கொல்லைப்புற இரகசியம் - பகுதி 1

டாக்டர். சாட்சி சுரேந்தர்,
ஈஷா ஆரோக்யா

உமையாள் பாட்டிக்கு தினம் காலை குளித்துவிட்டு வீட்டெதிரே இருக்கும் ஆலமரத்தடி விநாயகனுக்கு அருகம்புல் மாலை சாத்தி அட்டென்டன்ஸ் போட்டுவிட்டுதான் மறு வேலை. இந்த வயதிலும் அவர் போடும் தோப்புக்கரணங்கள் ஆச்சரியம்தான்.

முதல்ல இது ஒரு நல்ல இரத்த சுத்தி. எந்தவித தோல் நோய்க்கும் சரி, கொலஸ்ட்ராலுக்கும் சரி, சர்க்கரை நோய்க்கும் சரி... அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து, நல்லா கழுவி, இடிச்சு சாறு எடுத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டா அவ்வளவும் அமிர்தம் கண்ணு...

அருகம்புல் சாறை காயம் கண்ட இடத்தில் பூசி வர அதிலிருந்து வடியும் ரத்தம் நிற்கும். புண் மீது தடவ புண் சீக்கிரம் ஆறி வரும்.

“ஒ! காது மடல்கள்ல இருக்கிற அக்கு பஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டு, வலது, இடது மூளையின் ஒத்திசைவை பெருக்கும் இல்ல...” என நம்முள் அறிவாய் மட்டும் தங்கிவிட்ட தோப்புக்கரணம், அவரின் தினசரியாய் இருப்பது நமக்கெல்லாம் ஒரு 'நறுக்' நினைவூட்டல்!

“பாட்டி... முழுமுதற் கடவுளுக்கே உகந்தது என அர்ப்பணம் செய்யும் அருகம்புல்லுக்கு கட்டாயமாய், ஒரு தனிச்சிறப்பு இருக்கணும் இல்லையா?” என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, குனிந்து கொண்டே பனி போர்த்திய ஈரத் தரையில், குறுகி நீண்டு வளர்ந்த அருகம்புல்லை கணபதிக்காக பிடுங்கியபடி பேசுகிறார் உமையாள் பாட்டி...

அருகம்புல் பயன்கள்:

“அருகம்புல்லுக்கு சங்கதி ஒண்ணா.. ரெண்டா... முதல்ல இது ஒரு நல்ல இரத்த சுத்தி. எந்தவித தோல் நோய்க்கும் சரி, கொலஸ்ட்ராலுக்கும் சரி, சர்க்கரை நோய்க்கும் சரி... அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து, நல்லா கழுவி, இடிச்சு சாறு எடுத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டா அவ்வளவும் அமிர்தம் கண்ணு...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல் வெப்பத்தைப் போக்க:

உடல் வெப்பத்தைப் போக்கும் கண்ணு... அதிக சூட்டினால வர்ற சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, வயிற்றுப்புண்ணுக்கு ரொம்ப நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், நோய் நீங்கியபின் உடல் தேற்றும். ஏன்.. சில வகை விஷத்தைக்கூட முறிக்கக் கொடுத்துருக்கோம் கண்ணு.

புண் சீக்கிரம் ஆற:

அருகம்புல் சாறை காயம் கண்ட இடத்தில் பூசி வர அதிலிருந்து வடியும் ரத்தம் நிற்கும். புண் மீது தடவ புண் சீக்கிரம் ஆறி வரும்.

தோல் வியாதிகள் குணமாக:

ஒரு கைப்பிடி அருகம்புல்லுடன் விரலளவு மஞ்சள் சேர்த்து அரைத்து பூச, சொறி, சிரங்கு, படர் தாமரை, வேர்க்குரு, வேனல்கட்டி, நாட்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஒவ்வாமை குணமாக:

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கைப்பிடி அருகம்புல்லுடன் 10 - 12 மிளகு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அந்தக் குடிநீரை 20 முதல் 40 நாட்கள் வரை தினம் ஒரு வேளை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; செயற்கை வேதிமருந்துகளால் (synthetic drugs) ஏற்படும் ஒவ்வாமை (allergy) குணமாகும்.

உடல் தளர்ச்சி நீங்க:

கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம் எடுத்து நன்கு மை போல் அரைத்து, சம அளவு பசு வெண்ணெய் கலந்து 40 நாட்கள் வரை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முகம் வசீகரப்படும். இதுக்கு மேலயும் சொல்லிகிட்டே போகலாம்...“ என பாட்டி முடிக்க...

நாமோ, “பாட்டி... எல்லாம் ஒகே, ஆனா அரைச்சு... சாரெடுத்து...” என இழுக்க...

“புரியுது, புரியுது... இப்பல்லாம் அருகம்புல்ல பவுடரு, ஜூஸு, ஆயின்மென்ட்டுனு பண்ணிட்டாங்களே.. உங்களுக்கு ஏத்த மாதிரி... அப்புறம் என்ன?” என்றார்.

அருகம்புல் மாலையுடன் அம்சமாய் அமர்ந்த கணேசருக்குத் தோப்புக்கரணம் போட்டு விடைபெற்றோம்.

அருகம்புல் ஜூஸ் செய்வது எப்படி? (Arugampul Juice in Tamil)

அருகம்புல் ஜூஸ், Arugampul Juice

தேவையான பொருட்கள்:

ஒரு கையளவு அருகம்புல்

செய்முறை:

  • முதலில் அருகம்புல்லை நன்கு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
  • மிக்ஸியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அருகம்புல்லை அரைத்து எடுக்கவும்.
  • பின் அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
  • தேவைப்பட்டால் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இதனுடன் இனிப்புக்கு தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து குடிக்கலாம்.
  • இனிப்பு வேண்டாம் என்றால், மிளகுத்தூள், உப்பு சேர்த்தும் குடிக்கலாம்.
  • குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைத்து குடிக்கக்கூடாது.
  • தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பிறகு ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம்.


நன்றி: மருத்துவக் குறிப்பு சித்த மருத்துவர் புவனேஷ்வரி, ஈரோடு

குடிநீர், கஷாயம் தயாரிக்க தரமான அருகம்புல் பொடியும், தோல் நோய்களுக்கு அருகன் தைலமும் மற்றும் அருகம்புல், வேம்பு, மஞ்சள் கலந்த Calm Cream என்னும் வெளிப்பூச்சு மருந்தும் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கிறது.

ஈஷா ஆரோக்யா மருத்துவமனை:

சேலம்: (0427) 2333232; 9442548852
சென்னை: (044) 42128847; 9442590099
கரூர்: (04327) 249299; 94425 90098