பத்திரிக்கையாளர்: சத்குரு Times now உங்களை வரவேற்கிறது. நாம் மிகவும் இக்கட்டான ஒரு தருவாயில் இருக்கிறோம். இந்து முஸ்லிம் உறவுநிலைகளில் மிக முக்கியமான ஒரு சூழல் இது. வெகுநாட்களாக நடைபெற்றுவரும் வழக்கின் பின்புலத்தில் இந்தக் கேள்வியை உங்களிடம் எழுப்புகிறேன். இந்த வழக்கு பற்றிய விவாதங்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த வழக்கு எத்திசை நோக்கி செல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சத்குரு: இந்த வழக்கு இத்தனை தூரம் வந்திருக்கக் கூடாது. நடுவர் மன்றத்திற்கு இதுகுறித்து முடிவெடுப்பது மிகவும் சிரமம். மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம் இது, இதனை ஏதோ நிலம்சார்ந்த வழக்குபோல் அணுகுகிறார்கள். தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், யாரோ ஒருவர் வருத்தப்பட போகிறார். இரு சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினை நடைபெறும்போது கூட தனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகவே ஒரு சகோதரர் நினைப்பார்.

பல்வேறு விதங்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முனைந்தும், அவை அனைத்தும் தவறியிருக்கின்றன. தீர்ப்பு எப்படிப்பட்டதாய் இருந்திருந்தாலும், சம்பந்தப்பட்ட அனைவருமே அதற்கு இணங்கிப் போயிருக்கிறார்கள். இது மிக மிக முக்கியம். இந்தப் பிரச்சனை 1528ம் ஆண்டிலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நம்முன் இருக்கும் பிரச்சனையே இவ்வளவுதான் - கோவில் இருந்ததா இல்லையா என்கிற கேள்விக்கு இனி இடமில்லை. கோவில் இருந்ததற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் நிரம்ப உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேல், அன்று படையெடுத்து வந்தவர்கள் தாங்கள் ஜிஹாத் செய்ததாக நினைத்துக் கொண்டனர். இந்த தேசத்திலுள்ள விக்கிரகங்களை அழிப்பதை அவர்கள் தவறென நினைக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, உருவ வழிபாடு என்பது தவறான விஷயம்.

நாட்டின் வளர்ச்சிக்கு, தேசத்தின் வருங்காலத்திற்கு தடையாக இருக்கக்கூடிய விஷயங்களான - இறையாண்மை, குடியுரிமை பிரச்சனை, கோவில்-மசூதி பிரச்சனை, இவை அத்தனையும் நமது தலைமுறையிலேயே தீர்க்கவேண்டும். இதனால், இந்த தேசத்தில் வாழப்போகும் வருங்கால தலைமுறையினர் தீரா பிரச்சனைகளோடு வாழவேண்டிய அவசியம் இருக்காது.

இன்றைய இஸ்லாமியர்கள் அன்றைய இஸ்லாமியர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிக மிக முக்கியம். அதேபோல, இன்றைய இஸ்லாமியர்களை அன்றைய இஸ்லாமியர்களுடன் ஒப்பிடாமல் இருப்பது இந்து சமூகம் செய்யவேண்டிய முக்கியமான வேலை. இப்படி பார்த்தால், இந்தப் பிரச்சனையை சுலபமாக தீர்த்து வைக்கலாம். தற்சமயம், இந்த பெருஞ்சுமையுள்ள பணியினை கையாண்டு கொண்டிருக்கிறோம். ஆனால், இது ஒருவிதத்தில் முடிவுக்கு வருவதும் நல்லதுதான். ஏனெனில், அடுத்த தலைமுறையிடம் இதனை தள்ளிவிடுவது தீர்வை தராது - இதனைத்தான் நாம் வெகுகாலமாக செய்து வந்திருந்திருக்கிறோம்.

பல்வேறு நிலைகளில் இந்த முயற்சியை நாம் இப்போது எடுப்பது மிக மிக முக்கியம். ஏனெனில், தங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்கிற நம்பிக்கையில், இந்த அரசிற்கு பெரும்பான்மையை மக்கள் அளித்திருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு, தேசத்தின் வருங்காலத்திற்கு தடையாக இருக்கக்கூடிய விஷயங்களான - இறையாண்மை, குடியுரிமை பிரச்சனை, கோவில்-மசூதி பிரச்சனை, இவை அத்தனையும் நமது தலைமுறையிலேயே தீர்க்கவேண்டும். இதனால், இந்த தேசத்தில் வாழப்போகும் வருங்கால தலைமுறையினர் தீரா பிரச்சனைகளோடு வாழவேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் புதுப் பிரச்சனைகளை கையாளட்டும், பழைய பிரச்சனைகள் வேண்டாம்.

பத்திரிக்கையாளர்: சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான மக்கள் இதனை பெரும்பான்மையினரின் பிரச்சனையாக அணுகுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் பதிலென்ன?

சத்குரு: இவர்கள் சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான், அவர்கள் இஸ்லாமியர்கள் கூட கிடையாது. அவர்கள் எப்போதுமே பிரச்சனைகளை உருவாக்குவதிலேயே முழு கவனம் செலுத்துகின்றனர். பாபர் மசூதி வழக்காகட்டும் அல்லது அயோத்தி ராமர் கோவில் வழக்காகட்டும் - அதனை நீங்கள் எவ்வாறு அழைக்க நினைத்தாலும், கடந்த 40, 45 ஆண்டுகளில் தீர்வு காணவேண்டும் என்கிற முனைப்பு தெரிகிறது. பொறுப்புள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள், அவ்விடத்தில் கோவில் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்களை சமர்பிக்கும் வேளையில்... அங்குள்ள மசூதியில் தூண்களும் அதில் இந்து சிற்பங்களும் விரவிக் கிடக்கும்போது, இங்கு 12 தூண்கள் இருந்தன, அதில் இந்து சிற்பங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னபோது, “இந்த ஆதாரங்கள் போதாது,” என்று சில அறிஞர்கள் கூறினர். இதனால், 2003ம் ஆண்டில் அலகாபாத் நீதிமன்றம் மற்றொரு அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டது. அந்த அகழ்வாராய்ச்சியில், 17 வெவ்வேறு இடங்களில், 50 தூண்களுக்கு மேல் கண்டெடுக்கப்பட்டது. இப்போது இருக்கும் இடத்தில் மிக பிரம்மாண்டமான கோவில் இருந்ததற்கான சான்றுதான் அது.

பாபர் மசூதி என்பது முகமதுவை சார்ந்து அமைக்கப்பட்டதல்ல. அவரது மரபைச் சேர்ந்ததும் அல்ல. அது பாபரை சார்ந்தது.

போதுமான ஆதாரங்கள் உள்ளன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர், தன்னைத்தானே அறிஞர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் இவர்கள், இவர்கள் தொல்லியல் துறை நிபுணர்கள்கூட கிடையாது, தேசத்தை திசைதிருப்பி, இதனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக ஆக்கி இருக்கின்றனர். இது அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த ரீதியில் அவர்கள் தேசத்தை துண்டாடிவிட்டனர். இவர்கள் இந்த விஷயத்தில் தலையிட அவர்களுக்கு அதிகாரமில்லாமல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்த தேசத்தில் தீர்வை பற்றி பேச வேண்டும், இருக்கும் பிரச்சனைகள் வருங்காலத்தில் தீர்ந்துவிடும் என விட்டு வைக்காமல், தீர்வை எதிர்நோக்க வேண்டும். தீர்வு அதுவாகவே சும்மா வராது. நாம்தான் தீர்வைத் தேட வேண்டும். நாம் எந்த முடிவிற்கு வந்தாலும், ஒருவருக்கு சாதகமாக இருக்கும், இன்னொருவர் தனக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக நினைப்பார். ஆனால், இந்தப் பிரச்சனையின் இயல்பை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பாபர் மசூதி என்பது முகமதுவை சார்ந்து அமைக்கப்பட்டதல்ல. அவரது மரபைச் சேர்ந்ததும் அல்ல. அது பாபரை சார்ந்தது.

அதனால், பாபருடன் இஸ்லாமிய சமூகம் அடையாளம் கொள்ளக்கூடாது. அப்படி அவர்கள் செய்தால், பாபர் செய்த அக்கிரமங்களும் அவர்களையே சேரும். அவர்கள் அந்த அடையாளம் எடுக்கக்கூடாது. ஆனால், இந்துக்களுக்கு, இது இராமரின் அடையாளம். தென்னிந்தியாவில் இராமர் பெரிதாக வழிபடப்படுவதில்லை. ஆனால், வடஇந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அவரை வழிபடுகின்றனர். அவர்களுக்கு இது உச்சமான ஓர் இடம். நாம் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இராமரை வழிபடும் இந்திய மக்களுக்கு அவ்விடம் மதீனாவைப் போன்றது. அதனால், வெறும் 2.77 ஏக்கர் நிலத்திற்காக நாம் சண்டையிட்டுக்கொள்ள வேண்டாம். 5 நூற்றாண்டுகளாக சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அளவிற்கு இவ்விஷயம் ஏற்புடையதா என்ன?

பத்திரிக்கையாளர்: இராமர் அந்த குறிப்பிட்ட மசூதியின் கூரை இருக்கும் இடத்தில் பிறக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டால், இந்த விஷயம் பல வருடங்களுக்கு முன்பே தீர்விற்கு வந்திருக்கும். இதைத்தான் ராஜீவ் தவான் நீதிமன்றத்தில் சொன்னார். இந்த விவாதத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: யாருக்கும் அவர்களுடைய தாத்தா மிகச்சரியாக எங்கு, எவ்விடத்தில் பிறந்தார் என்பதுகூட தெரியாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதில் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் சரியாக அந்த இடத்தில் பிறந்தாரா, இல்லை அவ்விடத்திலிருந்து 10, 15 அடிகள் தள்ளிப் பிறந்தாரா என்பதில் என்ன ஆகப் போகிறது? என்ன மாதிரியான விவாதம் இது? துரதிர்ஷ்டவசமாக, மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தீர்வை நாடுவதில்லை, பிரச்சனைகளிலேயே புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காணவேண்டிய நேரம் இது. பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதற்கு தீர்வு காணவேண்டும். இதனை நாம் மதித்து, முன்னோக்கி செல்லவேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பொறுப்புள்ள இஸ்லாமிய சமூகம், அவர்கள்தான் 95 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பவர்கள், பிரச்சனை ஏற்படுத்தக் கூடியவர்கள் வெறும் 5 சதவிகிதம்தான், அவர்களை நாம் புறக்கணித்து விடலாம். 

பொறுப்புள்ள சமூகத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இந்த 2.77 ஏக்கர் நிலம் குறித்து உணர்ச்சிகள் கிடையாது. அவர்களுக்கு இதனை தீர்த்துக் கொள்வதில்தான் விருப்பம். தீர்ப்பு வருவதற்கு முன்னரே அவர்கள் இதுகுறித்து முடிவெடுத்தால் சிறப்பு. ஏனெனில், வரலாற்றினை அவர்களால் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியும். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பினை வழங்கும் முன், அவர்களுடைய அறிக்கையினை அவர்கள் வெளியிட வேண்டும். “உங்களுக்கு மிக முக்கியமான இடம் அது. அதனால், நீங்கள் வேண்டியதை செய்துகொள்ளுங்கள்,” என்று இந்த தேசத்து இஸ்லாமியர்களின் அறிக்கை இருக்கவேண்டும். இந்துகளுக்கு முஸ்லிம்கள் எதிரி என்கிற நிலைப்பாட்டிற்கான நேரம் இது அல்ல.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு இந்த இடம் பற்றிய உணர்வு நிரம்ப இருக்கிறது, இன்னொருவருக்கு இது சொத்து மட்டுமே. அதனால், எங்கிருந்து தீர்வு வரவேண்டும் என்று சொல்லுங்களேன்... தீர்வு வராவிட்டால், தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தாலுமே இந்த பிரச்சனையினை நம்மால் இழுத்துக் கொண்டே செல்லமுடியும். நான் சொல்வதெல்லாம், இந்தப் பிரச்சனையை இனிமேலும் இழுத்துக்கொண்டே இருக்க வேண்டாம். நமக்குள் நிலவும் உண்மையான பிரச்சனைகளை நாம் பார்ப்போம். புது பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம். இந்தியாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன - உணவுத் தட்டுப்பாடு, வறுமை... மேலும் பலப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் தீர்ப்பதை விடுத்து, புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு கால்பந்து ஆடுவது சரியல்ல.

பத்திரிக்கையாளர்: சட்டத்தைக் கையாளும் ஒரு சிலர், சட்டம் உணர்ச்சிகளை பார்க்காது என்பர். “அயோத்தியில் இராமர் பிறக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. அந்த மசூதியினுடைய கூரைக்கு கீழ் இராமர் பிறக்கவில்லை என்பதை இந்துக்கள் ஒப்புக்கொண்டிருந்தால், இந்த வழக்கு என்றோ முடிந்திருக்கும்,” என்று அவர்கள் விவாதிப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?

சத்குரு: இராமரும் முகமதுவும் நூறு அடி இடைவெளியில் பிறந்து, இது முகமதுவின் இடம், இது இராமரின் இடம் என்று நாம் விவாதித்துக் கொண்டிருந்தால், இராமரின் பிறப்பிடம் மிகப் பெரிய சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கும். முகமது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் பிறந்தவர், இராமர் இவ்விடத்தில் பிறந்தார். இராமர் அந்த கூரையிலிருந்து 100 அடி தள்ளிப் பிறந்தால் அதில் என்ன பிரச்சனை உங்களுக்கு? வாக்குவாதம் இத்திசையில் செல்லக்கூடாது. இந்த வாதம் வருவதே, உங்களுக்கு தீர்ப்பு வேண்டாம் என்று நினைப்பதால்தான். இந்த பிரச்சனை பல பேருக்கு நல்ல முதலீடாக அமைந்திருக்கிறது. இதை வைத்து அவர்களது அரசியல் எதிர்காலத்தை செதுக்குகிறார்கள், வேறு சிலவற்றையும் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

முகமது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் பிறந்தவர், இராமர் இவ்விடத்தில் பிறந்தார். இராமர் அந்த கூரையிலிருந்து 100 அடி தள்ளிப் பிறந்தால் அதில் என்ன பிரச்சனை உங்களுக்கு?

குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த, அந்த சில அறிஞர்கள், அவர்கள் இந்திய தொல்லியல் துறை எந்த ஆராய்ச்சி முடிவுகளோடு வந்தாலும் அவற்றை அவர்கள் இகழ்ந்த விதம் இருக்கிறதே, அதனை நீங்கள் பார்த்தால், அவர்களுக்கு தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பதை கவனிக்கலாம். அவர்களுக்கு சான்றுகள் மீது நாட்டமில்லை. சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது அங்கு கோவில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. இராமர் அங்கு பிறந்தாரோ பிறக்கவில்லையோ அதுகுறித்து நீங்கள் ஓயாமல் வாதித்துக்கொண்டே இருக்கலாம். 6000 ஆண்டுகள் கடந்துவிட்டன. யாராலும் இதற்கு பூகோள ரீதியாக பதில் தரமுடியாது.

ஆனால், அவ்விடத்தில் கோவில் இருந்தது மட்டும் நூறு சதவிகித உண்மை. எல்லோருக்கும் இது தெரியும். மசூதி இடிக்கப்பட்டபோது இஸ்லாமியர்களுக்கு அது சரியாக இல்லை. வரலாற்றில் சில பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்திட வேண்டும். யாரோ ஒரு சிலர் வரலாற்றையே மாற்றி எழுதப் பார்க்கிறார்கள் - இந்துக்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஒரு பிரச்சனையில் அத்தனை உணர்ச்சிகளின் விளையாட்டுகள் இருக்கின்றன. இவ்வளவு தூரம் அது வளர்ந்துவிட்டது - இது தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கும்.

ஏதோ ஒரு வழியில் நாம் தீர்வினை நாட வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கினாலும்கூட, மறுபடியும் மூன்றில் ஒரு பகுதி ஒருவருக்கும், மூன்றில் இரு பகுதி மற்றொருவரையும் சேரும் - அப்போதும் தீர்வு கிடைக்காது. இறுதியான, நிலையான தீர்வுகளை நாம் எடுக்கவேண்டும். அந்தப் படி எடுப்பதற்கு நமக்கு துணிச்சல் இல்லாத பட்சத்தில், நாம் அடுத்த தலைமுறை தீர்த்துக் கொள்ளட்டும் என்று எத்தி உதைத்து விடுகிறோம். இது பிரச்சனைகளை கையாளக்கூடிய வழியல்ல.

பத்திரிக்கையாளர்: எந்த வழக்கிலும் வெற்றியாளர் தோல்வி பெறுபவர் இருப்பார்கள். எந்த ஒரு உள்குத்தும் இல்லாமல், முழு வழக்குமே இந்துக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அடுத்த தலைமுறையிடம் இந்த வழக்கை விடக்கூடாது என்கிறீர்களே அதனால் கேட்கிறேன்...

நாம் இதனை புரிந்துகொள்ள வேண்டும் - 1855ம் ஆண்டில், இதில் கொடுமையான உரிமைசார் பிரச்சனைகள் நிலவியது. ஆனால், 1857ம் ஆண்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் முதல் சுதந்திரப் போராட்டத்திற்காக இணைந்தார்கள். இந்த இரு சமூகங்களும் இணைந்தால், தாங்கள் மிகவும் பலவீனமாகி விடுவோம் என்பதை அதன்பின்புதான், காலனித்துவ வாதிகள் உணர்ந்தார்கள். அதனால், கிழக்கிந்திய கம்பெனி, இந்த சமூகங்களை பிரிப்பதற்கு பலப்பல திட்டங்களை வகுத்தது. முஸ்லிம்கள் தனிக் கல்வி பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுவிட்டால், அவர்களுக்கு தனியான வாக்குகளும் வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கிற்கு வரும். இந்துக்களும் தனியாக ஓட்டளிப்பார்கள். நாட்டை துண்டாட இதுபோன்ற பலச் சட்டங்களை அவர்கள் கொண்டு வந்தார்கள். அவர்கள் வகுத்த அந்த தந்திரப் பொறிக்கு நாம் இன்றும்கூட அடிமைகளாக இருக்கவேண்டாம்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகு, நீங்கள் ஒரு இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, அது உங்கள் தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கட்டும். ஆனால், நாம் அனைவரும் ஒரு தேசத்தவர் என்கிற உணர்வு கொள்வோம். நமக்கு தீர்வு வேண்டுமென்றால், இது மிகவும் அவசியம். “நான் இந்துக்களுக்கு ஆதரவளிக்கிறேன்,” என்று என் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், நான் அப்படிப்பட்டவன் இல்லை. இது இந்துக்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ ஆதரவு தெரிவிப்பது பற்றிய விஷயமில்லை. இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கும் முட்டுக்கட்டைகளை அழித்திட வேண்டும் என்பதே என் நோக்கம்.

தேசத்தின் 95 சதவிகித மக்கள் என்னுடைய இந்த நிலைப்பாட்டில் உடன் இருக்கின்றனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் தேசத்திற்கு தடைக்கல்லாய் இருப்பவை நீக்கப்பட வேண்டும் - அது எந்த வழியில் நடந்தாலும் சரி. தற்சமயம், இந்தப் பிரச்சனை அந்த தடைகற்களில் ஒன்றாக இருக்கிறது. இது தேசத்திற்கு பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை நீக்கவேண்டும். இராமரை அயோத்தியில் இருந்து அகற்றிவிட்டு, சென்னையில் வைக்க முடியுமா என்ன? அது சாத்தியமா?

பத்திரிக்கையாளர்: அதற்கு வாய்ப்பில்லை.

சத்குரு: அவர் தமிழ்நாட்டிற்கும் வந்தார் அல்லவா? அதனால் அவர் தமிழ்நாட்டில் பிறந்தார் என்று சொல்லிவிட முடியுமா? அது வேலை செய்யாது. அதனால், அது எப்படி வேலை செய்யுமோ அப்படி தீர்வுகொண்டு வருவோம். எந்தப்புறம் சார்ந்து இருக்கிறோம் என்பது கேள்வியல்ல. நமக்கு தீர்வுவேண்டும். இந்த தேசம் முன்னோக்கி செல்ல நமக்கு தீர்வுவேண்டும்.

பத்திரிக்கையாளர்: அப்படியென்றால், இந்தப் பிரச்சனையில் உங்களைப் பொறுத்தவரை சிறந்த தீர்வு என்னவாக இருக்கும்?

சத்குரு: இறையாண்மை குறித்த பிரச்சனைகள் உள்ளன - அவற்றை நாம் தீர்க்க முற்படுகிறோம். கோவில்-மசூதி பிரச்சனை இருக்கிறது - அதையும் தீர்க்க முற்படுகிறோம். இது நல்லதல்லவா? பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் இந்த அரசிற்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். அரசு பிரச்சனைகளை தீர்க்க முற்படுகையில், அது பிழையில்லாமல், மிக நேர்த்தியாக நடைபெறுமா? சொல்ல முடியாது. எந்த மனிதரும் ஆகச் சரியானவர் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு சரியான நோக்கங்கள் இருக்கலாம், ஆனால் நாம் ஏதோவொன்றை செயல்படுத்தும் போது, அது சரியாகவே நடந்துவிடும் என்பதில்லை. அந்த குறைபாடுகளை நாம் அநீதியாக பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனை நாம் சற்று நேரத்திற்கு ஒருபுறமாக வைத்துவிடுவோம்.

இந்த முழு பிரச்சனையிலுமே விஷமத் தனத்தை காலனித்துவ சக்திகள் உருவாக்கி இருக்கின்றன. இரண்டாம் கட்ட விஷமங்கள், தன்னை இடதுசாரிக் கொள்கைகளோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருசில அறிஞர்களாலும் பேராசிரியர்களாலும் உருவாக்கப்படுகிறது. நாம் இஸ்லாம் என்று சொல்லும்போது, முகமது அவர்களை பற்றி சொல்கிறோம் என்பதை அவர்களுக்கு நாம் நினைவூட்ட வேண்டும். முகமது சொன்னார், “இந்த பூமியே எனக்கு மசூதிதான்,” என்று. இதைவிட ஒரு சிறந்த, அனைவரையும் இணைத்துக்கொள்ளும் ஒரு வாக்கியத்தை ஒருவர் சொல்லிவிட முடியுமா? அதனால், அவர் வாக்கியப்படியே முஸ்லிம்கள் செல்லட்டும். இந்துக்களைப் பற்றி பேசும்போது, தற்சமயம் நாம் இராமரைப் பற்றி பேசுவதால் அவரையே உதாரணமாக கொள்வோம் - தனது வாய்மையினால் அவர் தனது ராஜ்ஜியத்தையே துறந்தார். ராஜாவாக முடிசூடப்பட்டவரின் மனைவியை கடத்தினர், மேலும் அவருக்கு நடக்கக்கூடாத பல விஷயங்கள் நடந்தன. ஆனால், பலருக்கும் தீங்கிழைத்த தனது எதிரியை கொன்றுவிட்ட போதும்கூட, அவனை கொன்று விட்டோமே என்று வருத்தப்பட்ட ஒருவர் அவர். அப்படிப்பட்ட ஒரு மனிதருக்காகத்தான் நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

இதுபோன்ற விஷமத்தனங்கள் இஸ்லாத்திலிருந்தோ அல்லது இந்து சமூகத்திலிருந்தோ ஏற்படுவதில்லை. இரண்டு பக்கமும் துஷ்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், நான் இல்லை என்று சொல்லவில்லை; - ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் இடதுசாரிகளால் ஏற்படுபவை. அவர்களுக்கு மதத்தின் மீது அப்படியென்ன ஈடுபாடு? அவர்களுக்கு மதச்சார்பே இருக்கக்கூடாது. ஆனால், அவர்கள் எப்போதும் மதத்துடனே விளையாடுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள் இதுதான் - நீங்கள் யாருடைய பிரதிநிதி என்பதை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் முகமதுவின் பிரதிநிதி என்றால் - நீங்கள் இதைச் செய்ய முடியாது. நீங்கள் இராமரின் பிரதிநிதி என்றால் - நீங்கள் இதைச் செய்ய முடியாது. நீங்கள் கார்ல் மார்க்சின் பிரதிநிதி என்றாலும் நீங்கள் இதைச் செய்ய முடியாது.

நான் இஸ்லாத்தில் பண்டிதம் பெற்றவன் அல்ல. நான் அறிந்த சிறு விஷயங்களில், மசூதி என்பது சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் அது. முகமது ஒரு மசூதியை பற்றி பேசும்போது, அது எவ்விடத்தில் வேண்டுமென்றாலும் இருக்கலாம், திறந்தவெளியில் கூட இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை - அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும். வெளிப்புற சுற்றத்தை பற்றி மட்டுமல்ல, எல்லாவிதங்களிலும் சுத்தமாக இருக்கவேண்டும். அவர் என்ன சொல்கிறார்

பத்திரிக்கையாளர்: இந்த இடதுசாரிகளை விவரிக்க பிரதமர் ஒரு புது வார்த்தையை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் அதிகாரத்திற்கு மிக அருகில் அமர்ந்திருப்பதால், இந்த தேசத்தில் உள்ளோர் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். தனிப்பட்ட நபர்கள் பிறரின் கைப்பாவையாக இயங்குவதிலோ, ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதன்பின் செல்கிறார்கள் என்றோ நம்புகிறீர்களா?

சத்குரு: கார்ல் மார்க்ஸ் குறித்து கோட்பாடு இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தை வடிவமைத்தபோது, அவர் உலகின் பணக்கார தேசம் கம்யூனிசத்தை கடைபிடிக்கும் என்று நினைத்தார். ஏனெனில், அவருக்கு மனிதத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்காலத்தில் வறுமை இருந்தால்தான் நாம் கம்யூனிஸ்டு ஆகமுடியும் என்று எண்ணுகிறார்கள். அதனால், மக்கள் கம்யூனிஸ்டுகளாக ஆக வேண்டுமென்றால், தீரா வறுமை தலைவிரித்தாட வேண்டும். அதனால், அவர்கள் அதை நோக்கி வேலை செய்கிறார்கள். அவர்களை நாம் வீழ்த்தவேண்டும். ஏனெனில், அது தேசத்திற்கு நல்லதல்ல. தேசம் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தங்கள் கனவுகளை நனவாக்க மக்கள் பாடுபடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்: எப்படிப் பார்த்தாலும் ஒரு நீதிமன்ற வழக்கில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார் அல்லவா? ஒருவர் இழப்பை சந்தித்தாக வேண்டும். அவர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது? அவர்களை காயப்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி? இந்த மீட்பு நடவடிக்கையை எவ்வாறு வடிவமைப்பது?

சத்குரு: ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இஸ்லாத்தில் பண்டிதம் பெற்றவன் அல்ல. நான் அறிந்த சிறு விஷயங்களில், மசூதி என்பது சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் அது. முகமது ஒரு மசூதியை பற்றி பேசும்போது, அது எவ்விடத்தில் வேண்டுமென்றாலும் இருக்கலாம், திறந்தவெளியில் கூட இருக்கலாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை - அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும். வெளிப்புற சுற்றத்தை பற்றி மட்டுமல்ல, எல்லாவிதங்களிலும் சுத்தமாக இருக்கவேண்டும். அவர் என்ன சொல்கிறார் என்றால் சர்ச்சைகள் கூடாது என்று. தூய்மையான அவ்விடத்தில் நாம் கூடி, இறைவனை தொழுவோம் என்கிறார்.

நீங்கள் எதனை உச்சபட்ச சாத்தியமாக கருதுகிறீர்களோ அதனைத்தான் தேடுகிறீர்கள். அப்பேர்பட்ட ஒரு இடத்தில், சர்ச்சையான ஒரு சூழலில் நிலவும் எதிர்மறை சக்தியும், தன்னுடைய கோவிலை யாரோ அபகரித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் அவர்கள் கொந்தளிப்பதும் வேண்டாம். இருவருக்குமே சமமான நீதியை பகுத்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுவது எப்படி இருக்கிறதென்றால், சாலமனின் ஞானத்தைப்போல் இருக்கிறது. தன் குழந்தை என்று பஞ்சாயத்துக்கு வந்த இரு பெண்களிடம், “குழந்தையை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்,” என்று அவர் சொன்னார்.

உண்மையான தாயார் குழந்தை வெட்டப்படுவதை தடுக்க, “நீயே குழந்தையை எடுத்துக்கொள். நான் என் குழந்தை இரண்டாக வெட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன்,” என்றார். சாலமனின் தீர்ப்பைப்போல, இரண்டாக, சரிசமமாக வெட்டிக் கொடுப்பதில் அர்த்தம் ஒன்றும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், அனைவருக்கும் நன்மை ஏற்படுத்தும் விதமாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - ஆனால், அதில் ஒருவர் காயப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். நீதிமன்றம் சட்டப்படி நடந்துகொள்ளும், காயப்பட்டவர்களை தணிக்க அது எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதனால், அரசு மக்களை தணிக்க அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யவேண்டும். அது மிக முக்கியம். இந்து சமூகம் பாதிக்கப்பட்டவர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் வழங்க வேண்டும். அது மிக மிக முக்கியம். “நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்,” என்று நினைத்து பட்டாசுகளை வெடித்து கும்மாளமிட்டு கொண்டாடக்கூடாது. பிறரை வணங்கிச் செல்லும் இராமரின் பணிவு, உங்களிடமும் இருக்கவேண்டும்.

பத்திரிக்கையாளர்: அற்புதமான வார்த்தைகள் சத்குரு. வெற்றிக் கொண்டாட்டம் வேண்டாம். இராமர் கற்றுக்கொடுத்த அந்த பணிவினை நாமும் வெளிப்படுத்துவோம், வெற்றிக் களிப்பின் போதும்கூட. மிகுந்த நன்றிகள் சத்குரு.