சத்குரு: வீரபாண்டிய கட்டபொம்மன் இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்துவைத்த முன்னோடிகளில் ஒருவர். அவர் ஒரு பாளையக்காரர், அதாவது ஏராளமான கிராமங்களை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பு. இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் அது இருந்தது. ஹம்பியின் கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசு காலத்தில் பாளையக்காரர்களை நியமிப்பது ஆரம்பித்தது. பிறகு அவர்கள் ஆற்காடு நவாப்பிற்கு கீழே சுய ஆட்சி அதிகாரம் கொண்டவர்களாக ஆனார்கள். அந்த சமயத்தில் பிரிட்டிஷ்காரர்கள் நவாபை கடன்வலையில் சிக்க வைத்திருந்தார்கள். அதனால் நவாப் அவர்களுக்கு பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையைக் கொடுத்திருந்தார். அனைத்து பாளையக்காரர்களும் அடிபணிந்தார்கள், கட்டபொம்மனைத் தவிர!

கட்டபொம்மனுடைய வெளிப்படையான புரட்சியும், தியாகமும் வீண்போகவில்லை! அடுத்த தலைமுறையில் எத்தனையோ இளம் விடுதலை போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் ஆனார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சரணடைய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மனுடன் பிரிட்டிஷ்காரர்கள் பேச்சுவார்த்தை முயற்சியை செய்தார்கள். அது வெற்றியடையவில்லை. அவர்களுடைய ஒரு சந்திப்பில் வன்முறை ஆகிவிட்டது. கட்டபொம்மன் ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றுவிட்டார். ஆங்கிலேய அரசு அவரது தலைக்கு சன்மானம் அறிவித்தது. இதைப் பார்த்த மற்ற பாளையக்காரர்கள் ஆவேசமானார்கள். அவர்கள் எல்லோரும் கிளர்ச்சி செய்தார்கள், இதுவே 1799ல் முதல் பாளையக்காரர் போராக ஆனது. ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் கோட்டையைத் தாக்கினார்கள். ஆனால் அதற்கு முன்பாக, நிபந்தனையற்ற சரணாகதி கோரி ஒருவரைத் தூதுவிட்டார்கள். அதற்கு கட்டபொம்மன், "இந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள், வாழ்வதும் சாவதும் இந்த மண்ணுடைய பெருமைக்காகவும் மானத்திற்காகவும் கண்ணியத்திற்காகவும் தான்!" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி, Veerapandiya Kattabomman Memorial Fort, Panchalankurichi

விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வீரன்

ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் தன்னுடைய கோட்டையை அழித்துவிடும் என்பது கட்டபொம்மனுக்குத் தெரியும். அதனால் அவரும் படைகளும் ரகசிய பாதை வழியாக தப்பித்துவிட்டார்கள். புதுக்கோட்டை பக்கத்தில் போய் பதுங்கி இருந்தார்கள். ஆனால் புதுக்கோட்டை ராஜா அவர்களுக்கு வஞ்சகம் செய்தார்; கட்டபொம்மன் சிறைப்பிடிக்கப்பட்டார்; பொது இடத்தில், புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடம் - கயத்தாறு

அவர் தூக்கில் தொங்குவதை மற்ற பாளையக்காரர்கள் பார்க்கும்படி செய்தார்கள். 'அவர்கள் புரட்சிசெய்தால் அவர்களுக்கும் இதே கதிதான்' என்று சொல்கிற எச்சரிக்கை அது. ஆனால் கட்டபொம்மனுடைய வெளிப்படையான புரட்சியும், தியாகமும் வீண்போகவில்லை! அடுத்த தலைமுறையில் எத்தனையோ இளம் விடுதலை போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் ஆனார்.

அதன்பிறகு வரவிருந்த இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் அடித்தளம் அமைத்துவிட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் வரலாற்றில் ஒரு பிரம்மாண்டமான நாயகனாக உயிர்வாழ்கிறார். அவரது துணிச்சலும் சாதுரியமும் என்றென்றைக்கும் கொண்டாடப்படும். அனைத்திற்கும் மேலாக, இந்த மண்ணின் மகத்தான மைந்தர் அவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முழுமையாக தலை வணங்குகிறோம்.

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடம் - விக்கிபீடியா,  Panchalankurichi Fort from Wikimedia