சத்குரு:

உங்களுடைய எண்ண ஓட்டம், உணர்தல், புரிதல் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களிடையேதான் நீங்கள் எப்போதும் நண்பர்களை உருவாக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் தேடுவதெல்லாம், உங்களிடமிருந்து வெளிப்படும் எந்தமாதிரி அர்த்தமில்லாத ஒன்றுக்கும் ஆதரவளிக்கும் கருத்துதான்.

friendshiptamiltweetbysadhguru

நல்ல நண்பர் நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று சொல்வதில்லை

ஒரு குளிர்காலப் பருவத்தில் இது நிகழ்ந்தது, சின்னஞ்சிறு பறவையொன்று இலையுதிர்காலத்தைச் சற்றுக் கூடுதலாக அனுபவித்துவிட்டதால், குளிர்காலம் வருவதற்குள் தெற்கு நோக்கிய பயணம் செய்யத் தவறிவிட்டது. பனி தொடங்கிய பிறகு சிறிது தாமதமாகப் பறந்து செல்ல முயற்சித்ததில், அது குளிரில் விரைத்துப்போய் கீழே விழுந்துவிட்டது. அந்த வழியாகச் சென்ற ஒரு பசு தற்செயலாக அந்தப் பறவை மீதே சாணமிட்டுச் சென்றது. friendshiptamilblog-subjectimageவெதுவெதுப்பான சாணத்தின் குவியலுக்குள் இருந்த பறவை மெல்ல விரைப்பு நீங்கி, உற்சாகமாகக் கீச்சிடத் தொடங்கியது.

ஒரு பூனை அந்தப்பக்கம் சென்றுகொண்டிருந்தது. அது கீச்சொலியைக் கேட்டது, சுற்றுமுற்றும் பார்த்தது, சாணத்திற்குள்ளிருந்து கீச்சொலி வருவதைப் பார்த்தது, உடனே சென்று சாணத்தைத் தள்ளிவீசியது; சாணத்திற்குள் இருந்த பறவையை வெளியில் இழுத்துத் தின்றுவிட்டது. ஆகவே, உங்கள் மீது சாணத்தை வீசுவது யாராக இருந்தாலும், அவர் உங்களது எதிரியாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

உங்களை சாணத்திலிருந்து வெளியில் எடுப்பவர் யாராக இருந்தாலும், அவர் உங்களுக்கு நண்பராக இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் ஒரு சாணக்குவியலுக்குள் இருக்கும்போது, உங்களது வாயை மூடியிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

வெறுப்புக்கு ஆளாகக்கூடிய துணிவு

நீங்கள் ஒருவருக்கு நண்பராக இருந்தால், அவர்களிடம் இருக்கும் தவறைக் குற்றம் கூறிக்கொண்டே இருக்கவேண்டியதில்லை; அது தேவையல்ல. ஆனால் அதே நேரத்தில், அவர்களின் வெறுப்புக்கு ஆளாகக்கூடிய துணிவும் உங்களுக்கு இருக்கவேண்டும். மற்றவர்களின் விருப்பத்துக்கு ஆளாகும் முயற்சியில், உங்களைச் சுற்றிலும் ஏதோ ஒரு விதமான இனிமையைத் தக்கவைத்துக்கொள்ள முயலுவதிலே, விரும்பத்தகாத எவ்வளவு அம்சங்களை உங்களுக்குள் நீங்கள் புதைத்து வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.

விரும்பத்தகாத தன்மையை நீங்கள் புதைத்தால், அந்தத் தன்மையின் விதைகளை நீங்கள் மண்ணுக்குள் இட்டால், விரும்பத்தகாத கனிகளையே நீங்கள் அறுவடை செய்வீர்கள். உங்களுக்கு உண்மையாகவே ஒரு நண்பர் இருந்தால், அவன் அல்லது அவளின் வெறுப்புக்கு ஆளாகக்கூடிய துணிவுடன் இருப்பதுடன், அப்போதும் மாறாத அன்புடனும், நட்புடனும் நீங்கள் இருக்கவேண்டும். தற்போது, உங்களுடைய நட்புறவானது விவாதங்கள், விருப்பங்கள் மற்றும் விருப்பமின்மைகளின் மீதே எப்போதும் உருவாக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் ஆப்பிளும், ஆரஞ்சுப் பழங்களாக இருந்தாலும்கூட, அப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும்.

உங்களைத் தட்டிக்கேட்கும் துணிவுடன், அதே நேரம் உங்களிடம் அன்பாகவும், நல்லவிதமாகவும் இருக்கும் ஒருவரே உண்மையான நண்பர் – அதுதான் நட்பு.

ஒரு முறை, அமெரிக்கப் படைத்தளபதிகள் மூவர் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் தங்களது படைவீரர்களுடன் க்ராண்ட் கன்யான் நதியோரம் பயணம் மேற்கொண்டிருந்தனர். முதல் தளபதிக்கு அவரது படைப்பிரிவினரின் துணிவு மற்றும் கீழ்ப்படியும் தன்மையைப்பற்றி பெருமை பேசிக்கொள்ள விருப்பமாக இருந்தது. ஆகவே அவர், “என்னுடைய படைப்பிரிவைப் போல் வேறொன்று இல்லை. துணிவு மற்றும் கீழ்ப்படிதலில் மிக உயர்ந்தவர்கள். உண்மையிலேயே துணிவானவர்கள்! நான் உங்களுக்கு ஒரு உதாரணம் காட்டுகிறேன், பாருங்கள்“, என்று கூறிவிட்டு, “பீட்டர்“, என்று முழங்கினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பீட்டர் ஓடோடிவந்து நின்றான், “உத்தரவு, ஐயா!“

“இதோ பார், “தளபதி க்ராண்ட் கன்யான் நதியைச் சுட்டிக்காட்டினார். “இப்போதே நீ இந்த நதியை ஒரே பாய்ச்சலில் தாண்டவேண்டும் என்று நான் விரும்புகிறேன்!“

அந்த வீரன் ஒரே ஓட்டமாக ஓடி, முழு வேகத்தில் பாயத்தொடங்கினான். அவன் எங்கு சென்றிருப்பான் என்பது உங்களுக்குத் தெரியும்

இரண்டாவது தளபதி சிரித்தபடியே கூறினார், அது ஒன்றுமே இல்லை. இப்போது பாருங்கள். “என்று “ஹிக்கின்ஸ்“ என்று அழைத்தார்.

“உத்தரவு, ஐயா!“ ஹிக்கின்ஸ் விறைப்புடன் ஆஜரானான்.

“இது ஒரு அவசரச் செய்தி.. நீ கால்வாயின் குறுக்கே பறந்து சென்று, என் அதிகாரியிடம் இது குறித்துத் தெரிவிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.“

அந்த வீரன் தன் கைகளை மேலும்கீழுமாக வேகமாக அசைத்தவாறு கடக்க முற்பட்டான். அவனுக்கு என்னவானது என்பது நீங்கள் அறிந்ததுதான்..

மூன்றாவது தளபதி அமைதியாகவே இருந்தார். மற்ற இருவரும் அவரைச் சீண்டினர், “உனது வீரர்கள் எப்படி?” என்று சிரித்து, “துணிவில்லாதவர்கள்“ என்று கேலிசெய்தனர்.

தளபதியின் சில வீரர்கள் சுற்றிலும் நடந்துகொண்டிருந்தனர், அவர், “ஏய், இங்கே வா.“ என்றவுடன் அவர்களுள் ஒருவன் வந்து நின்றான். தளபதி கூறத் தொடங்கினார், “கீழே குனிந்து பார்,“ என்று இருநூறு மீட்டர் உயரமான அருவியிலிருந்து விழுந்து சுழித்தவாறு, படு வேகமாகப் பாய்ந்துகொண்டிருந்த நதியைச் சுட்டிக்காட்டினார். பிறகு அவர், “இந்தச் சிறு படகை எடுத்துச் சென்று, நீ நதியைக் கடக்கவேண்டும் என்பது என் விருப்பம். “என்றார்.

அந்த இளைஞன் கீழே பார்த்தபடி, “தளபதி, தாங்கள் கூடுதலாக விஸ்கி எடுத்துகொண்டதாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட படுமுட்டாள்தனமான ஒரு விஷயத்தை நான் செய்யப்போவதில்லை.“ என்று பதில் கூறினான்.

தளபதி மற்றவர்களைப் பார்த்துக் கூறினார், “பாருங்கள், இதுதான் நிஜமான துணிவு.“

friendshiptamilblog-subjectimage2

உங்களது நண்பருக்கு எது நல்லது

உங்களுடைய நட்புறவுகளில் சற்று அதிகமான துணிவுடன் இருங்கள். அவர்களை இழப்பதற்குத் தயாராக இருங்கள், அது பரவாயில்லை.

மற்றவர்களின் மீது நீங்கள் அக்கறையுடன் இருந்தால், குறைந்தபட்சம் அவர்களுக்கு நல்லது எதுவோ, அதை நீங்கள் செய்யவேண்டும்.

எனக்கு அறிமுகமான ஒரு மருத்துவர் பீர் அருந்துபவராக இருந்தார். நான் அவரைச் சந்தித்தபோது அவர் ஏறக்குறைய எழுபது வயதில், பெருத்த வயிறுடன் இருந்தார். சிறிதுகாலத்திற்கு முன்பு, அவரது நண்பர் ஒருவரைத் தவறாமல் சந்திக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இவர் போகும்போதெல்லாம், நண்பரானவர் பீர் பரிமாற, பிறகு இருவரும் சேர்ந்து அருந்துவார்கள். அவர்களுக்கு நேரம் வாய்க்கும்போதெல்லாம், அவரது நண்பர் வருவார் அல்லது இவர் அங்கு செல்வார்.

திடீரென்று ஒரு நாள், மருத்துவரின் நண்பர் யாரோ ஒரு குருவைச் சந்தித்ததில், ஆன்மீகப்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டதுடன் பீர் அருந்துவதையும் நிறுத்திவிட்டார். இந்த மொத்தக் கதையையும் மிகவும் விலாவாரியாக என்னிடம் கூறிக்கொண்டிருந்த மருத்துவர், ஒரு மகத்தான நட்பு அதோடு முடிந்துவிட்டதாகக் கூறினார். அந்த மனிதர் பீர் பரிமாறுவதை நிறுத்திவிட்ட காரணத்தால், மறுபடியும் அவரது நண்பரது வீட்டிற்குச் செல்வதற்கு இவருக்கு விருப்பமில்லையாம். அநேக நட்புறவுகள் இந்த மாதிரி தொடர்கின்றன. ஏதோ ஒருவிஷயம் தொடர்ந்திருக்கும் வரையில், நட்பு இருக்கிறது. அது முடியும் கணத்திலேயே, எல்லாம் முடிந்துபோகிறது.

ஒரு நண்பர் என்றால் குற்றமில்லாத மனிதர் என்று பொருளல்ல. இரண்டு நபர்கள் குறைந்தபட்சம் ஒருவரையொருவர் உண்மையாக அணுகுவதற்குப் போதுமான இணக்கமுடன் இருக்கும்போது, அவர்கள் நண்பர்களாகிறார்கள்.

உங்கள் வாழ்க்கையில் உண்மையான நண்பர் ஒருவர் உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் எதையோ இழந்திருக்கிறீர்கள். இருந்தாலும், ஒரு நண்பர் என்பவர் யார்? உங்களைப்போலவே குளறுபடியான மற்றொரு மனிதர்தான் நண்பராக இருக்கிறார். ஒரு நண்பர் என்றால் குற்றமில்லாத மனிதர் என்று பொருளல்ல. இரண்டு நபர்கள் குறைந்தபட்சம் ஒருவரையொருவர் உண்மையாக அணுகுவதற்குப் போதுமான இணக்கமுடன் இருக்கும்போது, அவர்கள் நண்பர்களாகிறார்கள். உங்கள் நண்பரும் உங்கள் அளவுக்குக் குழப்பக்கூடாரம்தான், ஆனால் இரண்டு நபர்கள் ஒரு சூழலில் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கமுடியுமென்றால், அவர் உங்களுக்கு நண்பராகிறார். ஒருவர் மட்டுமல்ல, உங்களுக்குப் பல உண்மையான நண்பர்கள் இருக்கவேண்டும். ஒருவர்கூட உங்களுக்கு இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை குறித்து எதையேனும் இப்போது நீங்கள் செய்வது நல்லது.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!