விரேந்திர சேவாக்: நமஸ்காரம் சத்குரு! இந்திய ஜாதி முறை பற்றிய உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறேன். எப்படி அனைவரையும் இணைத்துக்கொண்டு அனைவரையும் சமமாக்குவது?

சத்குரு:

நமஸ்காரம் வீரு. இந்த ஜாதி முறை, முன்பு ஒவ்வொருவர் செய்யும் வேலையை அடிப்படையாகக் கொண்டு துவங்கியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில், இந்த பிரிவுகள் பாகுபடுத்துவதாக மாறி, மக்கள் ஒருவரையொருவர் எதிர்க்கத் துவங்கிவிட்டனர்.

ஒரு சமுதாயம் இயங்கவேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள், தேர்ந்த கலைஞர்களாக இருக்கவேண்டும், பிறர் தொழிலில் ஈடுபடவேண்டும், சிலர் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும், இன்னும் சிலர் கல்வியையும் சமுதாயத்தின் ஆன்மீக செயல்முறையையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்படி நான்கு அடிப்படையான பிரிவுகளை உருவாக்கினார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பழங்காலத்தில் பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் தந்தை தச்சராக இருந்தால், வீட்டில் குழந்தைப் பருவத்திலிருந்தே தச்சுவேலை கற்றுக்கொண்டு நல்ல தச்சராக வளர்ந்தீர்கள். இந்த ஜாதிமுறையை பாதுகாப்பது மூலமாகத்தான், அப்போது தலைமுறை தலைமுறையாக தொழில்திறமை பரிமாறப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

நாம் தேசம்தழுவிய ஒரு சமுதாய பாதுகாப்பு முறையையும் கல்வி முறையையும் நிறுவி, அனைவருக்கும் அவரவர் அறிவுத்திறனுக்கேற்ப திறமைகளை கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம்.

துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில், ஒரு தங்க ஆசாரி தான் இரும்புக்கொல்லனை விட உயர்வானவன் என்று நினைக்கத் துவங்கிவிட்டான். ஒரு தங்க ஆசாரியின் வேலையைவிட ஒரு இரும்புக் கொல்லனின் வேலை சமுதாயத்திற்கு மிகவும் உதவியானதாக இருக்கக்கூடும். இருந்தும் அவன் தன்னை உயர்வானவன் என்று நினைத்ததால், தலைமுறை தலைமுறையாக இது நிலைநாட்டப்பட்டது. இப்படி ஒருவரை மேலானவராக நிலைநாட்ட, எல்லாவிதமான அநியாயங்களும் நிகழ்ந்தன. ஒருகட்டத்தில் இந்த ஜாதிமுறை என்பது கிட்டத்தட்ட நிறவெறிக்கு இணையாக உருவெடுத்திருந்தது.

சிலநூறு வருடங்களாக மக்களுக்கு பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல கிராமங்களில், கீழ்ஜாதியாக கருதப்படுபவர்கள் - இவர்களை தலீத் என்று அழைக்கிறீர்கள் - இவர்களுக்கு இன்னும் அடிப்படை மனித உரிமைகள் கூட கிடைப்பதில்லை. கடந்த இருபத்தைந்து முப்பது வருடங்களாக நிறையவே மாறியிருந்தாலும், நம் தேசத்தில் அருவருக்கத்தக்க பல விஷயங்கள் இன்னும் நடக்கத்தான் செய்கின்றன.

இதிலிருந்து விடுபட வழியென்ன? இன்று திறமைகளை பலவிதங்களில் நம்மால் புகட்டமுடியும். இன்று கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்மிடம் இருக்கின்றன. பெரும்பாலும் இப்போது திறமையை புகட்டுவது குடும்பத்தின் மூலமாக நடப்பதில்லை. அந்த விதத்தில் இப்போது ஜாதி முறைக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது.

ஆனால் சமுதாய பாதுகாப்பு என்று வரும்போது இன்றும் ஜாதி முறை வேலைசெய்கிறது. அவரவர் ஜாதியையும் இனத்தையும் மக்கள் கவனித்துக் கொள்கிறார்கள். தங்கள் ஜாதி மக்களுக்கு பிரச்சனை என்றால் எப்போதுமே உதவிக்கரம் நீட்டுகிறார்கள். தேசம்தழுவிய ஒரு சமுதாய பாதுகாப்பு அமைப்பை நிறுவி, தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பு வழங்கும் வரையில், இந்த ஜாதிமுறை ஓரளவுக்கு இருக்கத்தான் செய்யும்.

ஜாதிமுறையை ஒழிக்க முயன்று, அதை எதிர்த்து வேலைசெய்ய முயல்வது பலனளிக்காது. மக்கள் இன்னும் அந்த முறையை இறுகப் பிடித்திருப்பது, அது வழங்கும் சமுதாய பாதுகாப்பிற்காகத்தான். அதனால் நாம் தேசம்தழுவிய ஒரு சமுதாய பாதுகாப்பு முறையையும் கல்வி முறையையும் நிறுவி, அனைவருக்கும் அவரவர் அறிவுத்திறனுக்கேற்ப திறமைகளை கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம். இப்படி நடந்தால், ஜாதி என்பது துளியும் அர்த்தமில்லாமல் போய்விடும். அதற்குப்பிறகு ஜாதிமுறை காலப்போக்கில் தன்னால் மறைந்துவிடும்.

tamilsgfbcapture-sgquotes-likeanddislike

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!