பஞ்சபூத கிரியா ஆன்லைன்

மஹாசிவராத்திரியன்று சத்குருவுடன்

26 February 2025

03:00 AM - 03:30 AM

(Time is shown in IST)

Registration Closed

பஞ்சபூத கிரியா ஆன்லைன் நிகழ்ச்சி, வருடத்தின் மிகவும் சக்திவாய்ந்த இரவாகிய மஹாசிவராத்திரியன்று சத்குருவின் அருளை உணர்வதற்கான ஒரு தனித்துவமிக்க வாய்ப்பாகும்.

யோக வழிமுறையில், பஞ்சபூதங்கள் என்பவை பொருள் உடல் உட்பட எல்லா படைப்புகளுக்கும் அடிப்படையானதாகப் பார்க்கப்படுகிறது. யோக விஞ்ஞானத்தில், மனித உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை சுத்திகரிப்பதன் மூலம், உடலையும் மனதையும் உயிரோட்டமிக்க ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்லும் சக்திவாய்ந்த செயல்முறைகள் உள்ளன.

பஞ்சபூத கிரியாவில், பூதசுத்தி அல்லது பஞ்சபூத சுத்திகரிப்பு என்ற சக்திவாய்ந்த யோக செயல்முறையின் மூலம், தீவிரமான சாதனா மூலமாக மட்டுமே ஒருவர் பெறக்கூடிய பலன்களை, அனைவரும் பெறுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை சத்குரு வழங்குகிறார்.

பஞ்சபூதங்கள் உங்களுக்குள் செயல்படும் விதத்தைப் பொருத்தே உடல்நலம்-உடல்நலக்கேடு, அமைதி-குழப்பம், சந்தோஷம்-துயரம் போன்றவை நிகழும்.

பலன்கள்

உடலை உறுதிப்படுத்துகிறது

குறிப்பாக பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கிறது.

உளவியல் ரீதியான உறுதியற்ற தன்மைகளை சீர்செய்கிறது.

தூக்கமின்மையாலும், தொடர்ந்து பய உணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பெரிதும் உதவுகிறது.

Glimpses

நிகழ்ச்சி விபரங்கள்

பஞ்சபூத கிரியா வீடியோவை, நிகழ்ச்சி நிறைவுற்று அடுத்த 24 மணிநேரத்திற்கு நீங்கள் காணமுடியும்.

Translation will be available in Hindi, Kannada, Tamil and Telugu.

குறிப்பு:
Registration Closed

நிகழ்ச்சிக்கான விதிமுறைகள்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் 14 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 14ல் இருந்து 18 வயதுக்குள் இருப்பவர்கள் நிகழ்ச்சிக்கு பதிவுசெய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை.

பங்கேற்பாளர்களுக்கான ஓரியண்டேஷன் வகுப்பில் பிப்ரவரி 23 காலை 8.00 மணி முதல் பிப்ரவரி 26 காலை 8.00 மணி வரை பங்கேற்க முடியும்.

இது பஞ்சபூத கிரியா கிட் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும், செயல்முறைக்கு உங்களைத் தயார்படுத்தவும் உதவும்.

உங்களுக்கு நிலையான இணையதளத் தொடர்பு, தடையில்லா மின் விநியோகம் மற்றும் இணைய பிரவ்ஷருடன் செயல்படும் சாதனம் ஆகியவை தேவைப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொடர்புகொள்ள

 
Close