FILTERS:
SORT BY:
நோக்கம் மட்டுமே விஷயங்களை நடத்திவிடாது. அது திசையை மட்டுமே நிர்ணயிக்கும். பயணத்தை நீங்கள்தான் செய்தாக வேண்டும்.
உங்கள் கையில் நீங்கள் எடுத்துக்கொள்ளாத மனத்தின் விளைவுகள்தான் பயம், கோபம், நம்பிக்கை இழப்பு, துன்பம், விரக்தி, எல்லாம்.
எந்த உறவும் பரிபூரணமானது அல்ல - எப்போதுமே அது மாறக்கூடிய விஷயம்தான். தினம்தினம் அதை நீங்கள் நல்லபடியாக நடத்திக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் வெளிப்புற பரிமாணங்கள் உங்களுக்கு வசதியையும் சௌகரியத்தையும் கொண்டு வரலாம். உள்நிலை பரிமாணம் மட்டும்தான் நிறைவை கொண்டு வரும்.
நீங்கள் யார் என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்வதுதான். இது உங்களுக்கு புரிந்து விட்டால், குறைந்தபட்சம் உங்களை மட்டுமாவது நீங்கள் விரும்பிய விதத்தில் இருக்கும்படி ஆக்கிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருந்தால் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்வீர்கள். முக்கியமானது அதுமட்டும்தான்.