சாதனா பாதையின் புதிய குழு துவங்கியிருப்பதால், நாம் பங்கேற்பாளர்களுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டோம். பங்கேற்பாளர்களின் இந்த முதல் குழு, சாதனா பாதையில் சேருவதற்கு முன்னரே ஈஷா யோக மையத்தில் தங்கியிருக்கும் ருசியை அறிந்துகொள்வதற்கு, ஜனவரி-பிப்ரவரி மாதமே திட்டமிட்டு வந்தவர்கள். ஆனால், ஒரு சிறு வைரஸ் எல்லாவற்றையும் தலைக்கீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. பொது முடக்கத்தின் முழு நேரத்தையும் இந்த புனித இடத்தில் கழித்த அவர்களுக்கு, ஒன்று மட்டும் நிச்சயம் — அவர்கள் சாதனா பாதை 2020க்குத் தயாராகிவிட்டார்கள்!

isha-blog-article-sadhanapada-2020-begins-vol-collage

ஈஷா யோக மையத்தைப் பற்றி உங்களது முதல் கருத்துப்பதிவு என்ன?

isha-blog-article-sadhanapada-2020-begins-vol-near-nandhi

அமர்: “என்னுடைய கலாச்சார வேர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று நினைக்கிறேன்.”

ஸ்வப்னில்: “நான் முன்பு எப்போதும் பார்த்திராத ஒன்றாக உள்ளது – அழகாக, அமைதியாக மற்றும் அதிர்வுடனும்.”

கேயுர்:“எத்தனை பரந்த இடம்! நித்சலனமாகவும், சாந்தமாகவும் அமைதியாகவும்!”

வரவிருக்கும் சாதனா பாதைப் பயணத்தில் உங்களை மிகவும் பரபரப்பூட்டுவது என்ன?

isha-blog-article-sadhanapada-2020-begins-orientation-meet

அமர்: “இந்த முன் தயாரிப்புக்கான நிகழ்ச்சி ஆச்சரியம் தரக்கூடியதாக இருந்தது. என்னுடைய பணி மின்சாரத் துறையில் இருந்தது. எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றாலும், பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.”

இஷாத்: “உண்மை என்னவென்றால் அனைத்துக்கும் மேலாக, எனக்கு சமநிலை, தெளிவு மற்றும் தீவிரத்தன்மை கிடைக்கும். வாழ்க்கையில் சிரமமின்றி கடந்து செல்ல நமக்கு வேறென்ன வேண்டும்?!”

அவினாஷ்: “உடலையும், மனதையும் முழுமையாகப் பழுதுப் பார்த்து, வாழ்க்கை முழுவதும் சரியான பாதையை அமைப்பதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு.”

வாழ்க்கையில் எது முக்கியம் என்ற உங்கள் பார்வையை, இந்த கோவிட்-19 நோய்த்தொற்று எப்படி மாற்றியது?

isha-blog-article-sadhanapada-2020-begins-sadhana-pic1

அமர்: “ஈஷா யோக மையத்தில் இருந்ததனால், இந்த நோய்த்தொற்றை நான் உணரவில்லை. யோகா இல்லாமல் என்னுடைய பயணம் திசையற்று போகும் என்று நான் கடந்த வருடமே என் மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.”

ஈஷாத்: “எனக்கு முன்னமே தெரிந்ததை இந்த கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தியது. வாழ்க்கை என்பது நம் வேலைகளோ, நிதியோ, குடும்பங்களோ அல்லது சமூகச் சூழல்களோ மட்டும் அல்ல. இவை எல்லாம் வாழ்க்கையின் துணைக்கருவிகள். நிஜ வாழ்க்கையானது, இந்தக் கண்ணுக்குத் தெரியாத சிறு வைரஸால் கூட பாதிக்கப்படக்கூடியது. ஈஷா யோக மையம்தான், இருப்பதிலேயே பாதுகாப்பான இடம். ஈஷா யோக மையத்திற்கு நன்றி! சத்குருவிற்கு நன்றி!!!”

அமித்: “சமூக மற்றும் உளவியல் நாடகங்களைத் தவிர்த்து, என்னை இருப்பின் நிதர்சனத்தில் கவனம் செலுத்த வைத்தது.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேயுர்: “சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து என்னுடைய கண்ணோட்டத்தை இது மாற்றியது. மிகவும் முக்கியமாக, என்னுடைய வாழ்க்கை நிரந்தரமல்ல, எப்பொழுது வேண்டுமென்றாலும் முடிந்துவிடும் என்பதை நினைவூட்டியது. மேலும், என்னுடைய வாழ்க்கையில் முதலீடு செய்ய எது மற்றவற்றை விட முக்கியமானது, வாழ்க்கையின் இந்த விலைமதிப்பில்லாத நேரத்தை எங்கு வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வையும் அதிகரித்தது.”

கொரோனா வைரஸிற்கு முன்னால் உங்களது வாழ்க்கையில் முன்னுரிமையில் முதலில் இருந்தது எது மற்றும் அவை இப்போது மாறிவிட்டதா?

isha-blog-article-sadhanapada-2020-begins-vol-enjoying-at-isha-yoga-center

பங்கஜ்: “பணம் சம்பாதிப்பது மற்றும் உலகச் சுற்றுப்பயணம் சென்று சந்தோஷமாக இருப்பது, சாகசங்கள் செய்து எல்லோருடைய வாழ்க்கையையும் மகிழ்ச்சியடையச் செய்வது – இவையெல்லாம்தான். ஏனென்றால் எனக்கு நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வேண்டும். ஆனால் எனக்கு இப்போது வானத்தைப் பார்ப்பதே, அற்புதமான அனுபவமாக இருக்கிறது. இது மட்டும்தான் எனக்கு வேண்டும் என்பது போல, இந்த தென்றல் கூட என்னை சிரிக்க வைக்கிறது. மழை பெய்யும் போது ஒரு குழந்தையைப் போல நான் நடனமாடுகிறேன். நான் எவற்றையெல்லாம் வெளியில் பார்க்கிறேனோ, அவை எனக்குள்ளேயே இருப்பதாக உணர்கிறேன்.”

அமர்: “உண்மையில் எனக்கு குறிக்கோள்கள் எதுவுமில்லை, ஆனால் இந்த உலகில் உள்ள மற்ற இடங்களில் எல்லாம், நம்முடைய கலாச்சாரத்தின் கடந்தகால வெற்றியைப் பற்றி அறிந்துகொள்ள ஆவாலாக இருந்தேன். என்னுடைய வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை, இந்த கொரோனா நிச்சயமாக பலப்படுத்தியுள்ளது.”

இஷாத்: “என்னுடைய முன்னுரிமைகள், கொரோனாவிற்கு முன்னரும், கொரோனா வந்த பின்னரும் ஒரே மாதிரிதான் உள்ளது. என்னுடைய யூசர் மேனுவலை (சத்குரு சொல்வது போல) படித்து, முழு சாத்தியங்களோடு என்னை வாழ்ந்து பார்க்க வேண்டும்”

isha-blog-article-sadhanapada-2020-begins-sadhana-pic2

ஹிதேந்த்ரா: “உடலையும், மனதையும் கட்டுக்குள் கொண்டு வந்து, இந்த நாட்டை கட்டமைப்பதற்கு அவைகளை சிறந்த வகையில் உபயோகிக்க வேண்டும் என்பதுதான் என் முன்னுரிமையாக இருந்தது. இந்தியா எனது முதல் முன்னுரிமையாக இருந்தது. இப்போதும் அதேமாதிரிதான் உள்ளது என்றாலும், முற்றிலும் வேறு வகையில் உள்ளது. இப்போது என்னுடைய முதல் முன்னுரிமை, கரைவதுதான்.”

கேயுர்: “கொரோனாவிற்கு முன்னர், ஆன்மீகத்தில் இறங்குவதற்கு இது சரியான நேரமா, என்னால் இந்த இடத்தில் நீடித்திருக்க முடியுமா அல்லது சத்குரு வழங்கியிருக்கும் கருவிகள் மூலமாக, வாழ்க்கையில் இன்னும் பல விஷயங்களை முயற்சி செய்யலாமா என்ற சந்தேகங்கள் என் மனதில் தோன்றும். ஆனால் கொரோனாவிற்குப் பின்னர், வாழ்க்கையில் இனி வேறு எதை செய்தும் நேரத்தை வீணடிக்க வேண்டாம், எந்த கஷ்டங்கள் வந்தாலும் இதைதான் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.”

இனிவரும் நிச்சயமற்றத் தன்மையையும், சவால்களையும் எதிர்கொள்ள சாதனா பாதை உங்களை எவ்வாறு தயார்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

isha-blog-article-sadhanapada-2020-begins-orientation-pic2

பங்கஜ்: "நான் எதை செய்தாலும் சந்தோஷமாக இருப்பதுதான், இங்கு இருந்த 3 வாரங்களில் எனக்குக் கிடைத்த சிறந்த விஷயம், சூழல் என்னவாக இருந்தாலும், அதனை நான் சந்தோஷமாக எதிர்கொள்வேன்.”

நிஷாந்த்: “நிச்சயமற்ற நேரங்களில் சவால்களை எதிர்கொள்வதற்கான சமநிலை மற்றும் ஒழுங்குமுறையை இது கொடுக்கும்.”

அமர்: “நான் முன்னர் இருந்ததைவிட இன்னும் கொஞ்சம் தியானத் தன்மையுடன் இருப்பேன் என்று நம்புகிறேன். இந்த உலகைக் கையாள ஒரு ஆரோக்கியமான உடலும், மகிழ்ச்சியான மனமும் இருந்தால் போதுமானது. சாதனா பாதை தயார்ப்படுத்தல் நிகழ்ச்சிக்குப் பின் என்னுடைய உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதும், என் மனதில் ஒரு நொடி கூட அழுத்தம் இல்லாததும் எனக்கு தெளிவாகத் தெரிகிறது.

சந்தோஷ்: “சாதனா மென்மேலும் செய்வதால், மனதிற்கும், உடலுக்கும் இடையே உள்ள தடுப்பை அது இன்னும் நெகிழ்வுத் தன்மையுடனும், தெள்ளத் தெளிவாகவும் ஆக்கும் என்று நம்புகிறேன்.”

கேயுர்: “நேரத்தை எவ்வாறு சமாளிப்பது மற்றும் எதற்கு முன்னுரிமை அளிப்பது, எது முக்கியமானது, எது தேவையில்லாதது போன்ற பல விஷயங்களை இது எனக்கு கற்றுக் கொடுக்கிறது. முன்னர் செய்தது போல பயனற்ற விஷயங்களில் என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. ஆனால், இப்பொழுது கால அட்டவணை மிகவும் இறுக்கமாக இருப்பதால், நான் வேண்டுமென்று நினைத்தால் கூட, நேரம் இல்லை! வாழ்க்கையை மேம்படுத்த நான் ஒவ்வொரு நிமிடத்தையும் உபயோகிப்பது, எனக்குள் இருந்து ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கின்றது.”

நீங்கள் இந்தக் காலக்கட்டத்தில் யோக மையத்தில் இல்லாமல் வீட்டிலிருந்தால், நேரத்தை அதே விதமாக உபயோகித்து உங்கள் நலத்தில் கவனம் செலுத்தியிருப்பீர்களா?

 

அமர்: “இல்லவேயில்லை, அது வெறுப்பாக இருந்திருக்கும். சத்குருவின் இருப்பு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி, எனக்குள் கவனம் கொள்ளச் செய்தது.”

ஸ்வப்னில்: “இங்கு நான் என்னுடைய நேரத்தை உபயோகிப்பதற்கும் மற்றும் இங்கு நான் வழிக்காட்டப்படுகிற விதத்திற்கும் அருகில் வேறொரு சூழல் நெருங்கக்கூட முடியாது. இந்த இடமே ஒரு மாபெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. மற்ற அம்சங்களான உணவு மற்றும் சாதனா, வீட்டில் வேறு மாதிரி இருக்கும். அதனால், இந்த நொடியில் இவ்வளவு அழகான மற்றும் அதிர்வுள்ள இடத்தில் இருக்க நான் கண்டிப்பாக ஆசிர்வாதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.”

அபிஷேக்: “இல்லை, நான் சோம்பேறியாக இருந்திருப்பேன்! சாதனா பாதை எனக்குத் தேவையான செயலையும், சாதனா செய்வதற்கான வாய்ப்பையும் தருகிறது. நான் என்னுடைய எல்லாவற்றையும் தருவதற்கு, சூழலமைப்பை வழங்குகின்றது. மற்றும் என்னுடைய கவனச்சிதறலை எல்லாம் நீக்கிவிடுகிறது.”

ஸ்வர்ணலதா: :”இல்லை, இல்லவேயில்லை! நான் என்னால் சமைக்கக்கூடிய உணவு வகைகளைப் பற்றி பரப்பரப்பாக நினைத்துக் கொண்டிருப்பேன், வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருப்பேன், தேவைக்கு மேலே உறங்கியிருப்பேன், மேலும் 5 கிலோ கூடுதல் எடை போட்டிருப்பேன்.”

இந்த சாதனா பாதை நிகழ்ச்சிக்கு பல பேர் வரமுடியாமல் வெளியில் இருக்க, நீங்கள் வந்து சேர்ந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

isha-blog-article-sadhanapada-2020-begins-pradhakshana-pic4

ப்ரஷாந்த்: “இது எனக்கு ரொம்ப முக்கியமானது, மற்றும் இது என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. இந்த கொரோனா சூழ்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், வெளியில் இருப்பவர்கள் எல்லாம் இதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”

அமர்: “ரொம்ப அதிர்ஷ்டமாக உணர்கிறேன். ‘நீங்கள் ஏதோ ஒன்றை உங்கள் இதயபூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் விரும்பினால், இந்த பிரபஞ்சமே ஒன்றுகூடி அதனை அடைய உங்களுக்கு உதவும்’. மற்ற பங்கேற்பாளர்களுக்கும் இந்த வருட சாதனா பாதையில் சேர்ந்துகொள்ள விரைவில் வாய்ப்புக் கிடைக்க விரும்புகிறேன்.”

ஸ்வர்ணலதா: “நான் ரொம்ப அதிர்ஷ்டமுள்ளவளாக உணர்கிறேன். எனக்கு இதில் பங்குபெற அனுமதி கிடைக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், ஓரியண்டேஷன் தினத்தன்று எனக்கு ‘வாழ்த்துகள், உங்கள் பயணப்பெட்டியைக் கட்டி தயாராகுங்கள் என்ற தகவல் கிடைத்தது. இந்த உறுதிப்படுத்தல் தகவல் கிடைத்தவுடன் நான் ரொம்ப பரவசமடைந்தேன், என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.”

இஷாத்: “வெளியில் சிக்கிக்கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாதவர்களுக்காக நான் ரொம்ப வேதனைப்படுகிறேன். இதில் ஒரு சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும், ஏனென்றால் நாங்கள் முன்னர் சேர்ந்து தன்னார்வலராக இருந்துள்ளோம். நான் இங்கு இருப்பதில் ரொம்ப அதிர்ஷ்டமுள்ளவராக உணர்கிறேன். சாதனா பாதை 2020ல் ஒரு பங்கேற்பாளராக இருப்பதில் நான் சிலிர்ப்படைகிறேன்.”

அபிஷேக்: “நான் நிஜமாக என்னுடைய எல்லாவற்றையும் ஆபத்திற்கு உட்படுத்தினேன் – வேலை, சமூக வாழ்க்கை, குடும்பச் சூழ்நிலை, நிதி – பிறகு இது நடந்தது. நான் எனக்குள் உள்ள ஏக்கங்களை செவிமடுத்து இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். நாம், நமக்குள் இருப்பதை திறக்க வேண்டும், இல்லையென்றால் நாம் எப்போதும் ஒரு தடையுடன் வாழ்ந்துக் கொண்டிருப்போம்.”

ப்ரஷாந்த்: “நான் இங்கு வந்துவிட்டதை நினைத்து ரொம்ப சந்தோஷமடைகிறேன். நான் இங்கு 24 டிசம்பர் 2019 அன்று வந்தபோது, நான் தேர்ந்தெடுக்கப் படுவேனா என்ற சந்தேகம் இருந்தது. நான் தேர்ச்சிப் பெற்றவுடன், எவ்வளவு பங்கேற்பாளர்களால் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியும், மற்றும் நிகழ்ச்சி உண்மையிலேயே துவங்குமா என்ற சந்தேகங்கள் இருந்தன. ஆனால் நிகழ்ச்சி உண்மையிலேயே துவங்கியவுடன், நான் ரொம்ப சக்தியூட்டப்பட்டதாக உணர்ந்தேன்!”

ஸ்வப்னில்: “இது எனக்கு முக்கியமான ஒன்று. நான் இந்த வருட சாதனா பாதை பங்கேற்பாளராக இருப்பது குறித்து மிகவும் அதிர்ஷ்டமுள்ளவராகவும், ஆசிர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன். இந்த நொடியில், நான் இங்கிருப்பதை விட வேறெங்கு இருப்பதாகவும் என்னால் கற்பனைச் செய்துகூட பார்க்க முடியவில்லை. இதைவிட சிறப்பாக ஒன்றும் இருக்க முடியாது. எங்களுக்கு இந்த சுய – மாற்றத்திற்கான வாய்ப்பைக் கொடுத்த சத்குருவிற்கு நான் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”        

ஆசிரியர் குறிப்பு: இந்த உறுதிமிக்க குழுவில் உள்ள சாதனா பாதைப் பங்கேற்பாளர்கள், சவாலான இந்த நேரத்தில் எடுக்கும் உள்நிலை வளர்ச்சிக்கான பயணத்தைப் பற்றி அறிய, தொடர்ந்து இணைந்திருங்கள்.