32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோக மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலத்தில் 7 மாதங்கள் தங்கி இருக்கிறார்கள்.

சாதனா பாதையில் அனைத்து வயதினரும் பங்கேற்றுள்ளனர். மேலும், எல்லாவிதமான வாழ்க்கையையும் கடந்து நடைபோட்டவர்களும் வந்துள்ளனர், குறிப்பாக சிறுவயதிலிருந்தே சமூகத்தால் பெரிதும் உந்தப்பட்டு, சமூகத்தின் பார்வையில் வெற்றி என்று பார்க்கப்படும் அனைத்தையும் ருசித்தவர்கள்.

isha-blog-article-life-in-sadhanapada-fulfillment-beyond-survival-rat-race-angamardhana

பல வருட கல்விக்கு பின்னர் வெற்றிகரமான தொழில் மற்றும் வணிகங்களை கட்டியெழுப்பிய அவர்கள், சுகமாக வாழ சொந்த வீடு, குடும்பத்தினருடனும் சமூகத்துடனும் நல்லுறவு, திருமணம் மற்றும் குழந்தைகளுடனான வலுவான உறவுகளைக் கொண்டவர்கள். ஆனால், அவர்களது இந்த வெற்றி அவர்களுக்கு போதிய மனநிறைவை அளிக்கவில்லை என்பதை உணர ஆரம்பித்தார்கள். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட வெற்றி தங்களிடம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தனர். ஆனால் உண்மையிலேயே வாழ்க்கையில் நிறைவடைய வேறு வழி இருக்கிறதா?

சாதனா பாதையில் இணைவதற்கான வழியில் ஏதேனும் தடைகள் உள்ளனவா?

isha-blog-article-life-in-sadhanapada-fulfillment-beyond-survival-rat-race-play

"ஐ.டி துறையில் இருபது வருடங்கள் பணியாற்றிய பிறகு என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். மலையேற்றம், புத்தகம் வாசிப்பது, இசை கற்றுக்கொள்வது என, என் வாழ்க்கை பயணத்தில் நான் தவறவிட்ட விஷயங்களைச் செய்துவந்தேன். நான் சாதனா பாதையைப் பற்றி கேள்விப்பட்டவுடன், அதில் இணைய மிகவும் ஆர்வமாக இருந்தேன், எனது ஓய்வு நாளை இப்படி உபயோகமாக முடித்துக்கொள்வதை விட வேறு ஒரு சிறந்த வழி எனக்குத் தெரியவில்லை. எனவே, நான் எல்லாவற்றையும் உன்னிப்பாக திட்டமிட்டேன் - குடும்பம், நிதி, வேலை; எல்லாவற்றையும் சற்று இடைநிறுத்தி, சாதனா பாதையில் என்னை ஈடுபடுத்தியபோது என்னில் ஒரு மென்மையான மாற்றத்தை உணர்தேன்.” – ரஷ்மி விஜயகுமார், 43, மும்பை, ஐ.டி நிபுணர்

இரண்டு வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு வந்த புதிய வேலையில் சேராமல், சாதனா பாதையில் செல்ல இருந்த எனக்கு என் மூத்த சகோதரர் சற்று எதிர்ப்பு தெரிவித்து எனக்கு அறிவுரை வழங்கினார்.

நான் அவரை சமாதானப்படுத்தி, கவலைப்பட வேண்டாம், இதில் நான் நன்றாகவே இருப்பேன் என்று கூறினேன். முதல் சில நாட்கள், நான் என் அன்றாட செயல்களை அவரோடு பகிர்ந்துகொண்டேன். அவரை தினமும் தொலைபேசியில் அழைத்து இங்கு என்ன நடக்கிறது, நான் என்ன தன்னார்வத்தொண்டு செய்து கொண்டிருக்கிறேன், தினசரி வேலைகள், கொண்டாட்டங்கள் பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். நாட்கள் நகர்ந்தன மெதுவாக நான் இங்கு இருப்பதற்கு எதிரான அவரது எதிர்ப்பு மங்கத் தொடங்கியது, அவர் என் முடிவை ஏற்றுக்கொண்டார்." – ரூபாலி சவுத்ரி, 31, டெல்லி 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் சாதனா பாதைக்கு வந்ததை உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதா?

என்னை மட்டும் கணினியை பார்க்க அனுமதிக்காமல் நீங்கள் மட்டும் இத்தனை நேரம் அதிலே மூழ்கி இருக்கிறீர்களே, இது நியாயமா? என்று என் மகன் கேட்டது எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. “அப்பா நீங்கள் ஈஷாவிற்கு சென்று உங்கள் விடுமுறை நாட்களை கழித்து வாருங்கள் என்று கூறி அவன் தன் ஆசீர்வாதங்களையும் சேர்த்து கொடுத்ததை நினைக்கும்போது, சத்குருவின் அருளால் இதுவரையில் என் குடும்பம் எனக்கு அளித்த ஆதரவை நினைக்கும்போது, நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். ஒரு சிறந்த காரணத்திற்காக வேலை செய்வதில் சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதித்து எனக்கு முழு ஆதரவை தெரிவித்த என் மனைவி, என்னை புதிய மனிதனாக பார்க்க விரும்புகிறாள்!” - விநாயக் கெய்க்வாட், 37, புனே, கட்டுரை எழுத்தாளர்

“நான் எனது குடும்பத்தினருடன், குறிப்பாக எனது ஒன்றரை வயது மகளோடு மிகவும் பற்றோடு இருந்தேன். எனவே அவர்களை ஏழு மாதங்கள் விட்டுச் செல்வது எனக்கு கடினமாக இருந்தது. என் குடும்பத்தினரிடமிருந்து சில எதிர்ப்பை எதிர்கொண்டேன். ஆனால், அவர்கள் நான் சமுதாயத்திற்காக உழைக்க முடிவெடுத்து இருக்கும் என் உறுதியை பார்த்ததும், எனக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, என் மனைவி பெரிதும் உறுதுணையாக இருந்தார்.” - விஷால் கபாடியா, 32, குஜராத், ஜவுளி தொழிலதிபர் 

சாதனா - உள்நிலையில் ஆழமான நிறைவை சுவைத்தல்

isha-blog-article-life-in-sadhanapada-fulfillment-beyond-survival-rat-race-meditation-3

"எனக்குள் இருக்கும் எதிர்ப்பின் அடுக்குகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பற்றி நான் அறியாமலே சாதனா பாதைக்கு வந்தேன். இதுவரை எனக்கு நல்ல உணர்வையும் பல மட்டங்களில் வளர்ச்சியையும் அளித்து வருகிறது. எனக்குத் தெரிந்ததாக நான் நினைத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடிபட்டுவிட்டன, இதனால் ஒவ்வொரு சூழ்நிலையின் யதார்த்தத்தையும் தெளிவாகக் காண முடிகிறது. அதோடு வாழவும் வேலை செய்யவும் கற்றுக்கொண்டேன்.

எல்லா வகையான மக்களுடனும் இருப்பது, பணியாற்றுவது, என் மனதை ஒழுங்கமைக்கக் கற்றுக்கொள்வது, பிறர் மனங்களுடன் ஒத்திசைவில் இருப்பது, என் தினசரி வேலைகளை நிர்வாகிப்பது, எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தீர்மானிப்பது மற்றும் பல எதிர்பாராத சூழ்நிலைகளுடன், எல்லாவற்றையும் கடந்து செல்வதற்கான தேர்வு எனக்கு உள்ளது என்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அல்லது துக்கத்துடன் ஆரம்பிக்கும் வாய்ப்பும் என்னிடமே உள்ளதாக உணர்கிறேன்.” – நத்தலி லோலோ மினங்கா, 34, கனடா, ஐடி நிபுணர்

“ஒவ்வொரு நாளும் என்னுள் புதைந்திருந்த புதிய பரிமாணத்தை உணர முடிகிறது. வெளியே சூழ்நிலை என்னவாக இருந்தாலும், என்னுள் ஒரு சமநிலை இருப்பதை காணமுடிகிறது. ஏதோ நினைவுகள் என்னை தொந்தரவு செய்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என்னை யாரும் எளிதில் அணுகக்கூடியவராக உள்ளேன். இதே விதமான சுதந்திரம் என்னோடு நிலைத்திருக்க விரும்புகிறேன்.” – தனு பிரியா, 31, டெல்லி, வணிக ஆலோசகர்

"இந்த பயணத்தில் ஒரு குழந்தைப் பருவத்தில் இருக்கும் தியான அன்பரைப் போல நான் கவனித்துக் கொள்ளப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு அடியிலும், அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து, எங்கள் கண்ணீரைத் துடைத்து, எங்கள் அச்சங்களை அமைதிப்படுத்துகிறார்கள். மெதுவாக இன்னும் உறுதியாக நாங்கள் பாதையில் நிலைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்தப் பாதையில் ஒரே குறிக்கோளுடன் நான் பெரும்பாலான நேரங்களில் இணைந்திருந்தாலும், சில நேரங்களில் எனக்கு கொஞ்சம் எதிர்ப்பு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். நான் எப்போதும் எனது அச்சமிக்க ஒரு பக்கத்தை சமாளிக்க வேண்டியிருந்தது. ஆசிரமத்திற்கு வெளியே என்னை நான் எப்படி பார்க்கிறேன் என்ற பார்வையை ஒதுக்கி வைப்பதும், இந்த நேரத்தில் தேவையானதைச் செய்வது என்பதும், நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய சவாலாகவும் பாடமாகவும் இருந்தது.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நிறைவை கற்றுக்கொடுக்கும் பள்ளி. சமநிலை மற்றும் தெளிவு ஆகியவைதான் இந்த பாதையின் முக்கிய கூறுகள், ஆனால் இந்த முழு பயணத்தின் முடிவில் நீங்கள் ஒரு புதிய மனிதராக மாறக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களுள் அடிப்படை சுக்குநூறாகி, புதிய பரிணாமத்தை கண்டுபிடிப்பீர்கள்.” – ரஷ்மி விஜயகுமார், 43, மும்பை, ஐ.டி நிபுணர்

சேவா - உங்களை வழங்குவதன் மூலம் நீங்கள் தானாக வளரும் ஒரு செயல்முறை

isha-blog-article-life-in-sadhanapada-fulfillment-beyond-survival-rat-race-seva

"சாதனா பாதை என்னை எதிலும் முழுமையாக ஈடுபடுத்தக்கூடிய ஒரு இடத்தை வழங்கியுள்ளது. இப்போது, நான் மற்றவர்களின் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்கிறேன் என்று உணரும்போது, எனது உற்பத்தித்திறன் சிரமமின்றி அதிகரித்து வருகிறது. இதை நான் எப்போதும் என் மனதில் வைத்திருக்கிறேன். இது மிகவும் சுறுசுறுப்பாகவும், இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க எனக்கு உதவுகிறது.” – ஐயப்பன் ஏ, 38, சென்னை, ஐடி நிபுணர்

"இதற்காக என் நூறு சதவிகிதத்தை நான் தருகிறேன் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது. விருந்தினர் பராமரிப்புத் துறையில், விருந்தினர்களுக்கு வழிகாட்டுவதை நான் உற்சாகத்துடன் செய்தேன். முன்பின் தெரியாத அந்நியருக்கும் அல்லது ஒரு குழுவிற்கு சில நேரங்களில் நமஸ்காரம் செய்வது - என்னை அறியாமலே நிகழ்கிறது. இந்த இடம்தான் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றதைப் பெற உங்களை மிகவும் விருப்பமாகவும் திறந்ததாகவும் மாற்றும் என்று நினைக்கிறேன்!” – ரூபாலி சவுத்ரி, 31, டெல்லி

isha-blog-article-life-in-sadhanapada-fulfillment-beyond-survival-rat-race-work-2

"இங்கே, நான் ஈ-மீடியா மற்றும் மின்னஞ்சல் தொடர்பு குழுவில் சேவை செய்தேன். ஈஷாவின் நற்செயல்களை மக்களிடம் எடுத்துசெல்ல எனக்கு இது ஒரு மகத்தான வாய்ப்பாக அமைந்தது. காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு நிதி திரட்டும் பிரச்சாரத்தின் மூலம், இறந்து கொண்டிருக்கும் நம் நதிகளின் நிலைமையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, எனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் இதில் பங்களிக்கச் செய்தது எனக்கு மிகவும் நிறைவாக உள்ளது.

இது தவிர, நான் இங்கு செய்த ஒவ்வொரு சேவையையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தேன். இங்கே லிங்க சேவாவில் தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை காண வரும் பக்தர்கள் தங்களையே மறந்து போவதை காணமுடிந்தது. அன்னசேவா - சக சாதனா பாதர்களுக்கு உணவு பரிமாறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி; மற்ற மேல்நிலை வகுப்புகளில் தன்னார்வத்தொண்டு செய்யும்போது, என் கண்முன்னே மக்களிடம் ஓர் மாற்றம் நிகழ்வதை காண முடிந்தது. இவை அனைத்தும் மிகவும் உன்னதமான அனுபவம். நீங்கள் மற்றவரை வழிநடத்தவோ அல்லது ஊக்கப்படுத்தவோ உங்களையே உதாரணமாக மாற்றிக்கொள்வதுதான் ஒரே வழி என்று நான் நினைக்கிறேன். நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகும், என்னுள் ஏற்படும் மாற்றம் என் எண்ணங்கள், என் செயல்கள், நான் சொல்லும் வார்த்தைகள், நான் இருக்கும் விதத்தின் மூலம் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன். நான் இங்கு பெற்ற விலைமதிப்பற்ற அனுபவத்தை சமூகத்திற்கு திருப்பித் தருவேன்.” – ரஷ்மி விஜயகுமார், 43, மும்பை, ஐ.டி நிபுணர்

“நான் ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தூங்குவேன், இருந்தும் சோர்வாகவே உணர்வேன். ஆனால் இப்போது, நான்கு அல்லது ஐந்து மணி நேரமே போதுமானதாக இருக்கிறது. இந்தப் புத்துணர்ச்சியை இதுவரையில் நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. திடீரென்று ஒரு நாள் முப்பது மணிநேரமாக இருப்பதைப் போல உணர்கிறது!” – தெலுங்கானாவின் விஸ்வா ராஜ் அகுலா, 33, சுற்றுச்சூழல் பொறியாளர்

ஆசிரியரின் குறிப்பு: சாதனா பாதைக்கு பதிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது திறக்கப்பட்டுள்ளது.