கேள்வியாளர்: ஒரு மாணவராக, எனது படிப்பில் நான் எவ்வாறு சிறப்பாக கவனம் செலுத்த முடியும்?

சத்குரு: நீங்கள் எதன் மீதாவது கவனம் செலுத்த விரும்புகிறீர்களா? நீங்கள் செறிவில் ஆர்வம் காட்டவில்லை; உங்களால் முடிந்த சிறந்த முடிவுகளை வெளிப்படுத்த மட்டுமே நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள். இது மாணவர் பருவத்திலிருந்து தொடங்குகிறது. எல்லோரும் ஞாபக சக்தி பற்றி பேசும் நேரம் இது, அது அவர்களிடம் இல்லாத ஒரு விஷயம்! குறிப்பாக தேர்வு நேரத்தில், உங்கள் ஞாபக சக்தி அனைத்தும் மறைந்துவிடும். நீங்கள் சென்று திரையரங்கில் உட்கார்ந்தால், முழுமையாக கவனம் செலுத்துகிறீர்கள், பாடப் புத்தகத்துடன் உட்கார்ந்தால், கவனம் திசை திருப்பப்பட்டு, நூறு வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறது.

எனவே, இது உங்கள் திறனைப் பற்றிய கேள்வி அல்ல, இதில் எந்த அளவுக்கு உங்கள் ஈடுபாடு உள்ளது என்கிற கேள்வி மட்டுமே.

நீங்கள் பலவந்தமாக கவனம் செலுத்துவதன் மூலம், வதை முகாமில் இருப்பது போல துன்பப்படுவீர்கள். வாழ்க்கையில் ஓய்வெடுப்பதற்கு பதிலாக, வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்ற விரும்புகிறீர்களே, ஏன்? நீங்கள் மிகவும் சௌகர்யமாக படுக்கையில் படுத்து சில நாவல்களைப் படிக்க விரும்பினால் சில காதல் கதை அல்லது சஸ்பென்ஸ் த்ரில்லர் - நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 70-80 பக்கங்கள் வரை படிப்பீர்கள். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வார்த்தையையும் நினைவில் கொள்ள முடிகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

தேர்வுகள் உங்களுக்கு பிடித்த நாவல்களில் இருந்தால், நீங்கள் அதை எப்படி அணுகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், பாடப் புத்தகத்துடன் மட்டும் ஏன் இவ்வளவு போராட்டம்? பாட நூல் சராசரி நுண்ணறிவுக்காக அனைவருக்கும் பொதுவான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் இது ஒருபோதும் எழுதப்படவில்லை. எனவே, இது உங்கள் திறனைப் பற்றிய கேள்வி அல்ல, இதில் எந்த அளவுக்கு உங்கள் ஈடுபாடு உள்ளது என்கிற கேள்வி மட்டுமே.

எனவே, நீங்கள் படிக்கும் விஷயங்களை முழுமனத்துடன் விரும்புங்கள். இல்லையெனில், அதைப் படிப்பதில் என்ன பயன்?

முதலாவதாக, அதைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள நீங்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் கற்பதன் காரணமே அதனால் வரும் பணம், வயிற்றுப் பிழைப்பு மற்றும் நீங்கள் கனவு காணும் பல விஷயங்களைக் கொண்டு வரும். நீங்கள் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரைப் படித்த அதே ஈடுபாட்டுடன் இந்த பாடப் புத்தகத்தைப் படித்தால், எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு நினைவிருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அதன்மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ, அதன்மீது கவனம் செலுத்த யாரும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் யாரையாவது காதலித்தால், அந்த பெண் அல்லது பையனின் மீது கவனம் செலுத்த யாராவது உங்களுக்கு சொல்ல வேண்டுமா? நீங்கள் எப்போதும் கவனம் செலுத்துகிறீர்கள்.

பக்தியின் பாதை இதுதான்:

உங்களை விட பெரிய ஒன்றை விரும்பவும் ஒருவேளை உங்கள் குரு, கடவுள் அல்லது உங்கள் தெய்வம், இது உங்களை வழிநடத்தும். ஏனென்றால், நீங்கள் அதன்மீது ஈர்க்கப்பட்டவுடன், அது குறிக்கும் அனைத்து குணங்களும் பல வழிகளில் உங்களுடையதாக மாறும். எனவே, நீங்கள் படிக்கும் விஷயங்களை முழு மனத்துடன் விரும்புங்கள். இல்லையெனில், அதைப் படிப்பதில் என்ன பயன்?

நீங்கள் பிழைப்புக்காக மட்டுமே படிக்கிறீர்கள் என்றால், அது துரதிர்ஷ்டவசமானது. நீங்கள் இளமையாக இருக்கும்போது, பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள். அதுவே உங்கள் வாழ்க்கையில் செய்த மிக முட்டாள் தனமான காரியம். உங்களுக்கு ஒரு மனைவி, ஒரு குழந்தை இருக்கும்போது, உங்களுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும்; அது இல்லாமல் நீங்கள் நிர்வகிக்க முடியாது. அது வேறு. ஆனால், குறைந்தபட்சம் நீங்கள் இளமையாக இருக்கும்போது, இந்த உலகில் நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியத்தை எவ்வாறு செய்வது என்று பாருங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அப்படி வாழமுடிந்தால் நல்லது, ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் இளமையாக இருக்கும்போது, உங்களைவிட பெரிய ஒன்றை நினைத்துப் பாருங்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக செய்வதைத் தவிர்த்து, அழகாக ஏதாவது செய்ய வேறு ஏதாவது சிந்தியுங்கள். நீங்கள் அதைச் செய்யாவிட்டாலும், அதைச் செய்வதைப் பற்றி குறைந்தபட்சம் சிந்தியுங்கள் - அது உங்களை உயர்த்தும். ஆயிரம் பேர் இதைப் பற்றி சிந்தித்தால், குறைந்தது பத்து பேர் அதைச் செய்வார்கள். நீங்கள் வயதாகும்போது, நீங்கள் மேலும் மேலும் ஒரு கோழை ஆகிவிடுவீர்கள். இதை நீங்கள் முன் எச்சரிக்கை என்று அழைப்பீர்கள், ஆனால் நீங்கள் வாழ்க்கைக்கு பயப்படுகிறீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் இளமையாக இருக்கும்போது, பாதுகாப்பாக இல்லாத ஒன்றைச் செய்ய நீங்கள் தைரியம் கொள்ளலாம், ஆனால் உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் நீங்கள் செய்வது சிறப்பாக இருக்கும். நீங்கள் எப்போதும் இளமையான மனதுடன் வாழ்க்கையை வாழ வேண்டும். “இளமை” என்றால் 15 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் என்று நினைக்க வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மிகவும் இளமையாக இறந்துவிடுவீர்கள் - 50, 60, 70, 100 அல்லது 160 ஆண்டுகள், இருப்பை ஒப்பிடும்போது இன்னும் இளமையாக இருக்கிறது. இது ஒருசில ஆண்டுகள்தான்.

தயவுசெய்து எப்போதும் பிழைப்பு அடிப்படையில் சிந்திக்க வேண்டாம். நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்வதில் நீங்கள் சிரமப்படுவதற்கு இதுவே காரணம் - ஞாபக சக்தி காரணமாக அல்ல. நீங்கள் செய்யும் முயற்சியின் மீது உங்களுடைய முழு அளவு ஈடுபாடு இல்லை என்பதுதான் பிரச்சனை. நீங்கள் செய்வதனை முழுமனதுடன் விரும்பினால், யாராவது உங்களிடம் கவனம் செலுத்தவேண்டி கூற வேண்டுமா? உங்கள் மனம் எப்போதும் அதில் கவனம் செலுத்துகிறது.

 

APG19_IECSChennai-Tam-Newsletter-650x120-Updated