பயணத்தின் முன்பாகங்கள் ..

இன்று முதல் தமிழ்நாட்டு பாகம் ஆரம்பம்! தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் இருவேறு ஊர்களில் சத்குரு கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இன்று காலை ஓசூரிலும், மாலை தருமபுரியிலும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்பாகத்திற்கு புதிதாக பங்கேற்பாளர்களும், பைக்கர்களும் சேர்ந்துள்ளார்கள்.

நேற்றிரவு பெங்களூருவில் புது பங்கேற்பாளர்கள் வந்து சேர்ந்தனர். இன்று காலை 6:30 மணிக்கு குருபூஜையுடன் அவர்களின் நாளும் பயணமும் ஆரம்பம்

day9-tb-cc-pic1-4

காலை 7:45 மணியளவில் பெங்களூரு தன்னார்வத் தொண்டர்கள் இவ்விடத்தில் குழுமத் துவங்கிவிட்டனர். சத்குரு அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வருகிறார். கர்நாடகத்தில் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துமுடிந்ததற்கு நன்றிதெரிவித்து, தன்னார்வத் தொண்டர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இங்கிருந்து இரண்டாம் கட்டப்பயணம் துவங்கும்.

day9-tb-cc-pic1-5

நடிகர் வரலட்சுமி சரத்குமார் அவர்களுடன் காவேரி கூக்குரல் பற்றி சத்குரு உரையாடுகிறார்.

day9-tb-cc-pic2-1

வரலட்சுமி: "தமிழ்நாட்டிற்கு காவேரி கூக்குரல் ஏன் அவசியம்?" என்ற கேள்விக்கு, காவேரி கூக்குரல் நதிக்கு புத்துயிரூட்டுவது பற்றி மட்டுமல்ல. காவேரி இத்தனை காலமாய் வளமளித்துக் காத்துவந்த இம்முழு வடிநிலத்தையும் புத்துயிரூட்டுவது பற்றி என்று பதிலளித்தார் சத்குரு.

8:15 மணியளவில் தன்னார்வத் தொண்டர்களை சந்திக்க சத்குரு வருகிறார்

day9-tb-cc-pic1-6

 

COP14 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்த விவரங்களை தன்னார்வத் தொண்டர்களுடன் பகிர்ந்துவிட்டு. "எங்களுடன் தொடர்ந்து இருங்கள். இதில் நீங்கள் என்ன செயல் செய்கிறீர்கள் என்பது பொருட்டல்ல, எதை செய்தாலும் உங்கள் முழு திறனிற்கு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். அதுதான் முக்கியம்" என்றார்.

day9-tb-cc-pic1-7

பயணத்தைத் துவங்கத் தயாராக இருக்கும் புது பங்கேற்பாளர்களை சத்குரு சந்திக்கிறார்.

8:30 மணியளவில் அனைவரும் இங்கிருந்து புறப்பட்டு ஓசூர் நோக்கி பயணிக்கிறார்கள்.

day9-tb-cc-pic1-9

day9-tb-cc-pic1-10

day9-tb-cc-pic1-8

சத்குருவை வழியனுப்ப வழியில் அணிவகுத்திருக்கும் கர்நாடக தன்னார்வத் தொண்டர்கள்

day9-tb-cc-pic2-4

day9-tb-cc-pic2-5

day9-tb-cc-pic2-2

day9-tb-cc-pic2-3

 

ஓசூரில் சத்குருவை வரவேற்கும் பேனர்

day9-tb-cc-pic1-3

 

ஓசூரில் விழா நடைபெறும் இடம். பொதுமக்கள் வரத்துவங்கிவிட்டார்கள்

day9-tb-cc-pic1-1

day9-tb-cc-pic1-2

 

சத்குருவை வரவேற்க ஏற்பாடுகள்

day9-tb-cc-pic2-7

day9-tb-cc-pic2-8

day9-tb-cc-pic2-9

day9-tb-cc-pic2-6

 

9:05 மணியளவில் சத்குரு ஓசூர் வந்துவிட்டார். பூர்ண கும்ப வரவேற்பிற்குப்பின் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு சத்குரு உள்ளே வருகிறார்.

day9-tb-cc-pic2-10

day9-tb-cc-pic2-11

day9-tb-cc-pic9-3

day9-tb-cc-pic4-11

 

சிறப்பு விருந்தினர்களை வரவேற்று சத்குருவும் அவர்களோடு அமர்ந்திருக்கிறார்.

அதியமான் கல்லூரி நிறுவனரும், முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.தம்பிதுரை அவர்கள், கிருஷ்ணகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லகுமார் அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் s.A.சத்யா அவர்கள், பருகூர் சட்டமன்ற உறுப்பினர் CV.ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள், பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் முருகானந்தம் அவர்கள், ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.A. மனோகரன் அவர்கள்.

நடிகர் நித்யா மேனன் அவர்களும் வந்திருக்கிறார். இன்று நாள் முழுவதும் நம் குழுவுடன் அவர் பயணிக்க உள்ளார். 

சம்ஸ்கிருதி பிள்ளைகளின் பரதநாட்டியம் மற்றும் களறி நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு மகிழ்ந்தார்கள்.

day9-tb-cc-pic4-1day9-tb-cc-pic4-3

 

பாடகர் கார்த்திக் அவர்களின் இசைநிகழ்ச்சியில் அரங்கமே மகிழ்ச்சியில் துள்ளியது. சத்குருவும் அவரோடு சேர்ந்து அலை அலை பாடல் பாடினார்

day9-tb-cc-pic4-4

day9-tb-cc-pic4-2

 

மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்திருக்கிறார். முன்னுரை வழங்குபோது "இது போர் குரல்லல்ல, தாக்கும் குரலல்ல, ஆக்கும் குரல்!" என்றும் "இது ஒரு முப்பரிமாணத் திட்டம். மரம் நடுவதால் மழை வரும், மண் வளம் பெறும், விவசாயி வளம் பெருகும்" என்றும் கூறி இது கண்முன் விரியும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றார்.

மேடையில் சிறப்பு விருந்தினர்கள்

day9-tb-cc-pic4-12

 

12-வருடமாக வேளாண்காடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி செந்தில்குமார் தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்

day9-tb-cc-pic4-6

முதலாவதாகப் பேசிய விவசாயி, கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த திரு.செந்தில்குமார் அவர்கள். 12 வருடங்களுக்கு முன் ஈஷாவின் வழிகாட்டுதலில் வேளாண்காடு வளர்ப்பில் ஈடுபட்டவர் இவர். முதலில் வயலோரம் மட்டுமே மரம் வைத்திருந்தார். மரத்தினின்று உதிர்ந்த இலை தழைகளால் வயலின் வளம் கூடுவதைப் பார்த்ததும் வயலிலும் ஆங்காங்கே மரம் நட்டார். இப்போது வயலில் மரம், மரத்தினடுவே மஞ்சள், கரும்பு, வாழை போன்று பயிரிட்டுள்ளார். 2013ல் வறட்சி வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் விடப்பட்ட போது இவரது பயிர்கள் மட்டும் பிழைத்தன. 2016ல் கடும் மழையால் மற்ற வயல்களில் தண்ணீர் நிறைந்து நின்றது. இவரது வயலில் மட்டும் தண்ணீர் இஞ்சப்பட்டு பயிர்கள் நன்றாய் விளைந்தன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மண்ணின் வளம் நன்றாக இருப்பதால் விளைச்சலும் விளைச்சலின் தரமும் அமோகமாக உள்ளது. சந்தையில் மஞ்சள் ₹7500 விற்கப்பட்டால் இவரது மஞ்சளுக்கு ₹12,000 வரை கிடைக்கிறது. அதன் தரம் அவ்வாறு உள்ளது. இவரைப் பார்த்து சுற்றியுள்ள விவசாயிகளும் இதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இது போதாது. எல்லா விவசாயிகளும் பயன்பெற வேண்டும். அதை செய்வதற்கு சத்குரு அவர்கள் முவந்திருக்கிறார்கள். இனி விவசாயிகளின் கஷ்டம் மறைந்துபோகும். சத்குருவிற்கு நன்றி!

ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.A. மனோகரன் அவர்கள், அவருடைய சங்கத்தின் சார்பாக 1000 மரங்களுக்கான காசோலையை சத்குருவிடம் வழங்கினார்.

day9-tb-cc-pic4-7

 பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் முருகானந்தம் அவர்கள்

day9-tb-cc-pic4-8

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள்

day9-tb-cc-pic4-9

ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் s.A.சத்யா அவர்கள்:

day9-tb-cc-pic4-10

சிறு வயதில் நான் தண்ணீர் குடித்து வளர்ந்த ஏரி இன்று காய்ந்துபோய் உள்ளது. தண்ணீர் இன்றி எப்படி வாழ்வது? உணவு கூட நல்ல உணவு கிடைப்பதில்லை. ரசாயனங்கள் கலந்து, ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. குடிக்க நீர் வேண்டும். ஆரோக்கியமான உணவு வேண்டும். இது அடிப்படை. இதற்குப்பின் தான் எல்லாம். ஜாதி, மதம், கட்சி எல்லாவற்றையும் தாண்டி இதற்காக செயல்படுவோம். எங்களால் முடிந்த எல்லா வகையிலும் இதற்கு உதவி செய்வோம்.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள்:

இவர் மக்களின் உதவியோடு 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சார்பாக ₹5,00,000 காசோலை வழங்கினார்.

கிருஷ்ணகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லகுமார் அவர்கள்:

day9-tb-cc-pic5-1

இதுவொரு நல்ல முயற்சி. சத்குரு ஒருவரின் வார்த்தையால் 242 கோடி மரங்கள் வரமுடியும்! அவர் அந்தளவிற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதியமான் கல்லூரி நிறுவனரும், முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.தம்பிதுரை அவர்கள்:

day9-tb-cc-pic5-2

காவேரி நம் உயிர்நாடி. அதன் உரிமையைப் பெற பல போராட்டங்கள் நடந்துள்ளதை நாம் மறக்கமுடியாது. இதற்காக நாங்கள் 23 நாட்கள் நாடாளுமன்ற அவையை நடக்கவிடாமல் போராட்டம் செய்தோம். கர்நாடகம் அதில் இன்னொரு அணை கட்டுவதாக அறிவித்தபோது மீண்டும் 23 நாட்கள் நாடாளுமன்ற அவையை நடக்கவிடாமல் போராட்டம் செய்தோம். இப்படி காவேரியின் உரிமையைப்பெற நாங்கள் போர்க்குரல் உயர்த்தினோம். ஆனால் சத்குரு மிக அழகாக போர்க்குரல் வேண்டாம் கூக்குரலுக்கு பதிலளியுங்கள், மரம் நடுங்கள் என்கிறார். இது ஆக்கக்குரல். தீர்வு.

இல்லாத நீருக்கும் சண்டை போடுவதைவிட, அதிகமாக நீர் வர ஆக்கப்பூர்வமாக செயல் செய்வது. மரங்கள் இருந்தால், காடுகள் இருந்தால் தண்ணீர் கிடைக்கும். காவேரியில் நீர் நிறைந்து ஓடும். அரசாங்களின் ஒத்துழைப்பு பெற்றுவிட்டோம். இனி மக்களின் ஈடுபாடுதான் தேவை. அதற்காகத்தான் சத்குரு ஊர் ஊராகப் பயணிக்கிறார். இதற்கு நாங்கள் ஒத்துழைப்போம். நம் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காவேரி கூக்குரல். அது வெற்றியடைய நாம் அனைவரும் கைகொடுப்போம்.

சத்குரு:

day9-tb-cc-pic5-4

இது இன்னோரு மரம் வைக்கும் இயக்கமல்ல. இளைஞர்கள் இதை கவனிக்க வேண்டும். நாட்டில் இருக்கும் பிரச்சினை என்ன? அதற்கு தீர்வு என்ன? அதில் நம் பங்கு என்ன? என்று கவனிக்கனும். இதுவரை நம் நாட்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 70-வருட சுதந்திர இந்தியாவில் இதுவரை 4 போர் நடந்துள்ளது. அதில் நடந்துள்ள உயிர்சேதம் இருநாடுகளைச் சேர்த்தாலும் 3 லட்சம் இல்லை!


இதுல காவேரி நிலத்துல மட்டும் 47,000 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். ஆறு, ஏரி, கிணறு ஆகியவை நீருக்கு மூலமில்லை. மழை மட்டும்தான் மூலம். இதுவரை வருடாவருடம் ஒரேயளவு மழைதான் பெய்திருக்கிறது. ஆனால் இப்போது அந்த நீர் பூமிக்குள் இறங்காமல் ஓடியிருக்கிறது. அதுதான் பிரச்சினை.


இப்போது இந்தியாவில் எங்கெங்கெல்லாம் வெள்ளம் வந்திருக்கிறது என்று நாட்டின் வரைபடத்தில் குறியிடுங்கள். அடுத்த 4-5 மாதங்களில் அங்கு கட்டாயம் வறட்சி வரும். 242 கோடி மரங்கள் நட்டால் 12 ஆண்டுகளில் காவேரியில் நீர் தொடர்ந்து ஓடும்.

இது வெற்றியடையுமா? என்று கேட்கிறார்கள். இது நிச்சயம் வெற்றியடையும். அதற்குத் தேவையானதை எல்லாம் செய்துவிட்டோம். எவ்வளவு வேகமாக நடக்கும் என்பது மட்டும்தான் கேள்வி. மைசூர் ராஜமாதா 3 ஆண்டுகளில் இதற்குத் தேவையானதை கர்நாடக மக்கள் செய்துவிட மாட்டீர்களா? என்று கேட்டார். நீங்கள் தமிழ்மக்கள்... இன்னும் அதிக உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் தானே?

ஆதரவு தெரிவிக்கும் மக்கள்

day9-tb-cc-pic5-3

பைக் பயணம் தொடர்கிறது. அடுத்த பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெறவுள்ளது. புது பைக்கர்கள் குழுவுடன் பாடகர் கார்த்திக் அவர்களும் பைக் பயணத்தில் பங்கெடுக்கிறார்.

day9-tb-cc-pic5-5

day9-tb-cc-pic5-7

12:30 மணியளவில் காவேரிபட்டிணத்தில் பவித்ரன் ஏசெப்டிக் பழப் பொருட்கள் தொழிற்சாலையை (அழுகலைத் தவிர்த்து குளிர்பெட்டி இன்றி உணவை பதப்படுத்தும் முறை) சத்குரு பார்வையிட்டு, வேளாண்காடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கிறார். இங்கிருக்கும் விவசாயிகள் மாம்பழ பண்ணைகள் வைத்திருக்கிறார்கள். இதுதவிர்த்து, உழுந்து, கொள்ளு, காராமணி போன்ற குறைந்த அளவு நீர் தேவைப்படும் பயிர்களை வேளாண்காடு வளர்ப்பு மூலம் வளர்க்கிறார்கள்.

day9-tb-cc-pic6-2

day9-tb-cc-pic6-4

day9-tb-cc-pic8-14

day9-tb-cc-pic8-15

இந்த தொழிற்சாலையில் மாம்பழம், கொய்யா, வாழைப்பழம், கிரேப்ஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்றவற்றின் சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது. இதுபோல் 6 தொழிற்சாலைகளை நடத்தி, இதுவரை 3,000 விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பிற்கு மாற இவர்கள் வழி செய்திருக்கிறார்கள். வளத்திற்கு அடையாளமான பொன்னாடையும், எலுமிச்சம்பழமும் சத்குருவிற்கு வழங்கக் காத்திருக்கிறார்கள்.

day9-tb-cc-pic6-1

day9-tb-cc-pic6-3

day9-tb-cc-pic7-10day9-tb-cc-pic7-11

 

வழியில் மாரவாடி அருகே சத்குருவைக் காண கூடியிருக்கும் பொதுமக்கள்

Day11-changed-1

 

தருமபுரியில் நுழையும் இடத்தில்

day9-tb-cc-pic7-12

day9-tb-cc-pic7-2

 

Day11-changed-2

 

மதியம் 1:40 மணியளவில் தருமபுரி விஜய் மில்லேனியம் பள்ளிக்கு வருகிறார். அங்கு சத்குரு அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்

day9-tb-cc-pic7-6

day9-tb-cc-pic7-5

day9-tb-cc-pic7-8

day9-tb-cc-pic7-9

day9-tb-cc-pic7-3

day9-tb-cc-pic7-4

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sadhguru gets a grand and traditional welcome at Dharmapuri. #CauveryCalling #CauveryDiaries

A post shared by Isha Foundation (@isha.foundation) on

day9-tb-cc-pic8-1

அடுத்தது பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில்…

day9-tb-cc-pic8-13day9-tb-cc-pic8-6

 

இங்கு குழுமியிருக்கும் மக்கள்

day9-tb-cc-pic8-10day9-tb-cc-pic8-12

day9-tb-cc-pic8-2

 

ஈஷா சம்ஸ்கிருதி பிள்ளைகளின் பரதநாட்டியம். விருந்தினர்களோடு சத்குருவும் அமர்ந்து காண்கிறார்.

day9-tb-cc-pic8-11

day9-tb-cc-pic8-9

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொருளாளர் திரு. S.A.சின்னப்பா அவர்கள்

day9-tb-cc-pic8-7

காடுகள் அழிக்கப்பட்டதால் நலிவடைந்த காவேரி நம்மை வெறுமனே அழைக்கவில்லை, அழுகிறாள். தேவையே இன்றி இரசாயன உரம் பயன்படுத்தி நிலத்தின் வளத்தை அழித்துவிட்டோம். மரங்கள் வளர்த்தால், இரசாயன உரம் தேவைப்படாது. இரசாயன உரம் பயன்படுத்தவில்லை என்றால் செலவு குறைவு, கடன் தேவைப்படாது, மண்ணின் வளமும் பெருகும். மரங்கள்தான் நம் எதிர்காலம். நம் பொருளாதாரம்.

எங்கள் இயக்கம் உங்களுடன் சேர்ந்து செயல்படும். இது உங்களுக்காக மட்டுமல்ல. எங்களுக்கும் இதுதான் நலம். மக்களுக்கும் இதுதான் நலம். விவசாயியின் சார்பாக ஒரு மரக்கன்றுக்கு ₹8 என்பதை நீங்கள் தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும். பரிசீலியுங்கள் ஐயா.
 

சத்குரு:

day9-tb-cc-pic8-3

விவசாயி ₹8 தரவேண்டி இருப்பதை விலக்குவது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 1 மரக்கன்றை உருவாக்குவதற்கும் உழைப்பு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல. இதுவரை 112 நாடுகளில் இருந்து மரக்கன்றுகளுக்கு நிதி வழங்கியிருக்கிறார்கள்.  வேறெங்கோ வாழ்கிறவர்கள் நாம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் செலவை விடுத்து நமக்கு நிதி கொடுக்கிறார்கள் என்றால் அது வீணாகக்கூடாது. இந்தவொரு உறுதி, அதாவது பெற்றுக்கொள்ளும் மரக்கன்றை வீணாக்காமல் நிச்சயம் பயிரிட்டு வளர்ப்போம் என்ற அந்தவொரு உறுதி நீங்கள் கொடுத்தால் இந்த ₹8ஐ விலக்குவதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

  • நிலத்தின் உயிர்மச்சத்து குறைந்தது 1% அதிகரித்தால், 1 ஏக்கர் நிலத்திற்கு 60,000 லிட்டர் தண்ணி தக்கவைத்துக் கொள்ளும் திறன் இருக்கும்.
  • தமிழ் மண் விசேஷமானது. ஒரு கை மண்ணில், 10,000-50,000 விதமான நுண்ணுயிர்கள் உள்ளன. வேறு எந்தப் பகுதியிலும் இதுபோல் பார்க்க முடியாது. காரணம் தெரியாது. ஆனால் இது நிஜம். ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்துள்ளன.
  • தண்ணீர் பிரச்சினைக்கு மரம் நடுவதுதான் தீர்வென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் வேறு யாரோ செய்வார்கள் என்று ஒதுங்கி நிற்கிறார்கள். நாமும் காத்திருப்போமா? செயலில் இறங்குவோமா? 12 ஆண்டுகள் உறுதியாக இருப்பீர்களா?
  • யாரும் காவேரி பிரச்சினை என்று பேசக்கூடாது. காவேரி தாயா? பிரச்சினையா?
  • இனி பிறக்கற பெண்குழந்தைகளுக்கு எல்லாம் "காவேரி" என்று பெயர் சூட்டுங்கள். "காவேரி", "காவேரி" என்று கூப்பிடும்போது தொடர்ந்து நம் நினைவில் இருப்பாள் காவேரி.

 

day9-tb-cc-pic8-8

 

தருமபுரி நிகழ்ச்சியின் வீடியோ:

 

 

இன்று நம்மோடு பயணிக்கும் நித்யா மேனன் அவர்கள் பகிர்ந்ததாவது:

எனக்கு இயற்கையும் குறிப்பாக மரங்களும் மிகவும் பிடிக்கும். என் இளவயதில் வெட்டப்பட்ட ஒரு மரத்தை பார்த்து அந்த வலி தாங்காமல் நான் அழுதேன். அதுமட்டுமல்ல நான் காவேரித் தண்ணியைத்தான் குடித்து வளர்ந்தேன். காவேரி இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. காவேரியைக் காக்கும் இந்த இயக்கத்தை துவக்கியதற்கு சத்குருவிற்கு நான் நன்றி கூறுகிறேன். இத்தனை பேர் பைக்கில் அதுவும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாக செல்வது முதல்முறை. நன்றாக உள்ளது. (பெண் பைக்கர் ஒருவரோடு நித்யா அவர்கள் பைக்கில் வருகிறார்)

day9-tb-cc-pic8-4day9-tb-cc-pic8-5

 

4:15 மணியளவில் அடுத்தகட்ட வேலைகள், முக்கியமான செய்தித் தொடர்புகளை அவசரமாக வழியிலேயே முடித்துக் கொண்டு மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்

day9-tb-cc-pic9-2

day9-tb-cc-pic9-4

காத்திருக்கும்போது மேட்டூரில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வந்தது. பந்தோபஸ்துக்கு வந்திருந்த காவலர்களின் உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்கிறோம்.

ஒருவர்: "மேட்டூரில் கனமழை என்கிறார்கள். அப்படியென்றால் வழியில் வேறொரு இடத்தில் நிற்பாரோ?" உடனே அடுத்தவர்: "நிச்சயம் நிற்கமாட்டார். தொடர்ந்து போய்க் கொண்டிருப்பார்". மூன்றாமவர்: "அவர் பயணிப்பதே மழைக்காகத்தான். அவராவது நிற்பதாவது!"

 

"காவேரித் தாயே!" சத்குரு எழுதிய பாடல். இப்பாடலை கன்னடத்தில் கன்னடப் பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்கள் பாடினார்கள்

 

கன்னடம்:

 

பயணம் தொடர்கிறது. பாலயம்புதூர் டோல் அருகே சில மக்கள் அவருக்காக காத்திருந்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறார்கள்

day9-tb-cc-pic9-5

day9-tb-cc-pic9-6

மேட்டூர் செல்லும் வழியில் மழை பெய்யத் துவங்கிவிட்டது. ஆங்காங்கே சத்குருவை வரவேற்க கூடியிருக்கும் மக்கள்

வழியில் வள்ளரடிவாளையம் நடுநிலைப்பள்ளி குழந்தைகள் மரக்கன்றுடன் நிற்க அவர்களை சந்திக்க சில நிமிடங்கள் நிற்கிறார்.

day9-tb-cc-pic9-8

 

5:30 மணியளவில் மேட்டூர் செல்லும் வழியில் குஞ்சாடியூர் கிராம மக்கள் 42 முளைப்பாறியும் 42 பூர்ணகும்பங்களும் அர்ப்பணித்து சத்குருவை வரவேற்றார்கள்

day9-tb-cc-pic9-7

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sadhguru rides in... . . #CauveryCalling #CauveryDiaries #Sadhguru #TamilNadu #Welcome

A post shared by Sadhguru.Cauvery Calling (@sadhguru) on

 

6:05 மணிக்கு மேட்டூர் அணை அருகில் இருந்து சத்குரு பேசுகிறார்

 

திறந்துவிடப்பட்டிருக்கும் மேட்டூர் அணை


 

6:15 மணிக்கு களத்தூர் வழியாக இரவு தங்கவிருக்கும் இடத்திற்குப் பயணிக்கிறார்கள்

day9-tb-cc-pic9-1

 

மேட்டூர் காம்ப்சைட் நோக்கி செல்லும் நம் பைக்கர்கள் குழு. வழிநடத்திச் செல்வது சத்குரு அவர்கள்.

Day11-Changed-5

 

சானக்யா டிவியின் நிறுவனரும் நிர்வாக அதிகாரியுமான மற்றும் வேந்தர் டிவியின் நிர்வாக அதிகாரியான திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுடன் பங்கேற்பாளர்களின் முன்னிலையில் சத்குரு அவர்கள் உரையாடுகிறார். அதன்பின் பங்கேற்பாளர்களுடன் சத்சங்கம் நிகழ்ந்தது.

Day11-Changed-6

வெளியில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. டென்ட்டிற்குள் இருக்கும் இடத்திற்குள் மிக நெருக்கமாக ஒண்டிக்கொண்டோம். பாடகர் கார்த்திக் அவர்கள் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு இணங்க வெவ்வேறு பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக பயணத்தில் இணைந்ததால், மாற்று உடை கூட இல்லாது தங்குமிடத்திற்கு வரும்போது தொப்பலாக நனைந்திருந்தாலும், "காவேரி கூக்குரல் நான் கேட்கக் காத்திருந்த அழைப்பாக உள்ளது. செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக உள்ளது. இந்தப் பயணம் எனக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகிறது" என்றார்.

day9-tb-cc-pic9-10.

day9-tb-cc-pic9-11

இடியுடன் கூடிய மழையில் நனைந்து, சுடச்சுட அடுப்பில் இருந்து கொடுக்கப்பட்ட தோசையை உண்டு, சத்குருவுடன் சத்சங்கத்தில் திளைத்து, இரவு மழையின் சாரலைக் கேட்டுக் கொண்டே தூங்கிப்போனோம்.

நாள் 9 நிகழ்வுகளின் தொகுப்பு

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்