FILTERS:
SORT BY:
ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு தனிமையில் இருப்பது, மக்களிடம் இருந்து விலகி இருப்பது, மெளனத்தை ஏற்பது - இவையெல்லாம் பிரச்சனைகள் அல்ல, வாய்ப்புகள்.
வாழ்க்கையின் வெளிப்புற பரிமாணங்கள் உங்களுக்கு வசதியையும் சௌகரியத்தையும் கொண்டு வரலாம். உள்நிலை பரிமாணம் மட்டும்தான் நிறைவை கொண்டு வரும்.
கட்டாயத்தன்மை இருள் போன்றது - உங்களால் அதனுடன் சண்டை போட முடியாது. விழிப்புணர்வு என்னும் விளக்கை நீங்கள் ஏற்றிவிட வேண்டும்.
நோக்கம் மட்டுமே விஷயங்களை நடத்திவிடாது. அது திசையை மட்டுமே நிர்ணயிக்கும். பயணத்தை நீங்கள்தான் செய்தாக வேண்டும்.
உங்கள் கையில் நீங்கள் எடுத்துக்கொள்ளாத மனத்தின் விளைவுகள்தான் பயம், கோபம், நம்பிக்கை இழப்பு, துன்பம், விரக்தி, எல்லாம்.
எந்த உறவும் பரிபூரணமானது அல்ல - எப்போதுமே அது மாறக்கூடிய விஷயம்தான். தினம்தினம் அதை நீங்கள் நல்லபடியாக நடத்திக்கொள்ள வேண்டும்.