வழக்கமாக நதியை கூட்டிச்சென்று திருப்பி கொண்டுவந்து விட எப்போதுமே பள்ளி வேன் வரும். “அம்மா, நீங்க மட்டும் ஏன்மா என்னைக் கூப்பிட ஸ்கூலுக்கு வர்றதில்ல? என் friends அம்மால்லாம் வர்றாங்க. நீங்களும் வாங்கம்மா!” - பல நாட்களாக அந்த மழலையின் புலம்பல், ஆதிராவை அலுவலகத்தில் அனுமதி பெற்று அன்று பள்ளிக்கு வர வைத்தது.

“அம்மா, நான் இங்க இருக்கேன்” என்று மழலைச் சிரிப்போடு பள்ளியை விட்டு வந்த தன் மகள் நதியை தாயுள்ளத்திற்கே உரிய பூரிப்போடு அப்படியே அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தார் ஆதிரா! பின் நதியைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்த ஆதிராவிற்கு ஒரு சில அடிகள் வைத்ததுமே கால் முட்டியில் சுருக்கென தைத்தது வலி. உடனே குழந்தையை இறக்கிவிட்டார். பைகளைத் தோளில் போட்டு, பிள்ளைக் கையைப் பற்றி கொஞ்சிக் கொண்டே வீட்டிற்குச் சென்றார்.

“மூட்டுகளை உராய்வின்றி நெய்ப்புத் தன்மையுடன் வைக்கவில்லை எனில் நீண்டகாலம் அவை ஆரோக்கியமாக இருக்காது. உடல் என்பது ஒரு சுமையாக இல்லாமல், அதிலிருந்து மனிதன் விடுதலை பெறுவது என்பது அவர்கள் எத்தகைய மூட்டுகளை பெற்றுள்ளனர் என்பதைப் பொறுத்து அமைகிறது. இந்த மூட்டுகள் தாம் சக்தியின் சேமிப்பு கிடங்காக உள்ளன!”

ஆதிரா மிக பிசியான ஒரு பெண்மணி. உடற்பயிற்சி மற்றும் யோகாவைத் தொடர்ந்து செய்யக் கூடியவர். இப்போது இமயமலை செல்லவிருப்பதால் அதிக நடையும், ஓட்டப் பயிற்சியும் மேற்கொண்டிருந்தார். ஆனால் மூட்டுகளில் அடிக்கடி வீக்கம், வலி ஏற்படுவதுண்டு. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜுரம் வந்தபோது மூட்டு வீங்க ஆரம்பித்தது. டாக்டர்கள் இரத்தப் பரிசோதனை செய்த பின், இது Rheumatoid Arthritis எனச் சொன்னார்கள்; மருந்தும் வழங்கினர்.

ஆனால் ஆதிரா சில காலம் அவற்றைச் சாப்பிட்டுவிட்டு, பின் உடற்பயிற்சியிலேயே கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் பனிக்காலம் வந்தால், சற்று சிரமப்படுவார். முந்தைய வாரம் ஜாகிங் செய்து கொண்டிருந்தபோது தடுமாறி விழுந்தார். அதிலிருந்து அவரால் தொடர்ச்சியாக பயிற்சிகளைச் செய்ய முடியவில்லை. வலியும், வீக்கமும் அவரை முடக்கியது. டாக்டரிடம் சென்றவுடன் நிறைய மாத்திரைகள் கொடுத்தார்கள். குளிர் காற்று படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள். மனம் வலித்தது, இமயமலைப் பயணத்தை எப்படி மேற்கொள்வதென்ற பயம் தொற்றிக் கொண்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்போதுதான் ஆதிராவின் தம்பி ஆதவன் வந்து சொன்னார், “முட்டி மற்றும் தசைப் பிரச்சனைகள் நிவாரணத்திற்கான நிகழ்ச்சி சென்னை ஈஷா லைஃப்-ல
நடக்குது அக்கா. கோவை ஈஷா ஆசிரமத்துல பண்ற அதே புரோகிராம், அதே effect இருக்கும். நீ அதைப் பண்ணிக்கோ, நல்லா ஆயிட்டு அடுத்த 2 வாரத்துல ஹிமாலயாஸ் போயிடலாம்” என்றார். இது பற்றி யோசித்த ஆதிரா முழுமையாய் விவரம் கேட்பதற்காக தம்பி வீட்டிற்குச் சென்றார். “எப்படி இருக்கே அக்கா?” தம்பியின் கரிசனக் குரல், அக்காவின் கால்மூட்டுளைப் பற்றிய அக்கறையை காட்டியது!. ‘ஆதவா, தெரபி வலிக்குமா?’ ஆதிரா கேட்டார்.

“இல்லக்கா, ஈஷா லைஃப் டாக்டர்கள் கிட்ட போன்லேயே உன் விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன். உன் ரிப்போர்ட்டை வாட்ஸப்பில் அனுப்பி வைத்திருந்தேன். அவங்க உன்னை நேர்ல பார்த்துட்டு, தேவையானதைச் செய்வாங்க!”

தம்பி தந்த நம்பிக்கையுடன் ஈஷா லைஃப் சென்ற ஆதிரா, அங்கு ஒரே இடத்தில் அலோபதி, ஆயுர்வேதம் மற்றும் சித்தா என அனைத்து வைத்தியர்களையும் பார்த்தாள். அவரது பரிசோதனை முடிவுகளை வைத்து அந்த மருத்துவர்கள் ஆலோசித்தனர். நாடி பரிசோதனையும், மூட்டுகளின் பரிசோதனையும் பார்க்கப்பட்டது. மருந்துகளும், யோகாவும், ஆயுர்வேத தெரபியும் பரிந்துரைக்கப்பட்டன.

உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றமும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான கட்டணம் 1500 ரூபாய். யோகா, வீடியோ, 2 இலவச மருத்துவ ஆலோசனை இதில் அடங்குகின்றன. எலும்பு மூட்டுத் தசை நோய்களுக்கு ஏற்ப தெரபி மாறுபடும் என்பதனால், வெவ்வேறு தெரபிக்கான கட்டணம் வேறுபடும்.

ஆதிராவின் மூட்டுப் பிரச்சனைகளுக்குச் சில பிரத்யேக தெரபிகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆதிராவின் ஓடிக்கொண்டே இருந்த பிசியான வாழ்க்கையில், இது ஒரு நல்ல சுகமான ஓய்வெடுக்கும் காலம் என்றுதான் கூற வேண்டும். தெரபிக்கு முன்னும் பின்னும் என்னென்ன செய்யலாம் என்பது தெளிவாக்கப்பட்டது. தெரபியின் ஓர் அங்கமாக வழங்கப்பட்ட யோகாவும் வெண்பூசணி ஜுசும் ஆதிராவின் உடலையும், மனதையும் சுகமாக்கியது.

நாட்கள் செல்லச் செல்ல தசைகள் வலுவடைவதையும், வலி குறைந்ததையும், குச்சி ஊன்றாமல் நடக்க முடிவதையும் கண்ணாறக் காண முடிந்தது. சரியான உணவுப் பழக்கங்களுடன், மருந்துகளையும் தொடர்ந்து சாப்பிட்டதால் நலமாகி புத்துணர்வுடன் மாறியிருந்தார் ஆதிரா.

இதோ சிட்டாய்ப் பறந்து ஹிமாலயாஸ் சென்றவர், பயணம் முடிந்து, சென்னையில் வந்து இறங்கிவிட்டார். மகள் நதி குட்டி வழக்கம் போலத் துள்ளித் துள்ளி தாயைத் தழுவினாள். ஆதிராவின் கண்கள் தம்பியை நன்றியுடன் நோக்கின.

 எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை(7 நாட்கள்)

“மூட்டுகளை உராய்வின்றி நெய்ப்புத் தன்மையுடன் வைக்கவில்லை எனில் நீண்டகாலம் அவை ஆரோக்கியமாக இருக்காது. உடல் என்பது ஒரு சுமையாக இல்லாமல், அதிலிருந்து மனிதன் விடுதலை பெறுவது என்பது அவர்கள் எத்தகைய மூட்டுகளை பெற்றுள்ளனர் என்பதைப் பொறுத்து அமைகிறது. இந்த மூட்டுகள் தாம் சக்தியின் சேமிப்பு கிடங்காக உள்ளன!” -சத்குரு

இந்த நிகழ்ச்சி எதைப் பற்றியது?

நாட்பட்ட எலும்பு மற்றும் மூட்டு வியாதிகளுக்கான முழுமையான சிகிச்சை, நுணுக்கமான ஆயுர்வேத தெரபி சிகிச்சை முறைகள் கொண்டு அளிக்கப்படுகிறது. எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த யோகப் பயிற்சிகள் உங்கள் மூட்டுகள், தசைகள், சக்தி மையங்களுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

பிரத்யேக உணவு மற்றும் பழக்க வழக்கங்களுக்கான அறிவுரை!

பாரம்பரிய சித்த ஆயுர்வேத மருந்துகள்

யாருக்காக இது?

எலும்பு மற்றும் மூட்டு வியாதிகளால் நீண்டகாலம் அவதிப்படுபவர்களும் அல்லது அத்தகைய நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருப்பவர்களும் பயனடையலாம். உதாரணமாக
Bulging discs - முதுகெலும்பு வீக்கம்
Disc Prolapse - முதுகெலும்பு அலர்ஜி
Spondylitis - மூட்டு தேய்மானம்
Arthritis - கீல்வாதம்
Frozen shoulder - உறைந்த தோள்பட்டை
Meniscal tear - சவ்வு கிழிதல், கழுத்து, கால் மூட்டு, குதிகால் மூட்டு, இடுப்புவலி உள்ளோர்

இது எந்த வகையில் உதவும்?

தீவிர வலி மற்றும் இறுக்கத்திலிருந்து விடுதலை தந்து தசைகளை வலுப்படுத்தும்.
• தசைநார்கள் வளர உதவும்
• ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.
• எலும்பு மற்றும் தசைமண்டலத்தை வலுப்படுத்தும்.
அதிகபட்ச உணர்வுடனும், உயிர்ப்புடனும் இருப்பதனால் வாழ்க்கை சிறப்படையும்.


ஈஷா லைப் ஹெல்த் சொல்யூஷன்ஸ், 2, கிளப் ஹவுஸ் ரோடு, தாஜ் கிளப் ஹவுஸ், மௌன்ட் ரோடு, சென்னை-2 தொடர்புக்கு: (044) 28885333/ 71645333/ அலைபேசி: 8300045333 email: programs@ishalife.org | www.ishalife.org