விழிப்புடன் இருப்பது அவசியம்
2. 112 முறை யோக யோக யோகஷ்வராய உச்சாடனம் சொல்லுங்கள்
3. தேவையுள்ள 3 பேருக்கு உணவோ பணமோ வழங்குங்கள்
4. தியானலிங்காவிற்கு வில்வ இலை/ வேப்பிலை/ 3 அல்லது 5 இதழ்களைக் கொண்ட இலைகளை அர்ப்பணிக்கவும்
5. உங்களது கையிலிருக்கும் கருப்புத்துணியை கழற்றி தியானலிங்காவிற்கு முன் நந்திக்கு அருகில் இருக்கும் மரத்தில் கட்டுங்கள். தியானலிங்காவிற்கு முன் துணியைக் கட்டுவது, ஒருவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாலும் அவரது கர்மப்பதிவுகளை கரைப்பதற்கான வாய்ப்பினை அதுவழங்குகின்றது.
6. 112 அடி ஆதியோகியினை வலம் வந்திடுங்கள்
7. நீங்கள் விருப்பப்பட்டால் விரதத்திற்கு பிறகும் ருத்திராட்சத்தை அணிந்திருக்கலாம்
உங்களால் ஈஷா யோக மையத்திற்கு வரமுடியவில்லை என்றால் மஹாசிவராத்திரி அன்று உங்களது வீட்டிலேயே விரதத்தை நிறைவு செய்துகொள்ள முடியும்.
1. இரவு முழுவதும் விழிப்புடன் இருப்பது அவசியம்
2. 112 முறை யோக யோக யோகஷ்வராய உச்சாடனம் சொல்லுங்கள்
3. தேவையுள்ள 3 பேருக்கு உணவோ பணமோ வழங்குங்கள்
4. தியானலிங்க படத்திற்கு வில்வ இலை/ வேப்பிலை/ 3 அல்லது 5 இதழ்களைக் கொண்ட இலைகளை அர்ப்பணியுங்கள். உங்களது விரதம் கிட்டில் தியானலிங்கத்தின் படம் இருக்கும்.
5. உங்களது கையிலிலுருந்து கருப்புத்துணியை கழற்றி, அதனை எரித்த சாம்பலை முன் கைகள் மற்றும் கால்களில், மேலே கூறிய படி விரதத்தை நிறைவு செய்த பிறகு பூசிக்கொள்ளலாம்.
6. நீங்கள் விருப்பப்பட்டால் விரதத்திற்கு பிறகும் ருத்திராட்சத்தை அணிந்திருக்கலாம்
• காலை உணவிற்கு, 8-10 மிளகினை 2-3 வில்வ இலை அல்லது வேப்பிலையுடன் தேனில் முந்தைய இரவில் ஊற வைத்திடுங்கள். மேலும் ஒரு கைப்பிடி நிலக்கடலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். சிவ நமஸ்காரமும் உச்சாடணையும் முடித்த பிறகு, இலைகளை மென்று சாப்பிடுஙகள், மிளகு தேனினை எலுமிச்சைச் சாறு கலந்து பருகுங்கள். நிலக்கடலையையும் சாப்பிடுங்கள்.
• வில்வ இலை வேப்பிலை இல்லையென்றால், வேப்பிலை பொடி உருண்டையை எடுத்துக்கொள்ளுங்கள். வேப்பிலை பொடி ஈஷா லைஃபில் கிடைக்கும்.
• ஒரு நாளில் இரு முறை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ளுங்கள். முதல் உணவு மதியம் 12 மணிக்கு பிறகு இருக்க வேண்டும்.
• சாப்பிடுவதற்கு முன்பு ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற உங்களது தினசரி பயிற்சிகளையும் முடித்துக்கொள்ளவும்.
• புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் அசைவ உணவினைத் தவிர்க்கவும்.
• வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும்.
• பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களிலும் சிவ நமஸ்காரம் செய்யலாம்.
• கர்ப்ப காலத்திலுள்ள பெண்கள் சிவ நமஸ்காரம் செய்வதை தவிர்க்கவும். சிவ நமஸ்காரம் தவிர்த்து மற்ற வழிமுறைகளை பின்பற்றலாம்.
• ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள் சிவ நமஸ்காரத்தின் மாறுபட்ட நிலைகளை தலையணை அல்லது நாற்காலி பயன்படுத்தி செய்யவும்.
• விரதம் வழிகாட்டுதல்கள்
• யோக யோக யோகஸ்வராய – பாடல்வரிகள்
• சர்வேப்யோ உச்சாடனம்- பாடல் வரிகள்