புதிதாக பூக்கும் பூப்போல் மலரும் குழந்தைகளின் சிரிப்பைப் பார்க்கும்போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஆனால் சில சமயங்களில் குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் திணறி, கடைசி ஆயுதமாக, "பேசாம சொல்றதை கேளு, இப்படி இருக்காதே, அப்படி செய்யாதே” என்று அவர்கள் மீது நாம் பலவற்றையும் திணிக்கிறோம். நாம் செய்வது சரியா? உண்மையில் குழந்தைகளை நாம் சரியாகத்தான் கையாள்கிறோமா? நம் அனைவருக்குள்ளும் இருக்கும் இந்த கேள்விகளுக்கு சத்குரு விளக்கம் தருகிறார்.