Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
மிகமிக முக்கியமானது, மற்றவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதல்ல, நீங்கள் அன்பானவராக இருக்கிறீர்கள் என்பதுதான்.
நீங்கள் பிணைக்கப்பட்டிருப்பது, உங்களுக்குப் பிடித்தமான அல்லது நேசமானவர்களுடன் மட்டுமல்ல. அதைவிட ஆழமாக, உங்களுக்குப் பிடிக்காதவர்கள், நீங்கள் வெறுக்கும் மனிதர்களுடன் கட்டப்பட்டு இருக்கிறீர்கள்.
முழு தெளிவு இருக்கும்போது தைரியம் தேவையில்லை. தெளிவே உங்களை கரை சேர்த்துவிடும்.
நாம் அனைவருமே ஞானத்துடன்தான் பிறக்கிறோம். அறியாமையில் இருப்பது நாமாக தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான்.
உயிர் இதமான இயல்பு நிலையில்தான் இருக்கிறது. மனம் மட்டும்தான் அழுத்தத்தில் இருக்கிறது.
யாராலும் உங்கள் மனத்தில் வலியை உருவாக்க முடியாது. அது நீங்கள்தான் – உங்களைச் சுற்றி நடக்கும் விஷயத்திற்கு எதிர்ச்செயலாக நீங்கள்தான் அதை உருவாக்கிக்கொள்கிறீர்கள்.
வயது அதிகமாகும்போது, உங்கள் உடலின் வேகம் குறைந்து போகலாம். ஆனால், உங்கள் உயிரோட்டம் குறைய வேண்டியதில்லை.