Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

வாழ்க்கை வரமா? சாபமா?

About the Book

வாழ்க்கை வரமா? சாபமா? "நீங்கள் வசிக்கும் வீடோ, ஓட்டும் வாகனமோ, அணியும் துணிமணிகளோ உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில்லை. இந்த வினாடியில் நீங்கள் உங்கள் உள்நிலையில் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கிறது".வாழ்க்கை வரமா? சாபமா?'அற்பம் முதல் அற்புதம் வரை', 'உயிருக்கு விருப்பங்கள் ஏது. 'எது சாதகம்? எது பாதகம்', போன்ற 20 கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. வரமா சாபமா என்ற கட்டுரையிலிருந்து... *நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்கும்போது சரியான விஷயங்கள் கழ்கின்றன. தவறாக முடிவெடுக்கும்போது எல்லாம் தவறாகவே போகின்றன. வெற்றியும் தோல்வியும் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றன. எனவே வலியும் துயரமும் வந்தால் யார் மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள். உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள்? உங்களுக்குத் துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்கிறீர்கள்?

More Like This