Question: மொட்டை போடுவது, காது குத்துவது, கல்யாணம் செய்வது போன்ற செயல்களை ஏன் கோவில்களில் செய்கிறார்கள்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோகாவை எத்தனை பேர் கற்றிருப்பார்கள்? நம்மிடம் கற்றவர்களிலேயே எத்தனை பேர் தொடர்ந்து யோகா செய்கிறார்கள்? கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எத்தனை பேரிடம் இருக்கும்? ஒரே நேரத்தில் அனைவரிடமும் நீங்கள் யோகா பற்றி விளக்கிக் கடைப்பிடிக்கவைக்க முடியுமா?

நமது உயிருக்கே மூலமானவன் யாரோஅந்தத் தன்மை எதுவோஅதனுடன் நாம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். கோவில் போன்ற சக்தி ஸ்தலங்கள் இதற்கு ஒரு வாய்ப்பு.
அது மட்டுமல்ல, நீங்கள் இப்போது யோகா கற்றுக் கொண்டீர்கள், ஆனால், உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ யோகா வகுப்புக்கு அழைத்து வர விரும்புகிறீர்கள், ஆனால் முடியவில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு ஆன்மீகத்தில் என்ன வழி? இதற்காகத்தான் நமது கலாசாரத்தில் சக்திநிலை நிறைந்த கோவில்கள் இருந்து வந்தன. நமது உயிருக்கே மூலமானவன் யாரோ, அந்தத் தன்மை எதுவோ, அதனுடன் நாம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். கோவில் போன்ற சக்தி ஸ்தலங்கள் இதற்கு ஒரு வாய்ப்பு.

யோகாவின் உதவியால் படைத்தலுக்கு மூலமான அந்தத் தன்மையுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பலருக்கு அப்படி தொடர்பு வைத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களின் உதவிக்காக கோவில்கள். உங்களால் வீட்டின் கதவைத் திறந்து விழிப்புணர்வுடன் வெளியேற முடியவில்லை. எனவே வீட்டுக்குள் ஒரு புகைபோக்கி அமைத்துத் தருகிறோம். கதவை உங்களுக்குத் திறக்கத் தெரியவில்லை என்றாலும் எப்படியோ அலைந்து திரிந்து புகைபோக்கி வழியாகவாவது வெளியேறிவிடுவீர்கள் அல்லவா? அதற்குத்தான் சக்திநிலைகொண்ட கோவில்கள். ஆனால், ஒரு காரணமும் இல்லாமல் அனைவரும் தொடர்ந்து கோவிலுக்கு வந்து விடுவார்களா? எனவேதான் குழந்தையில் இருந்தே இதற்கான வாய்ப்புகள்.

சிறுசிறு வாய்ப்புகளையும் தெய்வீகத்துக்கான படியாக மாற்றிக்கொள்ள நமக்குத் தெரிய வேண்டும்.
குழந்தைக்கு முதலில் முடி எடுப்பது என்றாலும் சரி, குழந்தைக்கு முதலில் உணவு ஊட்டுவதென்றாலும் சரி, அல்லது குழந்தைக்கு கல்வி ஆரம்பித்தாலும் சரி, கோவிலில் வைத்துச் செய்வதை கலாசாரம் ஆக்கினார்கள். இவையெல்லாம் கோவில் போன்ற சக்தி ஸ்தலங்களுக்கு உங்களை வரவழைப்பதற்கான வழிகள்.

நாமும் இதே காரணத்துக்காகவே இப்போது லிங்கபைரவியில் காது குத்துவது, முடி எடுப்பது போன்றவற்றை எல்லா நாட்களிலும் அனுமதிக்கிறோம். நாம் இப்படி அனுமதிப்பதால் எதிர்மறையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு வாய்ப்புகளையும் தெய்வீகத்துக்கான படியாக மாற்றிக்கொள்ள நமக்குத் தெரிய வேண்டும்.

லிங்கபைரவி, யாருக்கு எது தேவை என்று பார்த்து அவளாகவே கொடுப்பாள். எனவேதான் மக்கள் வந்து பயனடைய வேண்டும் என்பதற்காக லிங்கபைரவியிலும் இத்தகைய வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன!