கும்பமேளாவிற்கு அழைக்கிறார் சத்குரு
உலகின் அதிக மக்கள் ஓரிடத்தில் கூடும் நிகழ்வான ‘கும்பமேளா’ நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்துகிறது! கும்பமேளா கொண்டாட்டத்தின் விஞ்ஞானம் என்ன என்பதையும், ஈஷா அழைத்து செல்லும் கும்பமேளா யாத்திரையின் விபரங்களையும் இங்கே அறியலாம்!
உலகின் அதிக மக்கள் ஓரிடத்தில் கூடும் நிகழ்வான ‘கும்பமேளா’ நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்துகிறது! கும்பமேளா கொண்டாட்டத்தின் விஞ்ஞானம் என்ன என்பதையும், ஈஷா அழைத்து செல்லும் கும்பமேளா யாத்திரையின் விபரங்களையும் இங்கே அறியலாம்!
சத்குரு:
பூதசுத்தி என்ற அடிப்படையிலிருந்தே கும்பமேளா தோன்றியுள்ளது. பூதசுத்தி என்றால் நம் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை சுத்திகரிப்பது. இந்தப் படைப்பிலுள்ள ஒவ்வொன்றும்-இந்த உடல், இந்த கிரகம், இந்த சூரிய மண்டலம், இந்தப் பிரபஞ்சம் என அனைத்துமே பஞ்சபூதங்களின் விளையாட்டுதான். இதனால்தான் யோகப் பாரம்பரியத்தில், யோகத்தின் அடிப்படை வடிவம் பூதசுத்தி என புரிந்து வைத்திருக்கிறோம். பஞ்சபூதங்களின் மீது ஆளுமை ஏற்படும்போது, உங்கள் ஆரோக்கியம், நல்வாழ்வு, செழிப்பு, இந்தப் பிரபஞ்சத்திற்கான திறவுகோல், என அனைத்துமே சாத்தியப்படும்.
Subscribe
இந்த உடலில் 72 சதவிகிதத்திற்கு மேல் நீராக இருப்பதால், சூரிய சுழற்சியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்போது, 48 நாட்கள் கும்பமேளாவில் கலந்துகொள்வதால், நீரில் இருப்பதால், உடலின் தன்மையையும் மனதின் கட்டமைப்பையும் உங்கள் சக்தி அமைப்பையும் மாற்றியமைக்க முடியும். அனைத்திற்கும் மேலாக உங்களுக்குள் அதிகப்படியான ஆன்மீக முன்னேற்றம் நிகழும்.
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் அனைவரும் கும்பமேளா நடக்கும் இடத்திற்கு சென்று தங்குவது சாத்தியமாகாது. அதனால், அனைவருமே 40 நாட்கள் சாதனா செய்து உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். தினசரி 10-12 நிமிடங்கள் இந்த சாதனாவை உங்கள் வீட்டில் இருந்தபடியே மேற்கொண்டு, கும்பமேளாவிற்கு சென்று நீரில் மூழ்கி எழலாம். இது மகத்தான வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
யோக விஞ்ஞானத்தின் அடிப்படையான பூதசுத்தியிலிருந்து தோன்றியதே கும்பமேளா. கும்பமேளா மற்றொரு சடங்காய் மாறிவிடக் கூடாது என்பதே என்னுடைய நோக்கமும் ஆசையும். இது ஒருவரை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடிய ஒரு விஷயமாய் இருக்கட்டும்.
ஆசிரியர்:
கும்பமேளா சிறப்பு யாத்திரை!
கும்பமேளா, இவ்வருடம் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள உஜ்ஜயினில் நடைபெறவுள்ளது. சக்திப் பிரவாகமாய் வீற்றிருக்கும் மஹாகாலேஷ்வரரை சுற்றி நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழா ஏப்ரல் 22 முதல் மே 21ம் தேதி வரை நிகழ்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு தரிசன நேரத்தின்போது, உஜ்ஜயின் மஹாகாலேஷ்வரரின் தனித்துவத்தை விளக்கிய சத்குரு, பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் நிச்சயம் பங்குபெற வேண்டும், உணர வேண்டும் என்றார். சத்குருவின் வழிகாட்டுதலுடன், ஈஷா மையம் சிறப்பு இரயில் வசதிகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் இணையலாம்.
கும்பமேளாவிற்கு ஒருவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள மஹாசிவராத்திரி சாதனாவினை மேற்கொள்ளலாம், கையில் கருப்புத் துணி கட்டத் தேவையில்லை. கும்பமேளாவிற்கு சென்று தீர்த்தத்தில் குளித்து விரதத்தினை நிறைவு செய்யலாம்.
மஹாசிவராத்திரி சாதனா கற்க: isha.co/ShivaNamaskaram
மேலும் விவரங்களுக்கு: 83000 65000