மனதில் விடை தெரியாத, பலநாட்களாக புதைந்து கிடக்கும் கேள்விகள், அதற்கான விடை தேடி பலரிடம் கேட்டு, புத்தகம் படித்து சமாதானம் அடையாமல்.... இந்த நிலையில் பலர் இருப்போம். அப்படி இருக்கும் ஒரு கேள்விக்கு சத்குருவின் பதில் இதோ...

Question: சத்குரு, எண்ணங்களின் தரத்தை எப்படி உயர்த்திக் கொள்வது?

சத்குரு:

உங்கள் மனத்தை ஒரு இன்டர்நெட்டுடன் ஒப்பிடலாம். இரண்டுமே எங்கெங்கோ இருந்து எதையெதையோ சேகரித்து வைத்திருக்கிறது. இன்டர்நெட்டும் எல்லா குப்பைகளையும் வைத்திருக்கிறது. ஆனால், இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இருப்பதை புரிந்து வைத்திருப்பதால், தேவையானபோது பயன்படுத்தவும், தேவையற்றபோது அணைத்து வைத்திருக்கவும் வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிகிறது, இல்லையா? ஆனால், உண்மையில் அந்தச் சுதந்திரத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? இல்லை. பாருங்கள் இன்று மொபைலில் இன்டர்நெட் வைத்திருக்கிறார்கள். எந்நேரமும் ஆனிலேயே இருக்கிறது. எப்போதும் ஆன்லைனிலேயே இருக்கிறீர்கள்.

இதனால் எண்ணங்களின் தரத்தை உயர்த்துவது பற்றி பேசுகிறீர்கள். ஆனால், எண்ணங்களின் தரத்தை நீங்கள் நினைப்பதுபோல் உயர்த்திக் கொள்ள முடியாது. எண்ணங்களை சரியான முறையில் பயன்படுத்த மட்டுமே முடியும். எப்படி இன்டெர்நெட்டை சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டுமோ அப்படியே எண்ணங்களையும், விழிப்புணர்வுடன், சரியாகப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். எண்ணங்கள் உங்கள் விழிப்புணர்வில் இருந்தால், இயல்பாகவே உங்களுக்கு விருப்பமானவற்றைத் தானே எண்ணுவீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.