தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை! பகுதி 4

பக்தி என்பது எந்தவொரு செயலையும் சார்ந்ததன்று, கைகட்டி வாய்பொத்தி சிரம்தாழ்த்தி சொந்தக் கோரிக்கைகளைப் பதிவு செய்வதும், பலன் கிடைக்கப் பணிவிடைகள் செய்வதும் பக்தியன்று. மெய்யான பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதை படியுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருநாள், திண்ணன் என்ற கைதேர்ந்த வில்லாளன் வேட்டையாடச் சென்றபோது, கானகத்தில் சிவனிற்கு கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய கோயிலில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். திண்ணனுக்கு சிவன் மீது இருந்த ஆழமான பக்தியால் ஏதோவொன்றை அர்ப்பணிக்க விரும்பினான். ஆனால் முறையாக அர்ப்பணிப்புகள் செய்யும் வழிமுறைகளை அறியாததால், வெள்ளந்தியாக தன்னிடம் இருந்த மாமிசத்தை லிங்கத்திற்கு அர்ப்பணித்து, சிவன் அதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் சென்றான்.

தன் இன்னொரு கண்ணை எடுத்திட கத்தியைக் கண்ணில் வைத்தான், ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின்மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான்.

தொலைதூரத்தில் வாழ்ந்த ஒரு பிராமணனால் அந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. அவன் சிவபக்தனாக இருந்த போதிலும், தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கோயிலுக்குச் செல்ல முடியாததால், மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வந்து சென்றான். அடுத்தநாள் பிராமணன் வந்தபோது, லிங்கத்திற்கு அருகில் மாமிசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். இதை ஏதோ விலங்குதான் செய்திருக்கும் என்று எண்ணி கோயிலை சுத்தம் செய்து தன் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றான். அடுத்தநாள் திண்ணன் இன்னும் அதிகமாக மாமிசத்தைக் கொண்டுவந்து படைத்துவிட்டு, பூஜையோ சடங்கோ எதுவும் தெரியாததால் அங்கே உட்கார்ந்து சிவனிடம் மனமாரப் பேசிவிட்டுச் சென்றான். தான் வேட்டையாடிய மாமிசத்தைப் படைப்பதற்காக தினமும் அக்கோயிலுக்கு வரத் துவங்கினான். ஒருநாள் லிங்கத்தை சுத்தம் செய்யத் தேவையாக இருக்கிறது என்று நினைத்த திண்ணன், தண்ணீர் இறைக்க பாத்திரங்கள் இல்லாததால் நீரோடைக்குச் சென்று வாயில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு வந்து லிங்கத்தின்மீது வாயாலே ஊற்றினார்.

பிராமணன் திரும்பியபோது, கோயிலில் இருந்த மாமிசத்தையும், லிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும் கண்டு தாங்கமுடியாத அருவருப்படைந்தான். இதை எந்தவொரு விலங்காலும் செய்திருக்க முடியாது, இதைச் செய்தது ஒரு மனிதனாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே கோயிலை சுத்தம் செய்து, பூஜை செய்வதற்கு முன்பு லிங்கத்தைத் தூய்மைப்படுத்த மந்திரங்கள் உச்சாடனம் செய்து, அர்ப்பணிப்புகள் செய்துவிட்டுக் கிளம்பினான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் திரும்பி வந்தபோதும், லிங்கம் அதே "அசுத்தமான" நிலையில் இருப்பதைக் கண்டு வெகுண்டான். ஒருநாள் கண்களில் கண்ணீர் மல்க சிவனிடம் வந்து, "தேவர்களுக்கு தேவனான மஹாதேவனே, இப்படிப்பட்ட அசிங்கம் உனக்கு நிகழ்வதை நீ எப்படி அனுமதிக்கலாம்?" என்று கேட்டான். அப்போது சிவன் பதில் சொல்லலானான், "எதை நீ அசிங்கம் என்று சொல்கிறாயோ, அது எனக்கு இன்னொரு பக்தன் செய்த அர்ப்பணிப்பு. நான் அவன் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவன் பக்தியின் ஆழத்தை நீ பார்க்க விரும்பினால், அருகில் எங்காவது ஒளிந்துகொண்டு கவனித்துப்பார். அவன் சீக்கிரமே இங்கு வருவான்."

பிராமணன் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அப்போது திண்ணன் மாமிசத்துடனும் தண்ணீருடனும் வந்தான். எப்போதும் போல் சிவன் தன் அர்ப்பணிப்பை ஏற்காததைக் கண்டு குழம்பிப்போனான். தான் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டே லிங்கத்தை உற்று கவனித்தபோது, லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டான். அதை குணமாக்க பச்சிலைகளை வைத்துப் பார்த்தான், குணமாகவில்லை, இரத்தம் இன்னும் அதிகமாகத்தான் வந்தது. இறுதியில் தன்னுடைய கண்ணை அர்ப்பணிக்க முடிவுசெய்தான். தன் கத்திகளில் ஒன்றை எடுத்து, தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து லிங்கத்தில் பொருத்தினான். இரத்தம் வடிவது நின்றதைக் கண்டு திண்ணன் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதை கவனித்தான். தன் இன்னொரு கண்ணை எடுத்திட கத்தியைக் கண்ணில் வைத்தான், ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின்மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான். திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்டு அவன் முன்னால் சிவபெருமான் தோன்றினார், அப்போது அவனுக்குப் பார்வை திரும்பி சாஷ்டாங்கமாக சிவனின் காலடியில் விழுந்தான். சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர் அல்லது நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

வரும் சந்ததியினர் அனைவரும் உணர்ந்துபோகும் விதமாக தியானலிங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே சத்குரு அவர்களின் விருப்பம். ஆன்மீக செயல்முறையை வருங்கால தலைமுறைகளுக்கு வழங்கிடும் பணியில் எங்களுடன் இணைந்து, தியானலிங்க புனித வளாகத்தின் கட்டுமானப் பணியை முடிப்பதற்குத் தாங்கள் ஏதேனும் நன்கொடை வழங்க விரும்பினால், இணையத்தில் www.giveisha.com/temple என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.

'தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை!' தொடரின் பிற பதிவுகள்