மன நோய் மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போவது இன்று சகஜமாகிக் கொண்டிருக்கிறது. வாரம் ஒருமுறை என டாக்டரிடம் அட்டென்டன்ஸ் போடுபவர்கள் ஏராளம். சமீப காலங்களில் நம்மை பயமுறுத்தி வரும் மனநோய் பெருகி வரக் காரணமென்ன? மௌனமாய் வதைத்து மௌனமாய் சீரழிக்கும் மனநோய், ஒரு பார்வை...

சத்குரு:

இன்று மனிதர்களில் 90 சதவிகிதம் பேர் வெவ்வேறு விதமான மன நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த மனநோயின் அளவு, சில சமயம் கையாளக் கூடியதாய் இருக்கிறது. சில சமயம் கை மீறிப் போகிறது.

உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சில நேரங்களில் ஆஸ்த்மா கையாளக் கூடியதாய் இருக்கிறது. பல நேரம் கை மீறிப் போகிறது. அப்பொழுது எல்லாம் உங்களை நோயாளி என்று கருதுவதில்லை. ஏதோ ஒரு மருந்தையோ மாத்திரையையோ சாப்பிட்டு சமாளித்துக் கொள்கிறீர்கள்.

கையாளக்கூடிய மனநோய், கையாள முடியாத மனநோய் இந்த இரண்டு எல்லைக்குள் இருப்பவர்களைத்தான் மருத்துவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்

ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நோய் அதிகமாகிறது. ஒன்று நீங்கள் இறந்துபோக வேண்டும் அல்லது மருத்துவமனைக்குப் போக வேண்டும். அப்போதுதான் உங்களை நோயாளி என்று நீங்கள் கருதுகிறீர்கள். அதற்காக மற்ற நாட்களில் நீங்கள் நோயில்லாமல் இருந்ததாக பொருளில்லை. நோயோடிருந்தீர்கள். அதை கையாளுகிற நிலையில் இருந்தீர்கள்.

அதேபோல் மனநிலையைப் பொறுத்தவரையிலும், ஏறக்குறைய நோய்வாய்ப்பட்டுத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கையாளக்கூடிய அளவு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஏதோ ஒரு நேரத்தில் அது அதிகமாகிறது. மீண்டும் சரியாகி விடுகிறது. இப்போது இதுவரையில் இந்த உளவியல் மருத்துவர்கள், நிபுணர்கள் எல்லோரும் நோயாளிகளைத் தான் பரிசோதித்து உள்ளார்கள். ஆராய்ச்சி செய்கிறார்கள். ஃபிராய்டு போன்றவர்கள் ஒரு தியானம் செய்கிறவரையோ, ஒரு புத்தரையோ ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கையாளக்கூடிய மனநோய், கையாள முடியாத மனநோய் இந்த இரண்டு எல்லைக்குள் இருப்பவர்களைத்தான் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆராய்ச்சி செய்யப்படுபவரும் ஒரு மன நோயாளி. ஆராய்ச்சி செய்பவரும் ஒரு மன நோயாளி. அவர் தன் எல்லைகளைக் கடந்துவிட்டார் என்று பொருளல்ல.

பைத்தியகாரத்தனத்தோடு பிறந்தீர்கள். உங்கள் கர்மவினைகள் பைத்தியக்காரத்தனத்தின் விளைவுதான். நீங்கள் ஏற்படுத்தியிருக்கிற பிணைப்புகள், குறுகிய எல்லைகள் அனைத்துமே இந்த பைத்தியக்காரத்தனத்தால் வந்தவைதான்.
ஒரு முறை அனைத்து உளவியல் நிபுணர்களும் ஒரு உளவியல் மாநாட்டிற்காக ஜெர்மனி நாட்டிலிருந்து ஃபிரான்சுக்கு இரயிலில் போய்க்கொண்டு இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் தங்கள் இரகசியங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். முதல் மனிதர் சொன்னார் "எனது பெரிய பலவீனம் சூதாடுவது. எல்லா வார இறுதியிலும் நான் என் மருத்துவமனையைப் பூட்டிவிட்டு சூதாடுவேன்.

முழுமையாக சூதாடுவேன். சூதாட்டத்தில் நான் ஜெயிக்கிற பணங்களையெல்லாம் ஏதாவது அறக்கட்டளை உண்டியலில் போடுவேன். ஆனால் நான் குடிக்கப் போகிறவரையில் இன்னொரு உண்டியலிலிருந்து திருடமாட்டேன். முழுக்கக் குடித்துவிட்டு அந்த போதையில் அந்த இரவை முடித்துக்கொள்வேன்" என்றார்.

இரண்டாவது மருத்துவர் சொன்னார் "என் பெரிய இரகசியம், மனச் சோர்வை மாற்றக்கூடிய மருந்துகளுக்கு நான் அடிமையாகயிருக்கிறேன். என் நோயாளிகளைப் பார்ப்பதற்கு முன்னால் இரண்டு மூன்று மாத்திரைகளை போட்டுக் கொள்வேன்".

மூன்றாவது மருத்துவர் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தார். மற்ற இருவரும் அவரை உலுக்கிக் கேட்டார்கள். நாங்கள் எல்லாம் ஆழ்ந்த இரகசியங்களை பகிர்ந்துகொண்டோம். இப்பொழுது நீங்கள் சொல்ல வேண்டும் என்று. அவர் "என்னால் இரகசியங்களை காப்பாற்ற முடியாது. இந்த இரயில் நிற்கும் வரை என்னால் இப்பொழுது பொறுத்திருக்க முடியாது" என்று சொன்னார்.

அதனால் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறதோ அது பதற்றமோ, அச்சமோ எதுவாகயிருந்தாலும் அதற்கேற்ப உங்களுக்கு ஒரு சிகிச்சையிருக்கிறது. அது என்ன சிகிச்சை? அந்த சூழ்நிலையை ஓரளவு கையாண்டு உங்கள் பைத்தியக்காரத்தனத்தை கையாளக்கூடிய அளவுக்குக் கொண்டுவருகிறார்கள். குணமாக்குவது இல்லை.

யாரும் உங்களை, பைத்தியகாரத்தன்மை அற்ற நிலைக்குக் கொண்டு வருவதில்லை. எனவே உங்களுக்குத் தரப்படுகின்ற சிகிச்சை என்பது தந்திரம் மட்டும்தான். இப்போது ஆன்மீகம் என்பது கையாளக்கூடிய பைத்தியக்காரத்தனத்தை நோக்கி நகர்வது அல்ல. குணமாகும் எல்லை வரை நீங்கள் பைத்தியமாகி, பைத்தியக்காரத்தனத்தின் எல்லைகளைக் கடந்து நீங்கள் குணமடைகிறீர்கள்.

எனவே பைத்தியகாரத்தனத்தோடு பிறந்தீர்கள். உங்கள் கர்மவினைகள் பைத்தியக்காரத்தனத்தின் விளைவுதான். நீங்கள் ஏற்படுத்தியிருக்கிற பிணைப்புகள், குறுகிய எல்லைகள் அனைத்துமே இந்த பைத்தியக்காரத்தனத்தால் வந்தவைதான்.

ஒரு பைத்தியம், தான் இந்தத் தூணோடு பிணைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவரைக் கட்டிவைப்பதற்கு சங்கிலியும் இல்லை, கயிறும் இல்லை. ஆனால் தான் பிணைக்கப்பட்டிருப்பதாக கருதுவார். அவர் அதை சுற்றிச் சுற்றி போய்க்கொண்டிருப்பார்.

நீங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்கமாட்டார். ஏனென்றால் அவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருப்பார். இப்படித்தான் எல்லோரும் தங்களை ஏதாவது தூணோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அதுவும் ஒரு பைத்தியக்காரத்தனம்தான்.

இந்த பைத்தியக்காரத்தனத்தை உங்களால் கையாள முடிகிறது என்பதால், அவர்களிடமிருந்து நீங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பைத்தியமாக போனாலாவது மன நோய் மருத்துவமனையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ஈஷாவில் வழங்கப்படுகிற தியானமுறைகள் எல்லாம் உங்களை அமைதியாக்குவதற்காக அல்ல. உங்களுக்குள் அவை வெடித்துக் கிளம்புகின்றன. உங்களுக்குள் அமைதியும் இல்லை தொந்தரவும் இல்லை. அந்த நிலையைதான் நீங்கள் அமைதி என்று அழைக்க முடியும்.

தொந்தரவை வைத்துக்கொண்டே நீங்கள் உங்களை அமைதியாக்கிக் கொண்டிருந்தால் அதற்கு பெயர் அமைதி அல்ல. இது புயலுக்கு முன்பாக இருக்கின்ற அமைதி போன்றது. புயல் வீசிக்கொண்டே இருக்கிறது. மையத்தில் அவ்வளவு அமைதியிருக்கிறது. இந்த அமைதியை நம்பி ஏமாறாதீர்கள். அடுத்த புயலும் வீசத் தொடங்கும்.

ஏனென்றால் சூறாவளிகள் இப்படித்தான் நகர்ந்துகொண்டேயிருக்கின்றன. சூறாவளிகளைப் பொறுத்தவரையில், முன்புறத்தில் அவை பலம் குறைந்ததாகவும், போகப் போக தீவிரம் அடைந்தும் வருவதே அதன் இயல்பு. இது இயற்கையினுடைய சுழற்சி முறை.

எனவே முதலில் பார்ப்பதை வைத்துக்கொண்டு இவ்வளவுதான் என்று பிணைக்காதீர்கள். இன்னும் பெரிதாக வரும். இதுவே உங்கள் மனத்திற்கும் பொருந்தும். இந்த பிரபஞ்சத்தின் இருப்பில் எல்லாமே இப்படித்தான் இருக்கிறது. எது நிகழ்ந்தாலும் அசுர வலிமையோடு தான் நிகழ்கிறது.

முதலில் நிகழும். பிறகு ஒரு இடைவெளி தரும். பிறகு மீண்டும் புயல் வந்து மோதும். மனிதமனமும் அப்படித்தான். பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகிறது. பிறகு மீண்டும் அமைதி பெறுகிறது. அது அமைதி என்று கருதாதீர்கள். அது உங்கள் பைத்தியக்காரத்தனத்தில் ஓர் இடைவெளி.

பைத்தியங்கள் கூட தங்கள் வாழ்வில் சில வினாடிகள் முற்றிலும் குணமடைந்தவர்கள் போல் காணப்படுவார்கள். 24 மணி நேரமும் அவர்கள் பைத்தியங்கள் கிடையாது. சில நேரங்களில் மிக இயல்பாக இருப்பார்கள். அவர்கள் உங்களைவிட நிகழ்காலத்தின் நிமிஷங்களாக இருக்கிறார்கள்.

தங்கள் மனதின் சமநிலையை இழந்தவர்கள் உங்களைவிடவும் திறந்தநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதையே சில நேரங்களில் நீங்களும் செய்கிறீர்கள்.

Photo Courtesy: ian boyd @flickr